{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
********************************************
காளியை உபாசிப்பவன் வீரனாக மாத்திரமே இருக்க முடியும்! அஷ்டபாசங்களுக்கு கட்டுப்பட்ட பசுவாக – விலங்காக இருக்க முடியாது! எதையும் எதிர்கொள்ளும் வீரம் இருக்க வேண்டும்! அதேவேளை அது ஆணவத்தினால் வந்த அறியாமை வீரமாக இருக்கக்கூடாது! அன்னையின் அருள் நம்முள் பாய்வதால்தான் நாம் அத்தகைய வீரத்தைப் பெறமுடியும் என்ற ஞானமும் இருக்க வேண்டும்.
கவிதையின் முதல் பகுதியில் தான் அத்தகைய வீரன் என்பதை அன்னைக்கு கூறிவிட்டு கடைசியில் இல்லை அம்மா, நான் இப்படியே போரிட்டுக்கொண்டிருக்க முடியாது; கருணை கூர்ந்து ஓய்வுதா என்றும் எல்லோரும் இன்பத்தை வேண்டும் என்று கேட்கும் போது நான் துன்பத்தை தா என்று கேட்கும் அற்புதம் உன்னை நான் என்னுள் கொண்டிருப்பதால் அல்லவா என்று அற்புதம் எனும் உணர்ச்சியைப் பாய்ச்சுகிறார்!
துன்பம் என்னைப் பயமுறுத்த முடியுமா?
*****************************
துன்பம் என்னைப் பயமுறுத்த முடியுமா? தாயே,
நான் இந்த உலகில் துன்பப்படட்டும்.
எனக்கு இன்னும் தேவையோ?
துன்பம் எனக்கு மேலாக ஓடட்டும்!
துன்பம் எனக்குப் பின்னால் ஓடட்டும்!
நான் அவற்றை என் தலையில் ஏந்தி நிமிர்ந்து நிற்பேன்!
அவற்றை தெருவில் இட்டு மிதிப்பேன்!
நான் ஒரு விஷப்புழு, விஷத்தில் செழித்து வளர்பவன்!
நான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வேன்!
பிரசாத் கூறுகிறேன்;
தாயே, என் சுமைகளை நீக்கு!
எனக்குச் சிறிது ஓய்வு அவசியம்!
அனைவரும் இன்பத்தைத் தா என வேண்டும் போது,
நான் துன்பத்தைத் தா என வேண்டுகிறேன்!
இது அற்புதமானது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.