நாஸ்ரடாமஸ் என்ற பெயர்
பெரிதும் உலகை பயமுறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பெயர்! உலகம் அழியப்போகிறது!
பேராபத்து நிகழப்போகிறது என்று youtube video க்கள் ஏராளம்! இப்படி ஒரு வீடியோ
அண்மையில் கண்ணில்பட, இதுவரை நாஸ்ரடாமஸின்
புத்தகம் எதையும் வாசிக்கவில்லை என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்றால் அந்த
காணொளி சகட்டு மேனிக்கு இனிவரும் காலம் இதை விட மோசம் என்று பயங்காட்டும் தொனியில்
இருந்ததை எனது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை!
ஆகவே நாஸ்ரடாமஸின் கணிப்புகள்
மீது தரமான - சரியான பார்வையைத் தரும் ஒரு மூல நூலை எடுத்துப் படித்தால் ஆச்சரியமான
தகவல்! நாஸ்ரடாமஸ் உலகை பயமுறுத்துவதற்காக இந்த எதிர்வுகூறல்களை எழுதவில்லை!
ஜோதிட விதிகளின்படி கிரகச் சேர்க்கையினால் பூமியின் நடப்பில் இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை தனது நான்கு அடிப் பாடல்களால் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்.
இதன் நோக்கம் நடக்கப்போகும் சந்தர்ப்பங்களை கணிக்க முடிந்தால் அவன் தனக்கு இருக்கும் இச்சாசக்தி மூலம் (free will) அந்த சூழலை மாற்றலாம் என்பதை அறிவிப்பதற்காகவே என்பதைக் கூறியுள்ளதாக அந்த நூல் குறிப்பிடுகிறது.
உதாரணமாக வாசலில் எண்ணை
கொட்டியிருக்கிறது என்பதை அந்த வாசலிற்கு வரமுன்னர் அறிவித்திருந்தால் எண்ணை
கொட்டிய இடத்தை அணுகும்போது மனிதன் கவனமாக, வழுக்காமல் கடக்க முடியும் என்ற
நிலைதான்!
ஜோதிட சாஸ்திரமும் இதற்காகத்தான்
உருவாக்கப்பட்டது!
Predictive astrology மூலம்
நாஸ்ரடாமஸ் கணித்ததில் இதுவரை 70% நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.