சென்ற நவராத்ரி குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை உணர்ந்ததை பொருளாக எழுதி அனைவருடனும் பகிரும் பேறு பெற்றோம்!
இந்த முறை பத்து நாட்களுக்கு முன்னராகவே தொடங்கியாயிற்று!
நேற்று இரவு அன்னை காளியின் உபாசகர் ராம்பிரசாத் சென் அவர்களின் பாடல்களைப் படிக்க, ஆகா தமிழில் புரிந்தால் எப்படியிருக்கும் என்று மொழிபெயர்க்க என்று நேற்று இரவு பிடித்த போதையை நவராத்ரி வரை தொடரலாம் என்று எண்ணம்! இது எப்படி நடந்தது என்பதை இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்! புரியவில்லை!
ராம்பிரசாத் சென் பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த தாந்திரீக காளி உபாசகர்! வங்காளத்து சாக்த பக்திப்பாடல்களின் முன்னோடி! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மனதில் நின்ற உபாசகர்! காளி உபாசனையில் இவர் பாடல்கள் தவிர்க்க முடியாதவை!
காளியை பயங்கரி என்று பயந்து ஒதுங்குபவர்களுக்கு அவர் பாடல்கள் அவள் சாதனையின் தத்துவத்தை உவமானம் காட்டிப் புரிய வைக்கிறார்! தாந்திரீக சாதனையின் இரகசியங்களை அங்கங்கே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவுபடுத்திச் செல்கிறார்.
இரசிப்பவர்கள் இணைந்திருங்கள்!
ராம் பிரசாத் சென் - ஜெகன்மாதா
அன்னையின் தரிசனம் - தாந்திரீக ஞானப்பாடல்கள் என்ற நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் மூன்று பாடல்கள் அவள் ஆணை இயங்கும் வரை எழுதப்படும்!
இதுவொன்றும் புலமைசார் அறிவுப் பகட்டு வேலையில்லை! படித்தல் - அனுபவித்தல் - பகிருதல் இவை மூன்றுமே இலக்கு! ஆகவே பிழைகள் இருந்தால் அது திருத்த வேண்டிய எனது சிற்றறிவு! சிறப்பிருந்தால் அது அவள் என் அந்தக்கரணத்தினூடு சரியாக வேலை செய்த பேரறிவு என்று பொருள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.