{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
**********************************
காளி கருமை நிறந்தவளா?
***********************************
ஏன் அன்னை காளி கருமையாய் ஒளிர்கிறாள்?
அவள் மிக ஆற்றல் வாய்ந்தவள் என்பதால்,
அவள் நாமத்தை கூறுவதே மாயை அழிக்கும் என்பதால்
ஏனென்றால் அவள் மிக அழகானவள்!
எம்பெருமான் சிவன், மரணத்தின் மரணம்
வெல்லப்பட்டு அவள் சிவந்த பாதங்களில் பேரானந்தத்தில்
மூழ்கிக்கிடக்கிறார்.
அவள் கருமையாக இருந்தாலும் அதில் நுண் கதிர் ஒளிர்கிறது
இந்தக்கருமையில் அவள் தேகம் எப்படி ஒளிர்கின்றது என்ற பரம இரகசியம்
அது மிகப்பெரும் கருமை, அற்புதமான கருமை
அவள் ஹ்ருதயத்தின் இரகசியக் குகையில் விழித்தெழுந்தால்
அந்தக்கருமை வித்தியாசமான ஒளியாக மாறுகிறது
அது துவாதச கமலத்தை மலர்விக்கிறது!
அது இன்னும் செறிவாக பொன்னிறமாக மாறுகிறது
அவளது அந்த அன்பு மிகுந்த தோற்றம் எதனுடன் ஒப்பிடமுடியாது
காளி அந்த யமனிலும் கருமையிலும் கருமையானவள்
இந்த ஒளிரும் கருமையில் விழியைச் செலுத்தியவர்கள்
அவள் மேல் தீரா அன்பால் வசப்படுவர்!
உலகின் மற்றெந்த வஸ்துவின் மேல் கவர்ச்சியேற்படா மனம் பெறுவர்!
அவளையே எங்கும் காண்பர்
இந்தக் கவி ஆழமாகப் பாடுகிறேன்,
எங்கே இந்தப் பிரகாசமான பெண்,
இந்தக் கரும் ஒளி ஒளிர்தலுக்கும் அப்பாலுள்ளது
ஆகவே நான் அவளை எப்போதும் கண்டதில்லை!
அவள் நாமம் மட்டுமே அறிவேன்
மனம் முழுதும் கரைந்து அவள் உணர்வாகிறேன்!
ஓம் காளி! ஓம் காளி! ஓம் காளீ!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.