இந்த விஜயதசமி நன்னாளில் சிருஷ்டி தனது இலக்குகளைப் பிரகடனப்படுத்துகிறது.
1) சித்தர் இலக்கியங்கள் எளிமையாக அனைவரும் கற்றுப் பயன் பெறவேண்டும். அதில் கூறப்பட்டுள்ள மருத்துவம் மாத்திரமே இன்று சித்த மருத்துவம் என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சித்தர்களின் ஆழமான தத்துவம், யோகம், இரசவாதம் என்பவை இவற்றின் அடி நாதம் இவை எப்படி மனித குலம் பயன்படுத்துவது என்ற நடைமுறை அணுகுமுறை பற்றி சிருஷ்டி திட்டங்களை முன்னெடுக்கும்.
2) யோகம் என்றால் உடலை வளைப்பது, ஆரோக்கியமாக இருப்பது என்ற எண்ணத்தில் மாத்திரம் யோகம் பயிலாமல், யோகத்தின் முழுமையான பயனைப் பெற அதன் ஆழ்ந்த பரிணாமங்களான மனம், பிராணன், உடல் ஆகிய மூன்று தளங்களிலும் ஆழமான அறிவு பெறவேண்டும், இதை எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் கற்பிக்க கற்கை நெறிகள் உருவாக்குவது.
3) ஒரு சமூகத்தின் இருப்பு அதன் உணவு உற்பத்தித்திறனில் இருக்கிறது. உணவை உற்பத்தி செய்வது சூழலினை மாசாக்கி, நஞ்சாக்கி செய்ய வேண்டும் என்பதில்லை. அது எதிர்கால சந்ததியின், மனிதகுலத்தின் இருப்பினை இல்லாதாக்கும், ஆகவே தற்சார்புள்ள விவசாயப் பொருளாதாரத்தை சூழலியலின் நன்மை சார்ந்து உணவு உற்பத்தி செய்யும் இயற்கை விவசாய முறைகளுக்கான அறிவுத் தேக்கத்தை சமூகத்தில் உருவாக்குதல்!
4) நாம் இயற்கையின் ஒரு பாகம் என்ற எமது பண்டைய ஞானத்தினை மறந்து, இயற்கையின் சூழலியல் விதிகளை மறந்து இயற்கையைச் சுரண்டும் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அறிவியல் அடிப்படையில் எளிமையாக சூழலியல் விஞ்ஞானத்தைப் போதிக்கும் கற்கை நெறிகளை உருவாக்குதல்.
ஆகிய நான்கு இலக்குகளையும் சிருஷ்டி கொண்டுள்ளது.
இன்று கல்வி என்பது பட்டங்களைப் பெறுதல் என்பதுடன் நின்று விடுவதைத் தாண்டி நாம் வாழ்நாள் முழுவதும் கற்கையாளர்களாக மூளையை இளைமையாக வைத்துக்கொள்ளும் வாழ்நாள் கற்கையாளர்கள் என்ற பண்பாட்டினை எப்படி உருவாக்குவது என்ற அத்திவாரத்தில் மேற்கூறிய நான்கு தளங்களில் சிருஷ்டி தனது பணியை இந்த விஜயதசமி அன்று தொடங்குகிறது.
உங்கள் அனைவரதும் மேலான ஆதரவினை எதிர்பார்த்து வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.