{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
**********************************************
திருவடி உரிமைக்கான வழக்கு!
********************************************
என்ன அற்புதமான உரையாடல்! அன்புச் சண்டைக்குரிய பாவத்தினை, மொழியினை அழகாகத் தந்து அனுபவிக்கச் செய்கிறார் ராம்பிரஸாத் ஸென்!
காளியுடன் வழக்காடி ஒரே hearing இல் வெல்லுவேன் என்று சவால் வேறு! கவிதைப் படித்து முடிக்கும்போது வழக்காடி வென்றுவிடும் அன்பு பொங்குகிறது
*************************************************************
அன்னையே, நான் எண்மாதமேயான மெலிந்த சிறுகுழந்தை
உன் சிவந்த நயனங்களை என்னைப் பயமுறுத்த முடியாது!
எனது செல்வமோ உனது தாமரைப் பாதங்கள்!
எதை சிவனார் தன் மார்பில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறாரோ அது!
நான் எனது பாரம்பரியச் சொத்தாகிய அந்தப்பாதங்களைக் கேட்டால்
ஒவ்வொரு முறையும் சாக்குப் போக்கும் தாமதமும் தான் கிடைக்கிறது
உனது பாதத்திற்கான உரிமைப்பத்திரம் என் இதயத்திடம் இருக்கிறது!
அது உனது கணவர் சிவனாரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது!
நான் உன்மீது வழக்குத் தொடுப்பேன் கவனம்! அப்படியொன்று நடந்தால் ஒரேயொரு விசாரணையில் கட்டாயம் வெல்வேன்.
நீ இதற்காக என்னை எதிர்த்தால்,
நான் எந்தத்தாயின் மகன் என்பதைக் கற்றுக்கொள்வாய்!
இது ஒரு கசப்பான வழக்கு தாயிற்கும் அவள் மகனிற்குமிடையில்
என்னவிதமான விளையாட்டு இது ராம்பிரசாத்!
நான் உன்னைத் துன்புறுத்தவதை நிறுத்தமாட்டேன்!
இந்தச் சண்டையின் பலன் கிடைக்கும் வரை
நீ என்னை உன் மெல்லிய கரங்களால் பற்றும் வரை!
ராம்பிரசாத் ஸென்
தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.