இன்றைய மானச யோக வித்யா வகுப்பில் ஒரு மாணவர் சித்தர்களின் பாடலிலிருந்து நாம் கற்கும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற அந்தக் கரணத்திற்கான விளக்கம் கீழ்க் குறித்த பாடலின் மூலம் விளக்கும்படி கேட்டிருந்தார்!
காலாங்கி நாதர் பாட்டு;
மூத்தெனென்ற பெரியோர்கள் அறிந்து கொள்வார்கள்
முன்னவனை முன்னிறுத்தி என் பேர் சொல்லி
சித்தம் வைத்துப் புத்திக் கொண்டு உத்துப்பாரு
சிவசிவா வசியசிவா வென்றே சொல்லி
நித்தமும் அஸ்தஞ் சித்திரையாஞ் சோதி
நீயறிவாய்
நீ சோதியை உன்னுள் அறிய வேண்டுமானால், முன்னவன் என்ற சிவனை நினைவில் நிறுத்தி, குருவாகிய என் நாமத்தைச் சொல்லி, சித்தத்தை ஏகாக்கிரமாக நிறுத்தி, மனதில் எழும் எண்ணங்களை புத்தியைக் கொண்டு கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு வருவாய்! அஸ்தமனமாகாத சோதியை நித்தமும் காண்பாய்! என்பது இதன் பொருள்!
இதன் சிறப்பமிசம் என்னவென்றால் இது எப்படி எமது அந்தக் கரணத்தை இறை சக்தியில் நிறுத்தி சித்தி பெறுவது என்ற சூத்திரத்தை - இரகசியத்தைச் சொல்லித்தருகிறது.
சித்தம் இறைவனில் ஒன்றியிருக்க வேண்டும்! அதேவேளை குருவின் நாமத்தினால் நாம் சிந்தையை நிறுத்த வேண்டும், இப்படிச் செய்யும் போது எமது சித்தத்தில் ஏற்கனவே இருக்கும் பதிவுகளின் படி சித்தம் விருத்திகளைக் கவனிக்கும் போது புத்தியைக் கொண்டு விழிப்புணர்வுடன் அவதானித்து அவற்றை நீக்கிக் கொண்டு மந்திர ஜெபம் செய்பவன் ஜோதி தரிசனம் என்ற சித்தியை அடைவான்!
இன்றைய உரையாடல் இந்தப் பாடலில் ஆழமான விளக்கமான தெய்வ ஞானம் பெறல் (intution development) போன்ற கோட்பாடுகளைக் கூறுகிறது என்ற விபரம் உரையாடப்பட்டது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.