{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
**********************************************
காளியை உபாசிக்கிறோம் என்றால் இவன் மந்திர தந்திரத்தில் வல்லவன்; குருவென்று பணிந்து தாஜா செய்துகொண்டால் தமது காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என்று எப்போதும் உபாசகரை ஒரு கூட்டம் சுற்றப்பார்க்கும்!
தேவி உபாசனை செய்யத்தொடங்க எம்மைச் சுற்றி ஆற்றல் வளர அனேகர் மதிப்பாக, மரியாதையாக பழக எமது மனம் சற்று பூரிக்கத்தொடங்கும்!
இப்படியெல்லாம் அவளின் இந்த லீலையில் மயங்கி அவள் நாமத்தை விட்டுவிடாதே கள்ள மனமே என்று இந்தப்பாடலில் சுவைபடக் கூறுகிறார்!
எனக்கு தனிப்பட மிகவும் பிடித்த கவிதை இது!
*******************************************************
காளியை அழைப்பாய் மனமே காளியை அழைப்பாய்
எண்ணிப்பார் மனமே!
யாருக்கும் எதுவும் இல்லை இங்கு!
நீ எதற்காகவும் இந்த உலகத்திற்கு வரவில்லை!
உனது வாழ்க்கையில் சில நாட்கள்
இவர்கள் உன்னைக் குருவென்பார்கள்!
ஆனால் அந்த குருவை விட்டு வெகுவிரைவில் நீங்குவார்கள்!
இறப்பு வாழ்வு என்ற குரு அவர்களைத் தீண்டும் போது!
நீ நோயுற்றால் நீ தேடியலைந்த பெண் கவலையடைவாளா?
உன்னுடன் கூடி வாழ்வாளா?
உன்னைப் போன்ற துரதிஷ்டசாலியிலிருந்து தன்னைச் சுத்திக்க கோமியம் கரைத்துத் தெளிப்பாள்!
ஸ்ரீ ராம்பிரசாத் கூறுகிறேன்;
மரணம் வந்து உன் பிடரியை உலுக்கும் போது
அழைப்பாய்: காளீ காளீ
பிறகு அவன் என்ன செய்ய முடியும்?
புரிந்துகொண்ட அளவிற்கு தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.