{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
***************************************************
யார் அறிவார் புரிவார் காளியை?
**********************************************
இவ்வுலகில் யார் அறிவார் புரிவார்
உண்மையில் காளி யார் என்று?
ஷட்தரிசங்களும் அவளைப்பற்றி விபரிப்பதில்
சக்தியற்றுப்போகின்றது.
அவள் மிக ஆழமான விழிப்புணர்வு
உணர்வு மாத்திரமே இருப்பாயிருக்கிறது என்று
அறிந்த முனிவர்களுக்கு அறியக்கூடியவள்.
இந்தப் பிரபஞ்சப் படைப்பில்
உயிப்பாய் மிளிர்பவள்
அண்டமும் பிண்டமும்
அன்னையின் கருப்பையில் அடங்கிவிடுகிறது
இப்போது அறிவாயா அவள் விபரிக்க முடியாதவள் என்று!
அவளை ஆறு ஆதாரத்தில் தியானிக்கும் யோகிக்கு
அவள் இந்த ஆதியான மனித உடலின் தாமரைக் காட்டிற்குள்
ஆனந்த விளையாட்டைக் காட்டுகிறாள்,
தனது நாதரான மஹா ஹம்ஸ
சிவத்துடனான விளையாட்டின் மூலம்.
எவராவது அவளை அறிய முயல்கிறேன் எனக்கூறும் போது
இந்தக் கவியைப் பாடும் கவி சிரிக்கிறேன்
உன்னால் கரைகளற்ற சமுத்திரத்தை நீந்திக்கடக்க முடியுமா?
ஆனால் என்னுள் இருக்கும் சிறு குழந்தை
சந்திரனைத் தொட முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறான்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.