***************************************
ராம்பிரசாத் சென்னுக்கு மாத்திரம் எப்படி இப்படி கவிதை எழுத வருகிறது, நானும் எழுத வேண்டும் என்று அன்னையிடம் கோவிக்க சரி நீயும் எழுதிப்பார் என்று கூறினாள்! இங்கிருக்கும் கவிஞர்கள் என்னை மன்னிப்பார்களாக!
****************************************
குருவென்ற மாமரம்
***************************
குருவென்ற மாமரம்!
குருவென்ற மாமரம் பரந்து விரிந்து சூரியனை ஈர்த்து
பூத்துக் காய்த்து கனிதரும்!
கனிகள் நாடி பறவைகள் பல வரும்!
பூக்கள் நாடி தேனீக்கள் படையெடுக்கும்!
பறவைகள் சதையை உண்டு விதைகள் பரப்பும்!
உண்டு உறங்கிக் களிக்கும்!
பறவைகள் பழத்தை உண்பதால் மரமாவதில்லை!
பறவைகள் பழத்தை உண்ட கடன் விதை பரப்புவதில் செலுத்தும்!
கல்லெறியும் மானிடர்கள் வருவர் பழம் தேடி!
சதை தின்ற பின் விதை மரமாக நினைப்பவர் மிகச்சிலர்!
ஆகா பழம் அருமை என்று விதை பற்றி எண்ணாமல்
குப்பை என்று எறிவோர் பலர்!
நல்ல நிழல் என்று ஊஞ்சல் கட்டி ஆடுவோர் சிலர்!
சுவையான பழம்தரும் மரம்
எனக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணும் சிலர்!
வீட்டுமுற்றத்தில் கஞ்சல் கொட்டும் மாமரம்
என்று வையும் சிலர்!
ஆனால் மாமரமோ பூத்து, தேன்பரப்பிக் காத்திருக்கும்
தன் சந்ததி வளர்க்கும் மகரந்தத்திற்கும்,
தேன் குடித்து மகரந்தம் பரப்பும் தேனிக்காகவும்
குருவான மரம் தேடுவதோ
தேனீக்களையும் மகரந்தங்களையும்!
மகரந்தம் தன்னை பூவில் சரணடைக்கும்
பறவை பலன் பெறும், மரம் பரவ தாம் அறியாமல் உதவி செய்யும்!
தேனீ தேன் பெறும் தன் கடன் கழிக்க
மகரந்தம் சேர்க்கும்! சந்ததி வளர்க்கும்!
பறவையும் தேனியும் மரத்தின் மணம் பரப்பும்
அணுக்கச் சீடர்!
பழம் உண்டு விதை சூப்பி ஆணவத்தில் களிக்கும்
மானிடரில் நன்றியுணர்வுடன் விதை பரப்புவர் சிலர்!
விதை பரப்பா மானிடருக்கு
மரம் பழத்தை மறுப்பதில்லை!
அம்மானிடரையும் பழம் தந்து ஆசீர்வதிக்கும் மாமரம்!
குருவென்ற மாமரம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.