{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
********************************************
நான் அருந்துவது சாதாரண மதுவையல்ல
*********************************
நான் அருந்துவது சாதாரண மதுவையல்ல
எப்போதும் பேரின்பம் தரும் மதுவை
என்னன்னை காளியின் நாமத்தை!
இந்த நாமம் எனது மனதை போதைகொள்ளச் செய்து காண்போர் எனைக் குடிகாரன் என நினைக்கவைக்கிறது!
எனது குரு மதுவை வடிக்க கருப்பஞ்சாறு தந்தார்!
எனது விருப்பமோ அதை நொதித்து மதுவாக்குவது
ஞானம், மதுவைக் காய்ச்சி வடிப்பது!
எனக்காக தயார் செய்தது;
மது வடித்து முடிந்ததும்,
எனது மனம் மந்திரம் என்ற போத்தலில் இருந்து அருந்தியது!
அன்னையின் (காளி என்ற) நாமம் அந்த மதுவை சுத்திக்க
அந்தமதுவைக் குடிக்க
ராம்பிரசாத் கூறுகிறேன்
நாற்புருடார்த்தமும் வாய்க்கும் உன் வாழ்வில்!
ராம்பிரசாத் ஸென் கவிதைகள் - புரிந்த அளவில் மொழிபெயர்ப்பு
ஸ்ரீ ஸக்தி சுமனன் குறிப்பு:
அன்னையின் நாமம் பேரின்ப போதை தரும் மது; அந்தப் போதை தரும் நாமத்தைப் பெற குருவிடமிருந்து கருப்பஞ்சாறு என்று தீக்ஷை பெற்று ஞானம் என்ற மதுவை வடித்து அதை அன்னையின் நாமத்தால் சுத்தீகரணம் செய்து அதை அருந்த அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான் கு புருடார்த்தமும் வாய்க்கும் என்று ராம் பிரசாத் சென் கூறுகிறார். குருவிடம் தீக்ஷை இல்லாத சாதனையும், அன்னையின் நாமத்தால் சுத்திகரிக்கப்படாத ஞானமும் எதற்கும் பயன்படாது என்பது உள்ளர்த்தமாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.