{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
********************************************
இந்தப் பாடல் ராம்பிரசாத் சென்னுடைய வாழ்வுடன் சுவையான சம்பவத்துடன் தொடர்புடையது! பாடலின் இறுதியில் தன்னை அமோகமான செல்வந்தன் ஆக்கு என்று கேட்கிறார்! அவரது காலத்து ஜமீந்தாரான ராஜா கிருஷ்ணசந்திர ராய் அவரது காளி சாதனையைப் பார்த்து 100 ஏக்கர் நிலம் வரி இல்லாமல் எழுதிக் கொடுத்தாராம்! கேட்டமாதிரி காளி கொடுத்திருக்கிறாள்!
ஆகவே நாமும் கேட்போம் எம்மையும் அமோகமான செல்வந்தனாக்கு என்று!
*****************************************************
ஹே மாதா, என்னை எல்லாவற்றிலிருந்தும் வெளியேற்று!
குப்த வித்தையில் என்ன பயன்?
தத்துவ அறிவில் என்ன பயன்?
அனைத்தையும் அரவணைக்கும் உன்னுடைய அன்பெனும் மதுவினுள் முழுமையாகச் செலுத்து!
பரம இரகசியத்தின் தாயே!
உன்னை நேசிப்பவர்களின் இதயத்தை
அந்தப்பரம இரகசியத்தால் நிறைப்பவளே!
மீள முடியாமல் என்னை மூழ்கடிப்பாய்!
எல்லையற்ற ஆர்ப்பரிக்கும் கடலாகிய
தூயஅன்பு, தூயஅன்பு, தூயஅன்பால்!
உனது அன்பு எங்கெல்லாம் வசிக்கிறதோ
அவையெல்லாம் உன்மத்த வீடாகத் தெரியும்
பொதுப்புத்திகளின் பார்வைக்கு!
உனது சுதந்திரத்தால் சிரித்தபடி சிலர்
உனது மென்மையால் ஆனந்தக்கண்ணீர்
சொரிவோர் சிலர்!
உனது பேரானந்தம் தாக்க ஆடுவோர் சிலர்!
கௌதமரும் மோசஸும்
கிருஷ்ணரும் ஜீஸசும்
நானாக்கும் முகம்மதும்
உனது அன்பு வெடிப்பில் தொலைந்து போகிறார்கள்!
இந்த கவிஞன் திக்குகிறேன்
ஏக்கத்தால் தாக்குண்டு
எப்போது? எப்போது? எப்போது?
எப்போது தோழமையுடன் உன்னருகிலிருக்கும் பாக்கியம் கிடைக்குமென்று!
எப்போது அவள் தீவிர அன்பு கிடைக்குமென்று!
அவள் புனித உறவு சொர்க்கமயமானது!
இத்தகைய அன்பிலே மூழ்கி பித்துக்கொண்டிருப்போருக்கு
நியாயமாக நடக்கும் நாடு!
அப்படியான நாட்டிலே
குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான பேதம் அற்றுப்போயிருக்கும்,
அவர்கள் அன்பின் அன்பு கானமிசைக்கிறது
அம்மா, அம்மா, அம்மா என்று
யார் உனது பரம இரகசியத்தின் ஆழத்தினை அறிவார்கள்?
உனது எல்லையற்ற அன்புடன் அன்பு புரியக்கூடியவர் யார்?
நீ தெய்வீக உன்மத்தம்!
ஹே தேவி!
உனது அன்பு புத்திசாலித்தனம் எனும் கிரீடமணிந்த உன்மத்தம்!
இந்த ஏழைக் கவியை அமோகமான செல்வந்தன் ஆக்கு!
ராம்பிரசாத் சென்!
தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.