பொதுவாக மந்திரங்கள்
என்று சொன்னால் அது குறித்த ஒலிக்கோர்வைகளில் எழுத்துக்கள் ஒரு மாலை போல்
கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதை சமஸ்க்ருதத்தில் சந்தஸ் என்று சொல்லுவார்கள்.
தமிழில் சந்தம் என்று சொல்லுவோம்!
பிறகு அந்த மந்திரம் மனதை எதை
நோக்கி செலுத்துகிறது என்ற இலக்கு அந்த மந்திரத்திற்குரிய தேவதையாக அந்த
மந்திரத்திற்கு இருக்கும்.
அதை உணர்ந்து எமக்கு சந்தஸில்
அடைத்து சொற்கோர்வையாக தந்த ரிஷி இருப்பார்!
பிறகு அந்த மந்திரத்தின் பயன் என்ன என்பது இருக்கும்!
இவற்றை ஒரு மந்திரத்தின் ரிஷி, சந்தஸ், தேவதை, பலன் என்று கூறுவார்கள்; உதாரணமாக காய்த்ரி மந்திரம்,
விஸ்வாமித்ர ரிஷி
காயத்ரி சந்தஸ் -
மூன்று பதம், 24 எழுத்துக்கள்
சவிதா தேவதை -
புத்தியைத் தூண்டும் அந்தப்பேரோளி
பலன் - பாவ நிவர்த்தி,
புத்திப் பிரகாசம்
இந்த நான்கையும் எமது மனதில்
இருத்தி மந்திர ஜெபத்தைச் செய்தால் அது அந்த மூலசக்தியுடன் மனதை பரிவிற்கு
(resonance) உருவாக்கி எம்மில் அந்த மந்திரத்தின் சக்தி உருவாக்கும்! மந்திரத்தின்
பொருள் மனதிற்கு புரிந்தால் அந்த மந்திரத்தின் பண்புகள் சாதகனில் உருவாகும்.
இந்த அடிப்படையில் பஞ்சாக்கரத்
திருப்பதிகத்தை பலன் பெறுவதற்கு ஓதுவதற்குரிய முறையாக,
1) பஞ்சாட்சர மந்திர
ஜெபம் (பெற்ற உபதேசத்தின் படி அல்லது தூல பஞ்சாட்சரம் (ஓம் நமசிவாயா அல்லது சக்தி
பஞ்சாட்சரம் ஓம் ஹ்ரீம் நமசிவாய) 108/1008 ஜெபம் பதியாகிய சிவத்தை இருதயத்தில்
இருத்தி செய்துவிட்டு,
2) அந்த மந்திர
ஜெபத்தின் அனுபவத்துடன் மனதில் அந்தப்பதிகத்தின் நாயனாரை எண்ணி, எனக்கும் அவர்
பெற்ற அனுபவம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனையை அவரிற்கு செலுத்தி பதிகத்தை
பண்ணுடன் படிக்க வேண்டும். இப்படிப் படிக்கும்போது மனதின் ஆழத்தில் ஒவ்வொரு
பாடலினது பொருளும் உள்ளே ஆழ்மனமாகிய சித்தத்தில் விரிந்து எமக்கு அந்தப் பலன்கள்
கிடைப்பதை உருவகிக்க வேண்டும்.
உதாரணம் - பஞ்சாக்கரத்
திருப்பதிகத்தின் முதல் பாடல்;
துஞ்சலும் துஞ்சலி லாத
போழ்தினும்
நெஞ்சகம் நைந்து
நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த
வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ
ழுத்துமே
இந்தப்பாடலில் திருஞானசம்பந்தர்
தான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் நெஞ்செல்லாம் திருவைந்தெழுத்தை
நிரப்பி சாதனை செய்து வருகின்றேன், இந்தத் திருவைந்தெழுத்தின் மகிமை என்னவென்றால்
அற்ப ஆயுள் கொண்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவிடாமல் கூற்றுவனை உதைத்த பரமாகிய
சிவத்தின் ஆற்றலை எனக்குள் தருவது! ஆகவே இந்த திருவைந்தெழுத்தை செபிக்கும்
எனக்கும் அந்த அருட்சக்தி கிடைக்கிறது என்கிறார்!
இதை நாம் பாடும்போது எமக்கு அந்த
பலன் கிடைக்கவேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கி திருஞானசம்பந்தர் அளவிற்கு
விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் நெஞ்செல்லாம் திருவைந்தெழுத்தை நிரப்பி
பயிற்சி செய்யாவிட்டாலும் குறைந்தது 108 தடவையாவது தினசரி செபித்து வருகிறேன் என்ற
நம்பிக்கை எமது சித்தத்தில் இருக்க வேண்டும்.
ஆகவே பதிகங்களின் மூலம் பலன் பெற
வேண்டியவர்கள் தினசரி சிவபூஜை செய்து பஞ்சாட்சர ஜெபம் செய்வது சிறப்பு! அல்லது தூல
பஞ்சாட்சர ஜெபமாவது செய்து வந்தால் அவர்களுடைய ஆழ்மனம் அவற்றின் பொருளை அறியும்
போது அதீத நம்பிக்கைக்கொண்டு சக்தியை விழிப்பிக்கும்!
மேலே விளக்கியவற்றைத்தான் இன்று மேலை நாட்டவர்கள் power of subconscious mind, law of attraction என்றெல்லாம் கூவிக் கூவி branding செய்கிறார்கள்!
எம்மிடம் ஆழ்மனதை விழிப்பிக்கும் பதிகங்களும், சிவமாகிய பரம்பொருளின் ஆற்றலை ஈர்க்கும் (attraction) வழிகளும் ஆயிரமாண்டுகளாக இருக்கிறது. இவற்றைப் புரிந்து மதிப்புடன் செயற்படுத்துபவர்கள் அருகிவிட்டார்கள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.