குரு சிஷ்ய உறவிற்கு நல்ல இலக்கணம் எது?
இன்று பலரும் குரு என்றால் அஞ்சி, பயந்து, குருபுகழ் பாடும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற ஆண்டான் அடிமை மாதிரிகளைத்தான் குரு சிஷ்ய உறவாகப் பயன்படுத்துகிறார்கள்!
எனக்குப் பிடித்த குரு சிஷ்ய உறவு
ஸ்ரீ கிருஷ்ணன் - அர்ஜுனன்
கிருஷ்ணன் சர்வ ஞானி, யோகி, பரம தத்துவம் அதேவேளை அர்ஜுனனிற்கு மைத்துனன்!
அர்ஜுனன் தனது மைத்துனன் என்று கருதினால் மைத்துனன், தேரோட்டி என்று கருதினால் தேரோட்டி! வழிகாட்டி என்று கருதினால் வழிகாட்டி! அர்ஜுனன் பக்குவம் வரும்வரை வெறும் மைத்துனனாகவும், தேரோட்டியாகவும், நண்பனாகவும் இருந்தவன் அர்ஜுனனிற்கு ஞானத்தைப் பெறும் பக்குவம் வந்தவுடன் ஸ்ரீ குருவாக யோகத்தைப் போதிக்கிறான்!
கிருஷ்ணன் சாதாரணமானவன்! அதே வேளை அசாதாரணமானவனும்!
கிருஷ்ணன் போகி அதேவேளை மகா யோகி!
இப்படி ஒன்றை வெறுத்து இன்னொன்றை விரும்பும் ஏற்ற இறக்கம் அற்ற பூரணன்!
நண்பனாக இருந்து குருவாக உணர்ந்தால் மாத்திரம் வழிகாட்டக்கூடிய குரு! குருவாக உணரவில்லை என்றால் வெறும் மைத்துனன் மாத்திரமே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.