{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
**********************************************
பலரும் காளி சிவனின் மேல் கால்களை வைத்திருக்கிறாள்! சிவம் பெரிதா சக்தி பெரிதா என்று ஆணவ மலத்தில் சிக்கிய அற்ப மானிடர்கள் பட்டிமன்றம் நிகழ்த்த அந்தப்பாதங்கள் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று ஹ்ருதயத்தில் அன்புப் பெருக்கால் கட்டிவைத்து ஆழ்ந்த ஸமாதியில் அமர்ந்திருக்கிறார் சிவன்!
இப்படி அன்னையின் பாதத்தை ஹ்ருதயத்தில் முழுமையாகக் கட்டி வைத்திருப்பதால் தான் அவர் பசுகளுக்கெல்லாம் பதியாக ஆழ்ந்த ஸமாதியின்பம் அனுபவித்து அமர்ந்திருக்கிறார் என்ற உண்மை புரிந்த சாதகர் ராம்பிரசாத் தனது மனமாகிய கூட்டாளியுடன் சேர்ந்து அந்தத் திருவடியைத் திருடத் திட்டம் போடுகிறார்;
இந்தத் திட்டத்தினை விபரிக்கும் அற்புதக் கவிதை இது! சிவனார் வருந்தாமல் திருவடியைத் திருடவும் உத்திகளை உரைக்கிறார்!
வருவாய் மனமே திருவடி திருடுவோம்!
*****************************
வருவாய் மனமே, திருடச் செல்வோம்!
நீயும் நானும் சேர்ந்து செல்வோம்!
அன்னையின் பாதத்தை சிவனார் முழுமையாகப் பிடித்து வைத்திருக்கிறார்!
அவற்றை நாம் கைப்பற்ற வேண்டும்!
ஆனால் அவர்கள் எம்மைப் பிடித்துவிட்டால்
அந்த விழிப்புணர்வுடன் கூடிய வீட்டிற்குள்
அதுவே எமது உடலிற்கு முடிவாகும்
அவர்கள் கைலாயத்தில் பிடித்துக் கட்டிவிடுவார்கள்!
உனது குருவின் அறிவுரையை மறக்காதே!
நாமிருவரும் பாதத்தைத் திருடினால்
சிவனார் காயப்படுவார்!
அவரை பக்தி என்ற அம்பால் கட்டிவிட்டு
பறித்துக்கொண்டு ஓடிவிடுவோம்!
ராம்பிரசாத் ஸென்
புரிந்த அளவில் தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.