சரஸ்வதியைத் துதிக்க அகத்தியர் பெருமானார் ஒரு ஸ்லோகத்தில் காமஸ்வரூபிணி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்!
காமம் என்ற சொல்லை பொதுப் புத்தியில் கேட்டுப்பழகியவர்களுக்கு நீலப்படத்தின் ஞாபகம் வந்து வெருள்வது அவரவர் சித்தத்தில் சேர்ந்துக் கொண்ட கழிசடைக் குப்பைகள்! இந்தக் குப்பைகளை மனதில் வைத்துக் கொண்டு வெருண்ட மனதுடன் உயர்ந்த அறிவினைப் பெற முடியாது!
காமம் என்றால் இச்சை என்று பொருள்! ஆங்கிலத்தில் அறியவேண்டும், தெரியவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்த passionate curiosity இதற்குச் சரியான சொல்! ஒன்றைப் பற்றிய இச்சை இல்லாமல் அதன் அறிவு வராது!
உண்மையில் ஒரு ஆணிற்கு பெண் மேல் இச்சை வருவதும், பெண்ணிற்கு ஆண் மேல் இச்சை வருவதும் அவர்கள் தமது அறியப்படாத மிகை நிரப்பு நிலையை (complementary ) அறிந்துக் கொள்வதற்கான Curiosity தான்!
ஆக மனதில் இச்சை வராமல் வித்தை கற்கும் ஆர்வம் உண்டாகாது! அனைத்து இச்சைகளும் - காமங்களும் மனதின் இந்த உணர்விலிருந்தே தோன்றுகிறது; புதிதாக ஒரு வியாபாரம் செய்து பார்ப்போம், புதிய ஒரு நட்பினைத் தேடுவோம் என்று எல்லாவற்றிற்கு பின்னாலும் சரஸ்வதியின் இந்த காமஸ்வரூப ஆற்றல் மனதில் இயங்குகிறது.
ஆகவே மனதில் ஆர்வமும், இச்சையும் அறிவினைப் பெறுவதற்கான முதல் படி! இதனால் தான் சரஸ்வதி காமஸ்வரூபிணீ என்று அழைக்கப்படுகிறாள்!
இதை இன்றைய நவீன முகாமைத்துவம் Passion என்று முன்னேறத்தேவையான பண்பு என்று சொல்கிறது! நாம்தாம் குழம்பிப்போன புத்தியை வைத்துக் கொண்டு கேவலமான அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.