{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
*************************************************
இந்தப் பாடல் காளியை மானச உபாசனை செய்யும் வழியைப் போதிக்கிறது.
காளியை எம்முள் உணர்வதற்கு ஐந்து வழி இருக்கிறது;
1) தியானம் - அவள் ரூபத்தை, தத்துவத்தை தியானித்தல்
2) சுய பரிசோதனை: எந்தெந்த உணர்ச்சிகளை அழுத்தி நாம் உள்ளே மிருகங்களாகவும், வெளியே பண்பானவர்களாகவும் நடிக்கிறோம் என்று அகத்தில் ஆராய்ந்து களைதல்.
3) நாத உபாசனை - உடலிலுள்ள ஸப்தத்தினை/ நாதத்தினைக் கூர்ந்து கவனித்து உபாசித்தல்.
4) பலி : எம்முள் இருக்கும் தாழ் மிருக உணர்ச்சிகளை அவளிற்கு பலியிடல்
5) சம்பாஷணை: அவளை எம்முள் இருக்கும் ஒருத்தியாகக் கருதி நாம் எப்போது ஆன்ம முன்னேற்றம் பெறுவோம்? எனக்குத் தகுதியைத் தா என்று உரையாடல்!
இந்த ஐந்து வழிகளால் காளியை எம்முள் மானச வழிபாடு செய்ய முடியும். இவை பற்றி இந்தப்பாடலில் ராம்பிரசாத் உரையாடுகிறார்.
********************************************************
அன்னையே என்னுள் வசிக்கிறாய்;
அன்னையே, நீ என்னுள் வசிக்கிறாய்;
சியாமளையே, யார் கூறினார்கள் நீ தூரத்தில் இருக்கிறாய் என்று,
நீ வஜ்சிரப் பெண், பயங்கர மாயை,
பல வேடமிட்டு வழிகாட்டுபவள்.
உன்னை உபாசிக்க பலவழிகள் உண்டு
ஐந்து முதன்மையானவையாக்கியுள்ளாய்!
ஆனால் இந்த ஐந்தும் ஒன்றுதான் என்ற ஞானம் உதிக்கும் போது
உன்னிடமிருந்து எவரும் தப்ப முடியாது என்று புரியும்!
உண்மையை உணர்ந்தவன்
போலியான முறைகளால் உபாசிக்க மாட்டான்!
நீ நிறுத்த வேண்டும்
நீ அவனது துன்பங்களை நிறுத்துவதற்கு முடிவெடுத்தால்!
அவன் பொன்னினது மதிப்பறிந்தால் தவறியும் கண்ணாடித்துண்டினைத் தேடுவானோ?
பிரசாத் கூறுகிறேன்,
எனது இதயத்தை அப்பழுக்கற்ற தாமரையாக்குகிறேன்
வந்தமர்வாய் எனது மானச தேவியே!
நடனம் புரிவாய்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.