{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
************************************************
மனதினால் மதிப்பிட முடியாப் பெறுமதி அது!
********************************************************
இந்தப்பிரபஞ்சத்தில் எவர் பயமுறுவர்
என் அன்னை அனைத்தையும் வழி நடத்தும்போது?
அவளது தோட்டத்தில் மிகுந்த சௌகரியத்துடமும், (அவள் வேறு நான் வேறு என்று) பிரிக்கமுடியா விழிப்புணர்வுடனும் பேரானந்தத்துடனும் வாழுகிறேன்.
நான் அவளிடம் நேரடியாக வாடகை செலுத்தும் வாடகைக்காரன்
நான் சம்பிரதாயங்கள், உயர்வு, தாழ்வு எனும் படிநிலைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரன்!
இந்தச்சரணாலயத்தில் வாடகை இல்லை,
நான் வேறு நீ வேறு இல்லை என்ற இந்த அத்வைதப் பூங்காவில்!
இது மனதின் மதிப்புகளுக்கு அப்பாலுள்ள பெறுமதி
எனது இந்தப்புனித வாழிடம் எவராலும் ஏலமிடப்பட முடியாது!
இங்கு சொந்தக்காரர் எவருமில்லை சொந்தம் கொண்டாட எதுவுமில்லை!
அன்னையின் சொத்துகளின் சொந்தக்காரர் சிவன்,
இங்குள்ள ஒவ்வொரு குறுகிய எண்ணத்தையும் பரிமாற்றத்தையும் பேருணர்வாக்குகிறார்!
இங்கு குழப்பமோ அநீதியோ இல்லை
பாகுபாடோ பிரிவினையோ இல்லை
அன்னை மத வழிபாட்டுக்கென
கொழுத்த வரி கேட்பதில்லை
பணியாளனாக எனது கடமை
அவளை உள்ளே நித்திய ஸ்மரணம் செய்வதுதான்!
நித்தியமாக காளி காளி காளி என்று சுவாசிப்பதுதான்!
இந்த பித்துப்பிடித்த கவிக் காதலன்
அன்னையிடமிருந்து நேரடியாகப் பிறந்தவன்
இவன் நேசித்து ஆசைகொள்வதெல்லாம்
அவளது வைர சுவர்க்கமான மகிழ்ச்சியையும்
தளையற்ற கருவூலமான தூய அன்பையும்
இதை இலவசமாக அனைத்து உயிர்களுக்கும் கொடுப்பதும்தான்
- ராம்பிரசாத் ஸென் -
தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.