நீங்கள் ஒரு விஷயத்தை நல்லது என்று ஆழமாக நம்பிக்கொண்டிருக்கீறீர்கள்; அப்போது அதேபோல் நம்பும், உங்களை ஆதரிக்கும், ஒருவரைக்காணும் போது நீங்கள் பூரித்து உங்கள் காரியம் நடக்கும் என்று நம்பத்தொடங்குவீர்கள்!
இப்படி அவர்கள் நடப்பது இரண்டு காரணங்களுக்காகவே எப்போது இருக்கும்;
1) அவர்கள் உண்மையில் உங்கள் நம்பிக்கையை ஆழமாக நம்பி அதற்காக ஒத்திசைபவர்களாக இருப்பார்கள்.
2) இல்லையென்றால் உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்களாக, அல்லது உங்கள் அதிகாரம், ஆற்றலுக்கு பயந்தவர்களாக உங்களை வீணாக சீண்டினால் அவர்களுக்கு ஆபத்து என்று எண்ணும் எண்ணத்திற்காக உங்களுக்கு முகஸ்துதி செய்பவர்களாக இருப்பார்கள்.
இப்படியான இரண்டு நபர்களும் உங்களைச் சூழ இருக்கும்போது உங்கள் மனப்பாங்கு போதையேறும்; அதீதமாக உங்களை நம்பத்தொடங்குவீர்கள்! நீங்களே உங்களை சிங்கமாகவும், ராஜாவாகவும் எண்ணத்தொடங்கி பெருமிதமடையத் தொடங்குவீர்கள்! இது இறுதியில் உங்களை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது.
இதேவேளை நீங்கள் சந்திக்கும் நபர் உங்களது கருத்துக்களை, பெறுமதிகளைக் கொண்டிருக்கவில்லை, பிரச்சனைக்குரியவர் அவர் உங்களுக்குத் தொல்லை தருபவராக இருக்கலாம். அவரது கருத்துக்காகத்தான் நீங்கள் வேலைசெய்ய வேண்டி வரலாம்.
ஆனால் இது உங்கள் எண்ணத்தை, யோசனைக்கு புதுப்பரிணாமம் கொடுக்கும்; நீங்கள் உங்கள் குறுகிய எண்ணத்திற்குள் இருந்து செயலாற்றுவதை உடைத்து புதுப்பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும்; அதனால் நீங்கள் புதியதொரு நிலையைத் தேர்ந்தெடுப்பீர்கள்! அந்த நட்பு வாழ்க்கை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்!
எமது மனத்தைத் திறந்து உங்கள் ஆற்றலை மேம்படுத்தும். உங்களுக்கு "ஆமா சாமி" போடுபவர்களை விட உங்களை எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்கள், பிரச்சனை கொடுப்பவர்களுடன் வேலைசெய்யும் சந்தர்ப்பம் மனதிற்கு பொன்னான புதிய புரிதல்களைத் தரும் தருணம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.