குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 30, 2020

தலைப்பு இல்லை

சிவயோக ஞானத்திறவுகோல் நூல் 
உலகெங்கும் உள்ளவர்கள் இப்போது E-Ganesha தளத்தினூடாக வாங்கலாம்! 
For any help
+91 80 4370 4445
info@eganesha.in

Thursday, October 29, 2020

தலைப்பு இல்லை

வித்தையில் ஆசையுள்ளவனுக்கு, நித்திரை வராது; நித்திரையில் ஆசையுள்ளவனுக்கு மெத்தை தேவைப்படாது! 

இது வைத்தியரான தாத்தா தனது குறிப்புகளில் எழுதி வைத்திருந்த ஒரு உபதேசம்!

உண்மையில் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற தீராத்தாகமும் உறுதியுள்ள ஒருவன் எதையும் அர்ப்பணிப்பான் என்பதுதான் இதன் அர்த்தம்! 

படிக்க வேண்டும் என்ற ஆசையுள்ளவனுக்கு தூக்கம் இயல்பாக கட்டுப்படும்! உண்மையில் படிக்கும் ஆசை இல்லாவிட்டால் முதல் பக்கத்திலேயே தூக்கம் தழுவிக் கொள்ளும்! அப்படியானவர்கள் உண்மையிலேயே அகத்தில் தீராத்தாகம் உள்ளவர்கள் அல்ல! 

அது போல் நித்திரை கொள்ள வேண்டும் என்று ஆசையுள்ளவன் கட்டாந்தரையிலும் நிம்மதியாக உறங்குவான்! ஆனால் மனம் கொந்தளிக்கும் பண்பு இருப்பவன் மெத்தையை கொடுத்தாலும் அது குத்துகிறது, குடைகிறது என்பான்! 

ஆகவே படிக்க, அறிவைப் பெற ஆசையுள்ளவன் கிடைக்கும் அறிவை உற்சாகமாக கவனித்து கிரகித்து அறிவை வளர்க்க வேண்டும்! 

]அப்படியில்லாமல் தமது மனதை கற்பிக்கப்படும் விஷயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் இப்படி இருந்தால் நல்லாயிருக்கும், அப்படியிருந்தால் நல்லாயிருக்கும் என்று சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டு மனக்குழப்பம் இருப்பவர்கள் அறிவைப் பெறுவது கடினம்!


தலைப்பு இல்லை

நாமும் பெருமையாக ஊறுகாயை வைத்து பெரிய யோக தத்துவம் எல்லாம் விளங்கப்படுத்தியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்க, 
ஆமாம் FB post பார்த்தேன், கொரோனாக் காலத்தில் (lockdown) நீங்கள் போட்ட ஊறுகாய் உண்மையிலேயே நல்லாத் தானே இருந்தது என்று பதிவிற்குச் சம்பந்தமே இல்லாமல் நான் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோட்டத்திலிருந்து கொண்டு வந்து செய்த ஊறுகாய்க்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் வீட்டுக்காரி! 
எப்படியோ ஊறுகாய் ஒழுங்காகப் போட்டதால் தான் தத்துவக் கவிதை வந்தது என்று திருப்திப்பட்டுக் கொள்வோம்!

Wednesday, October 28, 2020

சாதனை எனும் ஊறுகாய்!

சித்தம் எனும் எலுமிச்சம் பழம்

பிளந்து குருதீக்ஷை எனும் உப்பிட்டு 

பழம் கெடாமல் உடல் என்ற பாண்டத்திலிட்டு

ஞானம் எனும் சூரியனில் காயவைத்து

பின் தினசரி மந்திரம் எனும் சாறிட்டு 

விழிப்புணர்வு விசாரணை என்ற காரமுமிட்டு

ஞானமெனும் சூரியனில் அவியலிட்டால்

வாய்க்கும் சுவையான சாதனையெனும் ஊறுகாய்!


Monday, October 26, 2020

தலைப்பு இல்லை

இன்று சாமியினுடைய ஆங்கிலத் திகதிப் பிறந்த நாள்! 

விஜயதசமி சேர்ந்து வந்திருப்பது கூடுதல் சிறப்பு! 

சாமி மலையகத்திற்கு ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டி ஆசி வேண்டிய போது ரிஷிகேஷத்து ரிஷி சிவானந்தர் (Dr. குப்புசாமி என்ற ஆங்கில மருத்துவர்) அனுப்பிய ஆசிச் செய்தி!


தலைப்பு இல்லை

ஒரு விஷயத்தில்
இச்சை - Passion
அத்யாயனம் - continuous learning 
சரளம் - fluency
நிபுணத்துவம் - Mastery 
இவை நான்கும் ஒருவனில் நதி போல பாய்ந்து கொண்டிருந்தால் அது சரஸ்வதி அருள்!
மனதிலுள்ளதை சாதிக்கும் 
செல்வம் - wealth
மக்கள் - people 
இடம், நிலம் - Land 
இருந்தால் அது லக்ஷ்மியின் அருள்
அதிகாரம் - Power
தடைகளை வெல்லும் வலிமை - 
எந்த நிலையிலும் சோர்ந்து விடாத மன ஆற்றல் 
இவை துர்க்கையின் ஆற்றல்கள்; 
ஆக ஒருவன் இவற்றை எப்படி தன்னிலும், தன்னைச் சூழ உள்ளவர்களிலும் உருவாக்குவது என்ற 09 நாள் பயிற்சி நவராத்ரி! 
இவையனைத்திலும் வென்றால் வெற்றிபெற்ற பத்தாவது நாள் விஜயதசமி! மனதிற்குகந்த சுவையான உணவுடன் தேவிக்குப் படையல்! காணும் அனைவருக்கும், அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம், வீரம், அசைந்திடா பக்தியன்பு, தேயுறா செல்வம், கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என்ற பிரார்த்தனையுடன் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!<3   

Sunday, October 25, 2020

தலைப்பு இல்லை

இந்த விஜயதசமி நன்னாளில் சிருஷ்டி தனது இலக்குகளைப் பிரகடனப்படுத்துகிறது.

1) சித்தர் இலக்கியங்கள் எளிமையாக அனைவரும் கற்றுப் பயன் பெறவேண்டும். அதில் கூறப்பட்டுள்ள மருத்துவம் மாத்திரமே இன்று சித்த மருத்துவம் என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சித்தர்களின் ஆழமான தத்துவம், யோகம், இரசவாதம் என்பவை இவற்றின் அடி நாதம் இவை எப்படி மனித குலம் பயன்படுத்துவது என்ற நடைமுறை அணுகுமுறை பற்றி சிருஷ்டி திட்டங்களை முன்னெடுக்கும்.

2) யோகம் என்றால் உடலை வளைப்பது, ஆரோக்கியமாக இருப்பது என்ற எண்ணத்தில் மாத்திரம் யோகம் பயிலாமல், யோகத்தின் முழுமையான பயனைப் பெற அதன் ஆழ்ந்த பரிணாமங்களான மனம், பிராணன், உடல் ஆகிய மூன்று தளங்களிலும் ஆழமான அறிவு பெறவேண்டும், இதை எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் கற்பிக்க கற்கை நெறிகள் உருவாக்குவது.

3) ஒரு சமூகத்தின் இருப்பு அதன் உணவு உற்பத்தித்திறனில் இருக்கிறது. உணவை உற்பத்தி செய்வது சூழலினை மாசாக்கி, நஞ்சாக்கி செய்ய வேண்டும் என்பதில்லை. அது எதிர்கால சந்ததியின், மனிதகுலத்தின் இருப்பினை இல்லாதாக்கும், ஆகவே தற்சார்புள்ள விவசாயப் பொருளாதாரத்தை சூழலியலின் நன்மை சார்ந்து உணவு உற்பத்தி செய்யும் இயற்கை விவசாய முறைகளுக்கான அறிவுத் தேக்கத்தை சமூகத்தில் உருவாக்குதல்!

4) நாம் இயற்கையின் ஒரு பாகம் என்ற எமது பண்டைய ஞானத்தினை மறந்து, இயற்கையின் சூழலியல் விதிகளை மறந்து இயற்கையைச் சுரண்டும் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அறிவியல் அடிப்படையில் எளிமையாக சூழலியல் விஞ்ஞானத்தைப் போதிக்கும் கற்கை நெறிகளை உருவாக்குதல்.

ஆகிய நான்கு இலக்குகளையும் சிருஷ்டி கொண்டுள்ளது.

இன்று கல்வி என்பது பட்டங்களைப் பெறுதல் என்பதுடன் நின்று விடுவதைத் தாண்டி நாம் வாழ்நாள் முழுவதும் கற்கையாளர்களாக மூளையை இளைமையாக வைத்துக்கொள்ளும் வாழ்நாள் கற்கையாளர்கள் என்ற பண்பாட்டினை எப்படி உருவாக்குவது என்ற அத்திவாரத்தில் மேற்கூறிய நான்கு தளங்களில் சிருஷ்டி தனது பணியை இந்த விஜயதசமி அன்று தொடங்குகிறது.

உங்கள் அனைவரதும் மேலான ஆதரவினை எதிர்பார்த்து வேண்டுகிறோம். 


Saturday, October 24, 2020

அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியான பலன் - 09

இந்த அகஸ்திய மகரிஷி பாடிய இந்த சரஸ்வதி ஸ்தோத்திரத்தை ,

1) யாரொருவர் தினசரி காலை, மாலை ஆறுமாதங்கள் பக்தியுடன் படித்து வருபவர்கள் சரஸ்வதி சித்தி பெறுவதற்குரிய தகுதியை அந்தக் கரணங்களில் பெறுவர். சரஸ்வதி சித்தி என்பது எந்தவொரு துறையிலும் நிபுணத்துவமும் (mastry), புலமையும் (expertise), செம்மையும் (Perfection) நிறைந்த ஆழமான அறிவு. 

2) இதைப் படித்து வருபவருக்கோ, கேட்பவருக்கோ புத்தித் தெளிவு ஏற்படும். பயத்தினால் ஏற்படும் மனக்குழப்பங்கள், நட்டங்கள் ஏற்படாது. 

3) சித்தத்தில் பதிந்துள்ள அனைத்துப் பாவ சம்ஸ்காரங்கள் (பதிவுகளை) அழித்து அறிவுத் தூய்மையைத் தரும். 

இந்த சரஸ்வதி ஸ்தோத்திரம் அகஸ்திய முனியின் வாசகம்,

அவர் ஆசியாலும், தேவி சரஸ்வதியின் அருளாலும்

பொருளுணர்ந்து படிக்கும் புரியும் வகையில் 

அனைவர் மனதிலும் பதியவேண்டும் என்ற 

நோக்கம் கொண்டு

யாப்பு விதி இன்றி செய்யுள் நடை இன்றி 

எளிய தமிழில் யாத்தது 

அகஸ்திய குலபதி என்ற ஸ்ரீ ஸக்தி சுமனன். 

சொற்பிழை, பொருட் பிழை இருப்பின் சரஸ்வதி என்னில் அதைத்திருத்தி செம்மையைத் தரட்டும் என்று பிராத்தித்து,

சார்வரி வருட சாரதா நவராத்ரி சுக்கில பக்ஷ அஷ்டமி திதி ஏழாம் நாள் இரவு 0858 இற்கு எழுதத் தொடங்கி நவமி, மாலை 0412 இற்கு முடிவுற்றது. 

இந்த மொழிப் பெயர்ப்பு சரஸ்வதி தேவியே இஷ்டதெய்வமாக சிறுவயதிலிருந்து வழிகாட்டிய இயற்பியல் விஞ்ஞானி Dr. பிரகலாத சாஸ்திரிகள் என்ற எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்மா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதியின் ஸ்ரீ குரு பாதகமலத்திற்கு அவர் பூர்ணாபிஷேகம் அளித்த நன்னாளில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதை ஆழமாகக் கற்க விரும்புவர்கள் எமக்கு அறியத்தாருங்கள்; கலந்துரையாடல் வகுப்பாக ஏற்பாடு செய்யலாம்!


அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 08

ஞான ரூபமாகவும் இருப்பவள் நீயே!
விஞ்ஞான ரூபமாகவும் இருப்பவள் நீயே!
நமோ நமஹ
அறிவாக அனைத்திலும் பொதிந்தவளும் நீயே!
எல்லாவித சாஸ்திர அறிவின் வடிவே!
நமோ நமஹ
அழகிய வெண் பத்மமே!
பத்மங்களாக இருப்பது நீயே
பத்மங்களில் தோற்றங்களாக இருப்பது நீயே
நமோ நமஹ
உயர்விலும் உயர்ந்த பரமேஷ்டித் தாயே
பரா என்று அனைத்தையும் கடந்த ஆழ் நிலை அனுபவமே 
நமோ நமஹ!
மகாதேவி மகாகாலி மகா லக்ஷ்மியே 
நமோ நமஹ
பிரம்மா விஷ்ணூ சிவனாகவும் மூலப் பிரம்மமாகவும் இருப்பவளே 
நமோ நமஹ
அறிவுத்தூய்மையின் சின்னம் உன் பத்மம்
பத்மத்தின் (தூய அறிவின்) மூலமே 
இச்சைகளின் வடிவே காமரூபிணி
நமோ நமஹ
கர்மத்தின் பலனை பிரகாசிக்கச் செய்பவளே
கர்மத்தின் மூல சக்தியே
நமோ நமஹ

தலைப்பு இல்லை

அன்பர்களே, 

பதியும் பதிவுகள் பிடித்திருந்தால் 

1) facebook - share என்று ஒரு தெரிவைத் தந்திருக்கிறது. அதனை அழுத்தி இலகுவாக உங்கள் சுவற்றில், பக்கங்களில் பகிர்ந்துக் கொள்ளலாம்! 

2) பொதுவில் நாம் எழுதுவது பிரதி செய்து உங்கள் பக்கங்களில் பகிர்ந்துக் கொள்வது தவிர்க்க முடியாத செயல் என்பதாலும், 

3) எழுதுபவர் எவர் என்று தெரிவதை விட எழுதப்படும் கருத்துக்கள் தான் முக்கியம் அது பலருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய உத்வேகத்தில் செயற்படுபவர் நீங்கள் என்பதைப் புரிந்துக் கொள்வதாலும் எமது பெயரைப் போடாமல், சுருக்கி, நறுக்கி உங்கள் மனத்திற்கு உகந்தவகையிலும் விரும்பியவாறு பகிரலாம்! 

எப்படியாக இருந்தாலும் நீங்கள் பகிர்ந்து கொள்வதில் எமக்கு பெருமகிழ்ச்சி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!   


சரஸ்வதி காமஸ்வரூபிணீ

சரஸ்வதியைத் துதிக்க அகத்தியர் பெருமானார் ஒரு ஸ்லோகத்தில் காமஸ்வரூபிணி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்! 

காமம் என்ற சொல்லை பொதுப் புத்தியில் கேட்டுப்பழகியவர்களுக்கு நீலப்படத்தின் ஞாபகம் வந்து வெருள்வது அவரவர் சித்தத்தில் சேர்ந்துக் கொண்ட கழிசடைக் குப்பைகள்! இந்தக் குப்பைகளை மனதில் வைத்துக் கொண்டு வெருண்ட மனதுடன் உயர்ந்த அறிவினைப் பெற முடியாது! 

காமம் என்றால் இச்சை என்று பொருள்! ஆங்கிலத்தில் அறியவேண்டும், தெரியவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்த passionate curiosity இதற்குச் சரியான சொல்! ஒன்றைப் பற்றிய இச்சை இல்லாமல் அதன் அறிவு வராது! 

உண்மையில் ஒரு ஆணிற்கு பெண் மேல் இச்சை வருவதும், பெண்ணிற்கு ஆண் மேல் இச்சை வருவதும் அவர்கள் தமது அறியப்படாத மிகை நிரப்பு நிலையை (complementary ) அறிந்துக் கொள்வதற்கான Curiosity தான்! 

ஆக மனதில் இச்சை வராமல் வித்தை கற்கும் ஆர்வம் உண்டாகாது! அனைத்து இச்சைகளும் - காமங்களும் மனதின் இந்த உணர்விலிருந்தே தோன்றுகிறது; புதிதாக ஒரு வியாபாரம் செய்து பார்ப்போம், புதிய ஒரு நட்பினைத் தேடுவோம் என்று எல்லாவற்றிற்கு பின்னாலும் சரஸ்வதியின் இந்த காமஸ்வரூப ஆற்றல் மனதில் இயங்குகிறது.

ஆகவே மனதில் ஆர்வமும், இச்சையும் அறிவினைப் பெறுவதற்கான முதல் படி! இதனால் தான் சரஸ்வதி காமஸ்வரூபிணீ என்று அழைக்கப்படுகிறாள்! 

இதை இன்றைய நவீன முகாமைத்துவம் Passion என்று முன்னேறத்தேவையான பண்பு என்று சொல்கிறது! நாம்தாம் குழம்பிப்போன புத்தியை வைத்துக் கொண்டு கேவலமான அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்!


அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 07

ஸர்வ ஞானங்களின் சாரமானவளே

அந்த ஞானத்தில் மிளிரும் 

ஸர்வ ஆனந்த ரூபிணி நமோ நமஹ

அனைத்து வித்தைகளிலும் செம்மையைத் தரும் குமாரியே

அனைத்தையும் அறிந்த புத்துணர்வான தேவியே நமோ நமஹ

யோகசாதனையில் சிறந்த உமாதேவியே 

யோக ஆனந்தத்தில் திளைப்பவளே நமோ நமஹ

திவ்ய ஞானமும் திரி நேத்ரமும் திவ்ய மூர்த்தமும்

உடையவளே நமோ நமஹ

அர்த்தச் சந்திரன் தரித்த கருங்குழலி

சந்திர காந்த வதனி நமோ நமஹ

சந்திர சூரியனை தன் கருங்குழலில் தரித்த

சந்திர காந்த வதனி நமோ நமஹ 

அணுரூபமாகவும் மஹாரூபமாகுவும் 

விஸ்வரூபமாகவும் இருப்பவளே நமோ நமஹ

அணிமாதி அஷ்டசித்தியுடன் ஆனந்தத்தை அருள்பவளே நமோ நமஹ


அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 06

முத்துக்களால் சகல அங்கங்களும் அலங்கரிக்கப்பட்டவளே!

மூலாதார தேவியே நமோ நமஹ

மூல மந்திர ஸ்வரூபிணீ

மூல சக்தியே நமோ நமஹ

மனதில் ஜொலிக்கும் மனோண்மணி

மகா யோக வாகீஸ்வரி நமோ நமஹ

வாக்கு உருவாகும் மூலசக்தி

வரமருளும் கரத்தால் வேண்டும் வரம் தரும் தேவி

நமோ நமஹ

அனைத்து அறிவிற்கும் மூலமானவளும்

அனைத்து அறிவுகளாகவும் பரிணமிப்பவளே

அறிவின் முடிவாகவும் இருப்பவளே நமோ நமஹ

முக்குணங்களுக்கு அப்பாலுள்ளவளே!

குணங்களில் ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் மிளிர்பவளே நமோ நமஹ!


தலைப்பு இல்லை

ஒரு செயல் நடைபெற மூன்று நிபந்தனைகள் உண்டு, முதலாவது அந்தச்செயல் பற்றிய விருப்பமும் நிபுணத்துவமும் - தெளிவான அறிவு; இது ஸரஸ்வதியின் ஆற்றல், 

பிறகு அதற்குரிய வளங்கள் - செல்வம், மனிதர்கள் - இது லக்ஷ்மியின் ஆற்றல், 

மூன்றாவது செயலைத் தொடங்கி பின்னர் அதில் ஏற்படும் தடையை உடைத்து வாய்ப்பாக முன்னேறும் வீரம் - இது துர்க்கையின் ஆற்றல்; 

இந்த மூன்று ஆற்றல்களையும் பெற்றாலே ஒரு செயல் செம்மையாக நடைபெறும்! 

விருப்பமும், நிபுணத்துவமும் இல்லாத செயல் குழப்பத்தை உருவாக்கும்! 

வளங்கள் இல்லாமல் செயல் வெறுமனே கற்பனையாகும்! 

வீரம் இல்லாத செயல் பூர்த்தியாகி இலக்கினை அடையாது! 

இதுவே நவரத்ரியில் சக்தி உபாசனையின் சாரம்!


Friday, October 23, 2020

அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 05

சரஸ்வதி நமஸ்கரிக்கிறேன்

வரம் தருபவளே! காமரூபிணி

தேவி, நான் கற்க ஆரம்பிக்கும்போது

எப்போதும் சரியான புரிதலைத் தருவாயாக!

சரஸ்வதி நமஸ்கரிக்கிறேன்

சர்வ தேவிகளிலும் உறைபவளே

நமோ நமஹ!

சாந்த ரூபத்துடன் சந்திரகலை தரித்தவளே

சர்வ யோகசித்தி தருபவளே!

நமோ நமஹ!

நித்தயானந்த நிராகாரா சொருபமுடையவளே

பிளவற்ற முழுமைப் பொருளே 

நமோ நமஹ!

வித்தைகள் அனைத்தையும் தரித்தவளே!

விசாலாக்ஷி

சுத்த ஞான ரூபிணி 

நமோ நமஹ!

சுத்த ஸ்படிக ரூபமுடையவளே

சூக்ஷ்ம ரூபமுடையவளே

நமோ நமஹ

சப்தப்ரம்ஹி 

சதுர் கரத்தாள்

சர்வ சித்தி அருள்பவளே 

நமோ நமஹ


தலைப்பு இல்லை

ஸ்ரீ அகஸ்திய மகரிஷி சரஸ்வதி தேவியைத் துதித்த தியான ரூபங்கள் அனைவர் மனதிலும் பதியும்படி தமிழில் பதிவிடுகிறோம்!

வெறுமனே like ஐ மட்டும் தட்டிவிட்டுச் செல்லாமல் இவற்றைப் படிக்கும் போது ஏற்படும் மன உணர்வுகளை இங்கே பதிவிடுங்கள்! 

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்


அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 04

தபஸ்வினிகளால் அடையக் கூடிய 
அற்புத காந்தியுடைய தாமரை மலருடையாளே!
வெண்தாமரை ஆசனத்தில் பிரியமானவளே!
பெண்மைக்கு லட்சணமான அழகிய ஸ்தனமுடையாளே! 
அமைதி நிறைந்த தாமரை இதழ் போன்ற நயனங்கள் உடைய அந்த 
சரஸ்வதியை வணங்குகிறேன்!
ஞானமும் ஆற்றலும் மனதிற்குத் தரும்
மனஸ்வினி!
ஹே தேவி எமக்கு உனது அருளை மழையாகப் பொழிவாய்!

அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 02

நாற்கரத்தாள், ஜொலிக்கும் ஸ்படிக அக்ஷரமாலை

வெண்தாமரை ஏந்திய பின்னிருகரங்கள்

வித்தை அருளும் ஏடுகளும் கிளியும் ஏந்திய முன்னிரு கரங்கள்!

உனது வெண்மையின் ஜொலிப்பு மல்லிகையா?

முத்தா? சங்கினது ஜொலிப்பா? அல்லது ஸ்படிகத்தின் கதிர்ப்பா? 

இவையனைத்தும் சேர்ந்த ஒப்பிட முடியாத

வெண் பிரகாசமா?

உன்னை நான் துதிக்கிறேன்!

வாக்தேவதையே என் நாவில் உறைந்து நல்லருளைப் பொழிவாய்!


அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி தியானம் - 01

வெண்மல்லிகை நிறத்தாள்!
குளிர்மதி நிறை வெண்பனி ப்ரகாசம்!
முத்து ஒளிவீச தூய வெண்ணிற ஆடையுடுத்தி
வீணையேந்திய கரம் ஒன்று 
வரமருளும் மறுகரம்
வெண்டாமரையில் அமர 
பிரம்மனும் அச்சுதனும் சங்கரனும் தேவர்களும் 
சதா துதிக்கும் 
பகவதி சரஸ்வதி
எனது அறியாமையை முழுமையாக நீக்குவாய்!
{அகஸ்திய மாமகரிஷி அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம், முதல் ஸ்லோகம்}

தலைப்பு இல்லை

ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மகரிஷி!

ஸ்ரீ லலிதை லோபாமுத்ரமயி - அகஸ்தியமயி என்ற இரண்டு நாமங்களாலும் துதிக்கப்படுபவள்! 

அகஸ்தியமயமாகவும், லோபாமுத்திராமயமாகவும் இருப்பவள் அவளே என்பது இதன் பொருள்!


Thursday, October 22, 2020

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னத்தின் பாராயண பலன் - 06

எவரொருவர் தினசரி அதிகாலையில் இந்த எளிய ஐந்து சுலோகங்களை பாராயணம் செய்து வருகிறார்களோ அவர்கள்

1) ஸௌபாக்கியம் - குறைவற்ற இன்பம்

2) வித்தை 

3) ஞானம்

4) விமல சௌக்கியம் - குற்றமற்ற உலக இன்பம்

5) அழியாக் கீர்த்தி 

ஆகிய ஐந்து பேறுகளையும் தாமதமில்லா

மல் உடனேயே இவ்வுலக வாழ்க்கையில் பெறுவார்கள். 

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் (Uma Mohan version):

ஸ்ரீ லலிதா பஞ்சரத்தின தியானம் -05

ஹே தேவி லலிதே, நீ
காமேஸ்வரி - விருப்பங்களின் எஜமானி!
கமலேதி - தாமரையில் உறையும் லக்ஷ்மி!
மஹேஸ்வரி - மகேஸ்வரனுக்குப் பிரியமானவள்!
ஸாம்பவி - சிவமாகிய சம்புவை அடைவிப்பவள்
ஜெகதாம் ஜனனி - பிரபஞ்சத்தை பிறப்பித்தவள்!
தனக்கு மேல் எதுவுமில்லாத பரை
வாக்தேவதை - வாக்கினை உருவாக்குபவள்!
திரிபுரேஸ்வரி - முப்புரங்களின் தலைவி
இந்த அதிகாலையில் உனது இந்தப் புனிதத்திரு நாமங்களைச் சொல்லுகிறேன்! 
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் சுலோகம் 05 இன் பொருள்
{இந்த ஸ்லோகம் தேவியை ஒளியாக உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தியானிக்கும் அரிய இரகசியத்தைக் கூறுகிறது}

ஸ்ரீ லலிதா பஞ்சரத்தின தியானம் -04

திரியந்த வேதங்களால் அறியப்படுபவளும்

கருணையால் நிறைந்தவளும்

சகல பிரபஞ்சங்களினதும் சிருஷ்டி, ஸ்திதி, சம்காரங்களை நடத்தும் ஞானத்தின் அதிபதியும்,

வாக்காலும், மனதாலும் அடையமுடியாத 

தூரத்தில் இருக்கும் நித்தியமான, மங்கள வடிவினள்

அந்த வித்யேஸ்வரீ ஸ்ரீ லலிதையை இந்த அதிகாலையில் போற்றுக்கிறேன்!


Wednesday, October 21, 2020

திருமூலரும் அகத்தியரும்

{முற்பகுதி நேற்றுப் பதிவிடப்பட்டுள்ளது; கட்டாயம் படித்துவிட்டு இந்தப் பகுதியைப் படிக்கவும்}

பலமணி நேரம் தியானத்தில் கழிந்துவிட ஸோமன் எழுந்துவிட்டான்; மூலநாதர் இன்னும் தியானம் கலையவில்லை. அன்றைய தியானம் அவன் தனது குருவாகிய அகத்தியரின் யோகம் பற்றிய உண்மையை அறிந்ததால் மனம் மிகவும் குதுகலமாக இருந்தது! எழுந்து சென்று நீராடி தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தனது தினசரி தேவி பூஜைக்குத் தயாராகி வர மூலநாதர் தியானத்திலிருந்து விழிப்படைந்திருந்தார். 

என்ன ஸோமா பூசைக்கு தயாராகி விட்டாயா, அகத்தியரைப் பற்றி நாம் கூறிய இரண்டாவது பாடலிற்கு பொருள் கண்ட பின்னர் பூசைக்கு அமர்வாயாக; அது உன் அக அனுபவத்தை இன்னும் இனிமையாக்கும் என்று அன்புக் கட்டளையிட்டார். 

தங்கள் ஆணை என்று கூறிவிட்டு, கண்களை மூடி மூலநாதர் கூறிய பாடலை மனனிக்கத் தொடங்கினான். 

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

கண்களை மெல்லியதாகத் திறந்து, 

உடலில் காமாக்னி சுவாதிஷ்டானத்திலிருந்து ஒருவனின் பிராணனைப் போக்கிக் கொண்டிருக்கிறது; இதை ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும், அதுபோல் ஜடராக்னி மணிப் பூரகத்திலிருந்து மேலிருந்து கொட்டும் அம்ருதத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அக்னிகளையும் ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும். இந்த முறையைச் சொல்லித்தருவர் அகத்தியன் என்பதே அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன், அக்கினியை பிறப்பிக்கும் இடத்திலிருந்து வீணாகாமல் வளர்க்கும் உபாயம் அறிந்து மேல் நோக்கி வளரச்செய்யும் ஆற்றலும், அறிவும் உடையவர் அகத்தியர். 

கீழே இருக்கும் காமாக்னியும், ஜடராக்னியும் தோற்றம் பெறுவது மேலே ஆக்ஞாவில் இருக்கும் சிவாக்னியிலிருந்து, அதுவே அனைத்தினதும் தோற்றம், கீழிருந்து எம்மை பரிணாமத்தில் சுழற்றும் காமாக்னியும், ஜடராக்னியும் மேல் சென்று (பாலவன் - சிவன்) கலந்து சிவாக்னியில் மங்கவேண்டும்; இப்படி காமாக்னியையும், ஜடராக்னியையும் மேலெழுப்பி வடபுலமாகிய புருவமத்தியில் உள்ள சிவாக்னியில் கலப்பிக்கும் தவமுறை அறிந்த முனிவன் அவர்! இப்படி சிவாக்னியில் தன்னைப் பூரணமாக கலப்பித்ததாலே அவர் இந்தப்பிரபஞ்சத்தில் எங்கும் அறியப்படக் கூடிய ஆற்றலுடன் பேரொளியாக இருக்கிறார். 

சிவயோகத்தில் பூரணத்துவம் பெற்றதால் அவரை நினைக்கும் சாதகர்களுக்கு யோகத்தில் பூரணத்துவம் அருளும் பேரொளி என்று பொருள் ஐயனே! 

என்று முடித்தான் ஸோமானந்தன்! 

திருமூலநாதரின் முகம் சூரியப் பிரகாசமாக ஒளிர்ந்தது! ஸோம நாதா குருவின் திருவடியைத் தியானிப்பவர்களுக்கு குரு தனது யோகத்தில் சென்ற பாதைகள் எல்லாம் விளங்கும்! அத்தகைய சிறந்த பக்தியைக் கொண்டிருக்கிறாய்! எனது பரிபூரண ஆசிகள்! தற்போது உனது தேவி பூஜைக்குச் செல்! காலம் வரும்போது தேவி பூஜையின் இரகசியங்களையும் சொல்லித்தருகிறோம் என்று ஆசி கூறினார்!

திருமூல தேவரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கி ஸோமன் தனது பூஜைக்குத் தயாராகினான்!


ஸ்ரீ லலிதா பஞ்சரத்தின தியானம் -03

இந்த அதிகாலையில்

பக்தர்களுக்கு வேண்டியதைத் தருபவளும்,

சம்சார சாகரத்தைக் கடத்துவிப்பவளும்,

பிரம்மாதி தேவர்களால் துதிக்கப்படுபவளும்,

பத்மம், அங்குஸம், கொடி, சக்கரம் முதலிய

உத்தமக் குறிகளை தன்னுடலில் கொண்டவளுமான 

அந்த ஸ்ரீ லலிதையின் பாத கமலங்களை 

நமஸ்கரிக்கிறேன்!


Tuesday, October 20, 2020

ஸ்ரீ லலிதா பஞ்சரத்தின தியானம் - 02

அந்த ஸ்ரீ லலிதையின்

எண்ணுவதையெல்லாம் அருளும் 

அந்த கற்பகக் கொடிக் கரங்கள்,

ரக்தவர்ண மாணிக்கக் கற்கள் பதித்த மோதிரங்களும்

ரத்தின வளையல்களும் நிறைந்த 

இரு கரங்களில்

மலரம்புகள் கொண்ட ஒரு கரம்

அங்குசமேந்திய மறு கரம் 

இவை இரண்டையும் 

இந்த அதிகாலையில் தியானிக்கிறேன்!

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்


Monday, October 19, 2020

ஸ்ரீ லலிதா பஞ்சரத்தின தியானம் - 01

செம்மாதுள வர்ண உதடு

முத்துப் போல் ஜொலிக்கும் நாசிகள்!

காது வரை நீண்ட கயல்விழிகள்!

இரத்தினம் ஜொலிக்கும் குண்டலங்கள்

மந்தஸ்மிதம் எனும் இனிய அபூர்வப் புன்னகை

கஸ்தூரித் திலகமணிந்த பிரகாச நெற்றி

இத்தகைய லலிதையின் வதனத்தை இந்த அதிகாலையிலே தியானிக்கிறேன்!

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் - 01


Saturday, October 17, 2020

தலைப்பு இல்லை

இன்றைய மாலைப்பொழுது ஆர்வமுள்ள இளைஞர்களுடன் சூழலியலில் மனித மனம் எப்படி செயலாற்றுகிறது என்ற உரையாடல்!

Friday, October 16, 2020

தலைப்பு இல்லை

இன்றைய மானச யோக வித்யா வகுப்பில் ஒரு மாணவர் சித்தர்களின் பாடலிலிருந்து நாம் கற்கும் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற அந்தக் கரணத்திற்கான விளக்கம் கீழ்க் குறித்த பாடலின் மூலம் விளக்கும்படி கேட்டிருந்தார்!

காலாங்கி நாதர் பாட்டு;

மூத்தெனென்ற பெரியோர்கள் அறிந்து கொள்வார்கள்

முன்னவனை முன்னிறுத்தி என் பேர் சொல்லி

சித்தம் வைத்துப் புத்திக் கொண்டு உத்துப்பாரு

சிவசிவா வசியசிவா வென்றே சொல்லி

நித்தமும் அஸ்தஞ் சித்திரையாஞ் சோதி 

நீயறிவாய் 

நீ சோதியை உன்னுள் அறிய வேண்டுமானால், முன்னவன் என்ற சிவனை நினைவில் நிறுத்தி, குருவாகிய என் நாமத்தைச் சொல்லி, சித்தத்தை ஏகாக்கிரமாக நிறுத்தி, மனதில் எழும் எண்ணங்களை புத்தியைக் கொண்டு கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு வருவாய்! அஸ்தமனமாகாத சோதியை நித்தமும் காண்பாய்! என்பது இதன் பொருள்!

இதன் சிறப்பமிசம் என்னவென்றால் இது எப்படி எமது அந்தக் கரணத்தை இறை சக்தியில் நிறுத்தி சித்தி பெறுவது என்ற சூத்திரத்தை - இரகசியத்தைச் சொல்லித்தருகிறது. 

சித்தம் இறைவனில் ஒன்றியிருக்க வேண்டும்! அதேவேளை குருவின் நாமத்தினால் நாம் சிந்தையை நிறுத்த வேண்டும், இப்படிச் செய்யும் போது எமது சித்தத்தில் ஏற்கனவே இருக்கும் பதிவுகளின் படி சித்தம் விருத்திகளைக் கவனிக்கும் போது புத்தியைக் கொண்டு விழிப்புணர்வுடன் அவதானித்து அவற்றை நீக்கிக் கொண்டு மந்திர ஜெபம் செய்பவன் ஜோதி தரிசனம் என்ற சித்தியை அடைவான்! 

இன்றைய உரையாடல் இந்தப் பாடலில் ஆழமான விளக்கமான தெய்வ ஞானம் பெறல் (intution development) போன்ற கோட்பாடுகளைக் கூறுகிறது என்ற விபரம் உரையாடப்பட்டது!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25

ஹே ஜெகன்மாதா! பிரம்மத்தின் இயக்க சக்தியே!

அனைத்து மனங்களையும் இதயங்களையும் தூய்மைப்படுத்துபவளே!

ஆன்ம தேடலின் பலன் தரும் உயர்ந்த கனியாக

உன் பேரானந்தத்தை அளிப்பவளே!

சிவபரம்பொருளின் களிப்பூட்டும் நாயகியே

நீயே சிவபரம்பொருளை மயக்குபவள்!

இந்தப் புனித தினத்தில் உனது பாத கமலங்களின் 

நறுமண நிழலைத் தருவாயாக!


தலைப்பு இல்லை

நாளையுடன் 11 நாட்கள்! 
33 கவிதைகளுடன் இந்தப் பொதுப் பதிவுகள் முடிவுறும்! 
ராம் பிரசாத் சென் காளி கவிதைகள்
இன்னும் 300 கவிதைகள் மொழிப் பெயர்க்கப்பட உள்ளது!
இவற்றை எனது சொந்த ஆன்ம சாதனையாக தினசரி மொழிப் பெயர்க்க எண்ணியுள்ளேன்! 
பிறகொரு காலத்தில் மெதுவாக அவற்றை 
பதிவிடலாம் என்று எண்ணம்! 
இதை சுவைபட தொடக்கி வைத்த சாய் ராம்ஜி!
ஒவ்வொரு நாளும் அழகுபட அன்னையின் படங்களை Banner ஆக ஒழுங்குபடுத்தித்தந்த தம்பி விமலாதித்தன், மற்றும் ஆர்வத்துடன் படித்த அனைவருக்கும் பெரும் நன்றிகள்! 
இந்தப்பாடல்கள் உங்களுக்கு ஆனந்தத்தையும், நன்மையையும், அனுபவத்தையும் தந்திருக்கும் என்று நம்புகிறேன்!

Thursday, October 15, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 30

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

ஓ ஞானமாதா!

உனது சாரம் மட்டுமே இங்கு இருக்கிறது!

ஒவ்வொரு உயிற்குள்ளும்! ஒவ்வொரு செயலிலும்!

உனது பிராண சக்தி இந்தப்பிரபஞ்சம் முழுவதும் பரவிப் பாய்கிறது!

ஒரு சிறிய அசைவிலும் நீ முழுமையாக இருக்கிறாய்!

நான் எங்கு சென்றாலும்! எதைப் பார்த்தாலும்!

உன்னை மட்டுமே காண்கிறேன்! என் பேரின்பத்தாயே!

உனது இந்தத் தூய பிரபஞ்ச விளையாட்டு!

ப்ருதிவி, அப்பு, அக்னி, வாயு, ஆகாயம் இவற்றையெல்லாம் 

உணரும் உணர்வு இவையெல்லாம் 

உனது வெளிப்பாடுகள்!

வேறு எதுவும் இல்லை!

அம்மா, அம்மா, அம்மா!

நீ தெளிவான கனவின் ஒளி!

பிறப்பு இறப்பு என்ற இந்த நாடகத்தில்!

எல்லையற்ற பரிமாற்றத்தின் வெளிப்பாடு!

இந்தக் கவி மெய் மறந்த நிலையில் அழுகிறேன்!

பச்சை மலைகள்! நறுமண மலர்கள்!

இந் நிலத்திலும் கடலிலும் வாழும் எண்ணற்ற உயிர்கள்

உயிரற்ற அசேதனப் பொருட்கள் சேதனப் பொருட்கள்

அன்னையின் மெய்மையிலிருந்து உருவாகிறது!

அனைத்தும் அன்னையின் இச்சா சக்தியின் தன்னிச்சை வெளிப்பாடுகள்!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 29

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

ஜெகன்மாதா!

அனைத்தையும் நீடித்து நிலைத்திருக்க வைப்பது நீயே!

அனைத்துப் படைப்புகளையும் நுண்மையாகப் போசிப்பதும் நீயே

என்னைப் போஷிப்பாய்! புனிதத்தாயே!

எனது ஒவ்வொரு பசியையும் திருப்திப்படுத்துவாய்!

பசியுள்ள குழந்தைக்கு தாய் எப்போதும் உணவு தருவாள் என்பதை நானறிவேன்!

அக்குழந்தை மூடனோ, தன்னைக் கவனியாத பிள்ளை என்று பாராமல்

காளி தேவியே, இந்தப் பாடலைப் பாடும் இந்தக்குழந்தைக்கு

உனது உயர் ஆசிகளையும், 

பூரண பேரொளியையும் தா!

இன்று மிகப்புனிதமான நாள்!

எனவே தாமதமின்றி இன்றே தா தாயே!

தாரா தேவியே!

எனது உண்மையை அடையவேண்டும் 

என்ற பசியின் வேதனை

தாளமுடியாமல் போய்க் கொண்டிருக்கிறது!

அன்னையே! அன்னையே! அன்னையே!

நீயே ஏங்குவதும் ஏங்கப்படுவதும்!

இந்தக் குழந்தையின் ஆர்வமுள்ள

இந்தப் பிரார்த்தனையை நீ மறுக்க முடியாது


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 28

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
**************************************************
அன்னையே, அன்னையே, அன்னையே!
ஒவ்வொரு உயிரையும் விழிப்புணர்வடையச் செய்து முக்தி தருபவள் நீ
என்மீது உன் அருட்பிரபாவத்தைப் பொழிவாயாக!
உன் பேரொளியை!
நான் எளியவன், உன்னை அடையக் கூடிய விஷேட தகுதிகள் எதுவும் அற்றவன்
எனது தினசரி பிரார்த்தனைகளில் செம்மை இல்லை! 
என் பேரின்பத் தாயே! 
நீ மாத்திரமே என்னை விழிப்படையச் செய்ய முடியும்!
இந்த மாற்றமுறும் கனவிலிருந்து,
இந்த காலம் எனும் மாய நாடகத்தில்!
பெருங்கருணைத் தாயே தாரா!
அனைத்து உயிர்களையும் உண்மையை நோக்கி 
மென்மையாய் கடத்துபவளே!
உனது பாதகமலங்கள் எனும் ஞானமே 
பிறப்பிறப்பு எனும் பெருங்கடலைக் கடக்க வைக்கும் ஓடம்!
பரம இரகசியத்தாயே காளீ!
பரமார்த்திக ஞானத்தின் துணையே
இங்கே எழுந்தருள்வாய்! என்னை ஏற்றருவாய்!
இந்தக்கவியின் மீது அருள் புரிவாய்!

தலைப்பு இல்லை

யமக அணியில் புலியூரந்தாதி பாடி சிதம்பரத்து நடராஜரைப் புலியூரானாகத் துதித்த, யாழ்ப்பாண வைபவமாலை பாடிய மாதகல் மயில்வாகனப்புலவர் அப்பம்மாவிற்கு பூட்டனார் முறை! 

தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அம்மம்மாவிற்கு சித்தப்பா! பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய தமிழ் புலவர்! தமிழ்க்கடவுள் முருக உபாசகர்!

அப்பாவும் முன்னோர்களும் தமிழிற்கு இலக்கணம் வகுத்த பொதிகை முனி அகத்திய மகரிஷியைக் குருவாகக் கொண்டவர்கள்! 

இவன் பிறந்த போது அம்மம்மா தூக்கி "புலவரின் மகன் நடராசரைப் போல் வருவான்" என்று கூறினாராம்! 

நடராசனார் சோமசுந்தரப்புலவர் மகன்! பல நூல்களை மொழி பெயர்த்தவர்! குறிப்பாக வல்பொல ராகுல தேரரின் "What The Buddha Taught" என்ற உலகப் புகழ் பெற்ற நூற்களை தமிழில் மொழிப் பெயர்த்த பெரும் அறிஞர்! அம்மம்மா வாழ்த்தியது போல் நடராசனாரின் பௌத்த ஆர்வமும் இவனைப் பற்றிக் கொண்டது! 

எல்லா ஜீனும் கலந்து சஜீதரனாக என்னுடன் வந்து பிறந்திருக்கிறான்! வீட்டிற்கு வருபவர்கள் இருவரும் ஒருவரா என்ற தோற்ற மயக்கம் ஏற்படும் உருவ ஒற்றுமை கொண்டவர்கள் நாம்! 

தமிழ்த்தாய் அந்தாதி எழுதி ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டில் எமது மகாராணி அம்ருதவர்ஷினி முன்னிலையில் அரங்கேற்றினார்! 

இன்று சதீஷ் ராம்தாஸ், காவ்யா, திலோஜனின் உழைப்புடன் இயல், இசை, நாடகமாக கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தாக, காணொளியாக வந்திருக்கிறது! திலோஜனை மாத்திரம் ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன்! மற்றவர்கள் கேள்வியால் அறியப்பட்டவர்கள்! அடக்கமும் அமைதியும், ஆழமும் உடைய கலைஞன் திலோஜன், இயற்கைச்சூழலை தனது கமெராவிற்குள் கவ்விக்கொள்ளும் நுணுக்கம் எப்போதும் நான் இரசிப்பது!

வாழ்த்துக்கள்! தமிழன்னையின் ஆற்றல் எல்லோர் மனதிற்கும் இன்பம் அளிக்கட்டும்!


தலைப்பு இல்லை

காளி கவிதை கவியின்பம் ஆரம்பமாகி பத்து நாட்கள் பூர்த்தியாகப் போகிறது! 

   


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

*************************************************

ஹே ஜெகன்மாதா! பிரம்மத்தின் இயக்க சக்தியே!

அனைத்து மனங்களையும் இதயங்களையும் தூய்மைப்படுத்துபவளே!

ஆன்ம தேடலின் பலன் தரும் உயர்ந்த கனியாக

உன் பேரானந்தத்தை அளிப்பவளே!

சிவபரம்பொருளின் களிப்பூட்டும் நாயகியே

நீயே சிவபரம்பொருளை மயக்குபவள்!

இந்தப்புனித தினத்தில் உனது பாத கமலங்களின் 

நறுமண நிழலைத் தருவாயாக!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

*************************************************

ஹே ஜெகன்மாதா! பிரம்மத்தின் இயக்க சக்தியே!

அனைத்து மனங்களையும் இதயங்களையும் தூய்மைப்படுத்துபவளே!

ஆன்ம தேடலின் பலன் தரும் உயர்ந்த கனியாக

உன் பேரானந்தத்தை அளிப்பவளே!

சிவபரம்பொருளின் களிப்பூட்டும் நாயகியே

நீயே சிவபரம்பொருளை மயக்குபவள்!

இந்தப்புனித தினத்தில் உனது பாத கமலங்களின் 

நறுமண நிழலைத் தருவாயாக!


Wednesday, October 14, 2020

தலைப்பு இல்லை

Hey Friends, remember I am also an Environmentalist! Don't forget to see my other side only by reading my FB posts!! 

Here my talk to youngsters who are passionate on environmental issues and sustainability! I am going to share some of my experience and knowledge with them on coming Saturday!

***********************************

You are invited to a Zoom meeting. 

When: Oct 17, 2020 04:00 PM Mumbai, Kolkata, New Delhi 

Register in advance for this meeting:

https://us02web.zoom.us/.../tZcqfuGorDouEtaQmiXgnrWutHRV6... 

After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

**********************************

காளி கருமை நிறந்தவளா?

***********************************

ஏன் அன்னை காளி கருமையாய் ஒளிர்கிறாள்?

அவள் மிக ஆற்றல் வாய்ந்தவள் என்பதால்,

அவள் நாமத்தை கூறுவதே மாயை அழிக்கும் என்பதால்

ஏனென்றால் அவள் மிக அழகானவள்!

எம்பெருமான் சிவன், மரணத்தின் மரணம்

வெல்லப்பட்டு அவள் சிவந்த பாதங்களில் பேரானந்தத்தில் 

மூழ்கிக்கிடக்கிறார். 

அவள் கருமையாக இருந்தாலும் அதில் நுண் கதிர் ஒளிர்கிறது

இந்தக்கருமையில் அவள் தேகம் எப்படி ஒளிர்கின்றது என்ற பரம இரகசியம்

அது மிகப்பெரும் கருமை, அற்புதமான கருமை

அவள் ஹ்ருதயத்தின் இரகசியக் குகையில் விழித்தெழுந்தால் 

அந்தக்கருமை வித்தியாசமான ஒளியாக மாறுகிறது

அது துவாதச கமலத்தை மலர்விக்கிறது!

அது இன்னும் செறிவாக பொன்னிறமாக மாறுகிறது

அவளது அந்த அன்பு மிகுந்த தோற்றம் எதனுடன் ஒப்பிடமுடியாது

காளி அந்த யமனிலும் கருமையிலும் கருமையானவள்

இந்த ஒளிரும் கருமையில் விழியைச் செலுத்தியவர்கள் 

அவள் மேல் தீரா அன்பால் வசப்படுவர்!

உலகின் மற்றெந்த வஸ்துவின் மேல் கவர்ச்சியேற்படா மனம் பெறுவர்!

அவளையே எங்கும் காண்பர் 

இந்தக் கவி ஆழமாகப் பாடுகிறேன்,

எங்கே இந்தப் பிரகாசமான பெண்,

இந்தக் கரும் ஒளி ஒளிர்தலுக்கும் அப்பாலுள்ளது

ஆகவே நான் அவளை எப்போதும் கண்டதில்லை!

அவள் நாமம் மட்டுமே அறிவேன்

மனம் முழுதும் கரைந்து அவள் உணர்வாகிறேன்!

ஓம் காளி! ஓம் காளி! ஓம் காளீ!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 25

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***************************************************

யார் அறிவார் புரிவார் காளியை?

**********************************************

இவ்வுலகில் யார் அறிவார் புரிவார் 

உண்மையில் காளி யார் என்று?

ஷட்தரிசங்களும் அவளைப்பற்றி விபரிப்பதில்

சக்தியற்றுப்போகின்றது. 

அவள் மிக ஆழமான விழிப்புணர்வு

உணர்வு மாத்திரமே இருப்பாயிருக்கிறது என்று 

அறிந்த முனிவர்களுக்கு அறியக்கூடியவள்.

இந்தப் பிரபஞ்சப் படைப்பில் 

உயிப்பாய் மிளிர்பவள்

அண்டமும் பிண்டமும் 

அன்னையின் கருப்பையில் அடங்கிவிடுகிறது

இப்போது அறிவாயா அவள் விபரிக்க முடியாதவள் என்று!

அவளை ஆறு ஆதாரத்தில் தியானிக்கும் யோகிக்கு

அவள் இந்த ஆதியான மனித உடலின் தாமரைக் காட்டிற்குள் 

ஆனந்த விளையாட்டைக் காட்டுகிறாள், 

தனது நாதரான மஹா ஹம்ஸ 

சிவத்துடனான விளையாட்டின் மூலம்.

எவராவது அவளை அறிய முயல்கிறேன் எனக்கூறும் போது

இந்தக் கவியைப் பாடும் கவி சிரிக்கிறேன் 

உன்னால் கரைகளற்ற சமுத்திரத்தை நீந்திக்கடக்க முடியுமா?

ஆனால் என்னுள் இருக்கும் சிறு குழந்தை 

சந்திரனைத் தொட முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறான்!


Tuesday, October 13, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 24

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
***************************************************
விழிப்புணர்வின் வைர சாரம்
**********************************************
அன்னை தாரா, நீயே உண்மையில் உயர்ந்தவள்,
விழிப்புணர்வின் சாரம்!
ஆனால் நீ இந்தப்பாடலைப் பாடும் இந்த மூடகவியை அறிவாயா?
நீ உண்மையில் சத்தியம் எனும் பிரகாசமான ஒளிக்கதிர்!
சூரியனில் காலைப் பனி கரைவதுபோல் இந்த ஆன்மாக்களின் துன்பங்கள் கரைந்து போகும், 
சரி, எனது தொடரான துன்பங்களைப் பற்றி என்ன சொல்கிறாய்?
சிரத்தையான சாதகனுக்கு அனுபவம் சித்திக்கும் 
அந்தப்பிரபஞ்ச அன்னையிடமிருந்து,
ஆனால் எனக்கு அன்னை என்ன தந்திருக்கிறாள் பாருங்கள்!
காலைத் தியானத்தில் இன்றைய வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்ற சிந்தை
பகல் பிரார்த்தனையில் ருசியான சாப்பாடு என்ன என்ற சிந்தனை!
மாலை சாதனைக்கு அமர்ந்தால் 
அன்று முழுவதும் நடந்தவற்றை அசைபோடும் மனம்!
தாரா தேவியே, உன்னிடம் வெளிப்படையாகக் கேட்கிறேன்!
இந்த பிளவுபட்ட உணர்வினை இனி என்னில் ஏற்பட விடுவாயா?
உனது உண்மை சொரூபத்தை தொடந்து காணும் நிலையை ஏற்படுத்த மாட்டாயா?
ஆனால் நீ கொடுத்திருப்பதோ தன்னிச்சையாக மாநாடு நடத்தும் மனதை!
நான் இந்தக் கவர்ச்சியான பார்வையால் தொடர்ச்சியாக கவ்வப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
நான் அதிகம் எனது எண்ணத்தில் மூழ்கும்போது உணர்ந்துகொண்டேன்
உன்னை சிந்திப்பதால் அறிந்துகொள்ள முடியாது என்று! 
பேரின்பப் பெருந்தாயே! நீ வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவள்!
இந்த ஆற்றொணச் சாதகன் அழுகிறேன்:
அம்மா, அம்மா, அம்மா 
ஹிமவான் மகளே
உன் நடனம் உணர்தலின் நுண்ணறிவைத் தருகிறது!
ஆனால் அதை நான் கிரகிக்க முனையும் போதெல்லாம்
அந்த வைரசாரமான விழிப்புணர்வு
வெறுங்கல்லாக மாறிப்போகிறது!

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 23

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***************************************************

காளிதரும் யோக நித்திரை

***************************************************

அனைவருக்கும் ஒரு முறை வாய்க்கும் 

இந்த அனுபவம்

இதை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன்;

யார் இதை நன்கு தெரிந்தவரோ அவரிமிருந்து.

நான் பாவனையின் இரகசியத்தை கற்றுக்கொண்டேன்!

ஒரு நாட்டிலிருந்து ஒரு மானிடன் என்னிடம் வந்தான்,

அந்த நாட்டில் நள்ளிரவு இல்லை

பிறகெப்படி இனி நான் இரவு, பகல் இரண்டையும் பிரித்தறிவேன்!

நான் வளர்த்த பக்தியும் பூஜையும் அனைத்து பலனற்றுப்போனது இந்நிலையால்!

எனது தூக்கம் தொலைந்து போனது;

நான் எப்படி இனித்தூங்குவேன்?

தற்போது நான் தூக்கமற்ற யோகத்தில் பெரும் விழிப்புணர்வு பெற்றுள்ளேன்!

தெய்வீக அன்னையே

எனக்கு இறுதியாக யோக நித்திரையைத் தருவாய்!

எனது தூக்கமே! நான் என்றென்றும் தூங்கத் தத்தளித்தேன்!

நான் தலைவணங்குகிறேன்! பிரசாத் கூறுகிறேன்,

விருப்பு, விடுதலை ஆகியவற்றிற்கு முதல்

காளியின் இரகசியத்தை அறிதலே 

உயர்ந்த பிரம்மத்தில் ஒன்றுதலாகும்!

இதை அடைவதற்கு அனைவரும் எண்ணும் 

புண்ணியம், பாவம் இரண்டையும் நிராகரித்தேன்!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 22

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

**********************************************

காசிக்கு செல்வதில் இனி என்ன பயன்?

**********************************************

நான் காசிக்குச் செல்வதில் இனி என்ன பயன்?

அன்னையின் திருவடிகளில் கயை, கங்கை, காசி இருக்கிறதல்லோ?

நான் பேரானந்தக் கடலில் நீந்துகிறேன்

அவளை எனது இதயத்தாமரையில் தியானித்துக்கொண்டிருக்கிறேன்!

காளியின் பாதங்கள் செந்தாமரைகள்

அங்கே எல்லா புனிதத் தலங்களும் இருகிறதோ 

அந்தத் திருவடியை

காளியின் நாமத்தால் அனைத்து பாவங்களும் அழிக்கப்படுகின்றது

அக்னியில் விழுந்த பருத்திப் பஞ்சுகள் போன்று

தலையற்ற மனிதனுக்கு எப்படித் தலைவலி வரும்?

மானிடர் எண்ணுகின்றார்கள் தமது முன்னோர்களுக்கான 

நீத்தார் கடனை கயையில் பிண்டம் 

கொடுத்துக் கழிக்கலாம் என்று

ஆனால் காளியை தியானிப்பவன் 

எவனாவது கயைக்குச் செல்வான் 

என்றால் அவனைப் பார்த்துச் சிரிப்பேன்!

காசியில் இறப்பவனிற்கு முக்தி என்பதை சிவனார் உறுதிப்படுத்துகிறார்!

ஆனால் பக்தியே அனைத்திற்கும் ஆதாரம்;

ஹே, மனமே இரட்சிப்பே அதன் பாதுகாப்பு!

அப்படியானால் நிர்வாணத்தின் பலன் என்ன?

நீர் நீருடன் கலக்கும்!

ஹே, மனமே, சக்கரையாதல் உவப்பல்ல!

நானோ சக்கரை உண்பதிலேயே ஆவலாக இருக்கிறேன்!

ராம்பிரசாத் கலங்குகிறேன்,

அந்தக் கருணையுள்ள தாயின் ஆற்றலால் 

அவளை தியானி, யார் அறுந்த கபாலங்களை மாலையாக அணிந்தவளோ, நாற்புருடார்த்தங்களைக் கைகளில் தருபவளோ 

அவளைத் தியானிப்பாயாக!


முரண்படுபவர்களுடன் வேலை செய்யுங்கள்

நீங்கள் ஒரு விஷயத்தை நல்லது என்று ஆழமாக நம்பிக்கொண்டிருக்கீறீர்கள்; அப்போது அதேபோல் நம்பும், உங்களை ஆதரிக்கும், ஒருவரைக்காணும் போது நீங்கள் பூரித்து உங்கள் காரியம் நடக்கும் என்று நம்பத்தொடங்குவீர்கள்!

இப்படி அவர்கள் நடப்பது இரண்டு காரணங்களுக்காகவே எப்போது இருக்கும்;

1) அவர்கள் உண்மையில் உங்கள் நம்பிக்கையை ஆழமாக நம்பி அதற்காக ஒத்திசைபவர்களாக இருப்பார்கள்.

2) இல்லையென்றால் உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்களாக, அல்லது உங்கள் அதிகாரம், ஆற்றலுக்கு பயந்தவர்களாக உங்களை வீணாக சீண்டினால் அவர்களுக்கு ஆபத்து என்று எண்ணும் எண்ணத்திற்காக உங்களுக்கு முகஸ்துதி செய்பவர்களாக இருப்பார்கள். 

இப்படியான இரண்டு நபர்களும் உங்களைச் சூழ இருக்கும்போது உங்கள் மனப்பாங்கு போதையேறும்; அதீதமாக உங்களை நம்பத்தொடங்குவீர்கள்! நீங்களே உங்களை சிங்கமாகவும், ராஜாவாகவும் எண்ணத்தொடங்கி பெருமிதமடையத் தொடங்குவீர்கள்! இது இறுதியில் உங்களை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. 

இதேவேளை நீங்கள் சந்திக்கும் நபர் உங்களது கருத்துக்களை, பெறுமதிகளைக் கொண்டிருக்கவில்லை, பிரச்சனைக்குரியவர் அவர் உங்களுக்குத் தொல்லை தருபவராக இருக்கலாம். அவரது கருத்துக்காகத்தான் நீங்கள் வேலைசெய்ய வேண்டி வரலாம். 

ஆனால் இது உங்கள் எண்ணத்தை, யோசனைக்கு புதுப்பரிணாமம் கொடுக்கும்; நீங்கள் உங்கள் குறுகிய எண்ணத்திற்குள் இருந்து செயலாற்றுவதை உடைத்து புதுப்பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும்; அதனால் நீங்கள் புதியதொரு நிலையைத் தேர்ந்தெடுப்பீர்கள்! அந்த நட்பு வாழ்க்கை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்! 

எமது மனத்தைத் திறந்து உங்கள் ஆற்றலை மேம்படுத்தும். உங்களுக்கு "ஆமா சாமி" போடுபவர்களை விட உங்களை எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்கள், பிரச்சனை கொடுப்பவர்களுடன் வேலைசெய்யும் சந்தர்ப்பம் மனதிற்கு பொன்னான புதிய புரிதல்களைத் தரும் தருணம்!


தலைப்பு இல்லை

Six years ago! talk in Indian cultural Center  

Monday, October 12, 2020

தலைப்பு இல்லை

காலத்தைக் காலி செய்பவள் காலி - காளீ! 

காளியைப் பற்றி தொடராக ஏழு நாள் நேரந்தவறாமல் சங்கல்பித்த படி எழுதும் வாய்ப்பு அவளருளால் தான் அன்றி வேறில்லை! நவராத்ரி தொடங்கும் வரை இதை எழுதுவது என்பது எண்ணம்! யாரறிவார்! இந்த விளையாட்டு எங்கு செல்லப்போகிறது என்று?

ராம்பிரசாத ஸென் கவிதைகள் 21 இதுவரை பகிரப்பட்டுள்ளது! 

படித்தவர்கள் உங்கள் கவிதையனுபவத்தைப் பகிருங்கள்! அவை மலர்களிற்கு மணம் போல் இந்தத் தளத்தில் உற்சாகம் பரப்பும்!

படித்தவர்கள், அனுபவித்தவர்கள் சிறு ஒரு வரி பின்னூட்டத்தை, உங்கள் அனுபவத்தைப் comment ஆக பகிருங்கள்!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 21

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***********************************************************

மரணத்தின் பிறகு என்னவாகிறோம், கூறுவாய் சகோதரா?

***********************************************************

மரணத்தின் பிறகு என்னவாகிறோம், கூறுவாய் சகோதரா?

முழு உலகமும் இதுபற்றித் தர்க்கம் புரிகிறது

சிலர் நாம் பேயாகிறோம் என்பர்!

சிலர் சொர்க்கம் செல்கிறோம் என்பர்

சிலர் இறைவனுக்கு அருகில் செல்கிறோம் என்பர்,

வேதங்களோ நீ நெய்பூசப்பட்ட பாத்திரத்தில் தெறிக்கும் 

ஆகாயமாக இருக்கிறாய் என்கிறது!

சூனியத்தின் பாபமும் புண்ணியமும் பார்த்தால்

ஒன்றுமில்லை என்று முடிகிறது.

உடலில் வாழும் பஞ்சபூதங்களும் 

இறப்பில் அவற்றின் வழி கரைகிறது

பிரசாத் கூறுகிறேன்;

சகோதரனே, நீ முடிவடைகிறாய்.

எங்கிருந்து ஆரம்பித்தாயோ, 

அதை நீ பிரதிபலித்து! 

நீரிலிருந்து எழுந்து

நீரில் கலந்து 

நீராகிறாய்!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 20

{தாந்திரீக ஞானப்பாடல்கள்

*****************************************************

அவள் எனது இதயத்தில் விளையாடுகிறாள்!

****************************************************

அவள் எனது இதயத்தில் விளையாடுகிறாள்

எதை நான் சிந்திந்தாலும் அவள் நாமத்தை சிந்திக்கிறேன்!

நான் கண்களை மூடினால் அவள் உருவம் அங்கிருக்கிறது

கபால மாலையுடன் 

யதார்த்த புத்தி அழிந்து போனது

அனைவரும் என்னைப் பைத்தியம் என்கிறார்கள், பரவாயில்லை!

நான் கேட்பதெல்லாம், என் பைத்தியக்காரத்தாயே!

என்னை இப்படியா வைத்திருப்பது?

ராம்பிரசாத் அழுகிறேன்;

நீ வசிக்கும் இந்த இதயத்தை நிராகரித்து விடாதே!

இந்த மானிடன் உன் பாதங்களில் தரும் 

காணிக்கையை நிராகரித்து விடாதே!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 19

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***************************************************

அன்னையே, நீ யார்?

அன்னையே, யார் உன்னுடைய மாயாஜாலங்கள் பற்றி உண்மையில் அறிவார்கள்?

நீயொரு பைத்தியக்காரப் பெண்

இந்த மாயாஜாலங்களால் எம்மையெல்லாம் பைத்தியமாக்கிக்கொண்டிருப்பவள்!

யாருமே அறிந்திலர், அறிந்தவரும் எவருமிலர்!

இந்த உலகில் உன்னுடைய மாயையை!

காளியின் தந்திரங்கள் மிகவும் திறமையானவை

நாம் காண்பவற்றின் படியே நடக்கிறோம்!

பின்னர் துன்புறுகிறோம்

அனைத்தும் இந்தப்பைத்தியக்காரப் பெண்ணால்!

யாரறிவார்

அவள் உண்மையில் என்னவென்று?

ராம் பிரசாத் கூறுகிறேன்;

அவள் தயை கூர்ந்தால் இந்தத்துன்பம் கடந்து போகுமென்று!


தலைப்பு இல்லை

 Devi! 

You will create me, for the purpose of 

Spreading the smile and love  everywhere! And,

Get Into the business of Happiness as inspired by my Amrita - Nectar! 

Empower me to uplift myself and whoever surrounded!

To work for your beautiful universe! 

let's Join to the mission SRISTI! 

தேவி!

என்னை நீ உருவாக்குவாய்,

புன்னகையையும் அன்பையும்  எங்கும் பரப்ப!

ஆனந்தம் எனும் வியாபாரம் செழிக்க!

எமது அம்ருதாவினால் ஈர்க்கப்பட்ட உத்வேகம் அது!

சக்தி கொடு! என்னையும் என்னைச் சூழ உள்ள 

மற்றவர்களையும் உயர்த்த 

உன் அழகிய பிரபஞ்சத்திற்காகப் பணிபுரிய!

சிருஷ்டியுடன் இணைந்திருங்கள்!


Sunday, October 11, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 18

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***********************************

இதயச் சிறையில் காளியைச் சிறைப் பிடித்தல்

************************************

ஹே மரணமே விலகிச் செல்; உன்னால் என்ன செய்ய முடியும்?

என்னிடம் சிறைப்பிடிக்கப்பட்ட அன்னை காளி இருக்கிறாள்

அவள் பாதத்தை எனது மனதில் கட்டி வைத்திருக்கிறேன்!

இதயத்தில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறேன்!

அவளை வைத்து இதயக்கமலத்தை மூடி மனதை சஹஸ்ராரத்தில் இருத்தியிருக்கிறேன்!

இதயத்தை குல குண்டலினியிடம் ஒப்படைத்திருக்கிறேன்!

இந்த கட்டிலிருந்து அவள் தப்ப முடியாது;

எனது பக்தி எனும் காவல்காரனிடமிருந்து அவள் எப்போதும் தப்ப முடியாது;

எனது இரு கண்களை வாயில்காப்போன் ஆக்கியிருக்கிறேன்.

இதனால் என்னைச் சுரம் தாக்கும் என்பதை நானறிவேன்;

ஆகவே நான் எனது குரு தந்த மருந்தினை உண்டிருக்கிறேன்

-சர்வரோக நிவாரணி!

மரணமே! நான் எனது பெருமையைத் தாழ்த்திக்கொண்டேன்

நான் எனது சொந்தப் பயணத்தை ஆரம்பிக்கத் தயாராகி விட்டேன்

காளி! காளி! காளி!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 17

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

**********************************************

திருவடி உரிமைக்கான வழக்கு!

********************************************

என்ன அற்புதமான உரையாடல்! அன்புச் சண்டைக்குரிய பாவத்தினை, மொழியினை அழகாகத் தந்து அனுபவிக்கச் செய்கிறார் ராம்பிரஸாத் ஸென்! 

காளியுடன் வழக்காடி ஒரே hearing இல் வெல்லுவேன் என்று சவால் வேறு! கவிதைப் படித்து முடிக்கும்போது வழக்காடி வென்றுவிடும் அன்பு பொங்குகிறது

*************************************************************

அன்னையே, நான் எண்மாதமேயான மெலிந்த சிறுகுழந்தை

உன் சிவந்த நயனங்களை என்னைப் பயமுறுத்த முடியாது!

எனது செல்வமோ உனது தாமரைப் பாதங்கள்!

எதை சிவனார் தன் மார்பில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறாரோ அது!

நான் எனது பாரம்பரியச் சொத்தாகிய அந்தப்பாதங்களைக் கேட்டால்

ஒவ்வொரு முறையும் சாக்குப் போக்கும் தாமதமும் தான் கிடைக்கிறது

உனது பாதத்திற்கான உரிமைப்பத்திரம் என் இதயத்திடம் இருக்கிறது!

அது உனது கணவர் சிவனாரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது!

நான் உன்மீது வழக்குத் தொடுப்பேன் கவனம்! அப்படியொன்று நடந்தால் ஒரேயொரு விசாரணையில் கட்டாயம் வெல்வேன்.

நீ இதற்காக என்னை எதிர்த்தால்,

நான் எந்தத்தாயின் மகன் என்பதைக் கற்றுக்கொள்வாய்!

இது ஒரு கசப்பான வழக்கு தாயிற்கும் அவள் மகனிற்குமிடையில்

என்னவிதமான விளையாட்டு இது ராம்பிரசாத்!

நான் உன்னைத் துன்புறுத்தவதை நிறுத்தமாட்டேன்!

இந்தச் சண்டையின் பலன் கிடைக்கும் வரை

நீ என்னை உன் மெல்லிய கரங்களால் பற்றும் வரை!

ராம்பிரசாத் ஸென்

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 16

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***********************************************

இந்தப் பாடல் உண்மையில் சாக்தர்கள் என்று வெளியே முத்திரை குத்தப்படுவர்கள் சிவத்தை எப்படி வழிபடுகிறார்கள் என்ற இரகசியத்தைக் கூறுகிறது! 

காளியை தியானிப்போம்? பயம் ஏன்?

காளியை தியானி? பயமேன்?

அறியாமை இருள் முடிந்தது; இது உதிக்கும் நேரம்,

சூரியன் உதிக்கின்றான், அடர்ந்த இருள் வலைகள் அறுந்து தெறிக்கின்றன

தாமரை மலர்கின்றது! 

தலையுச்சியில் இருக்கும் சிவனாருக்கு நன்றிகள் பல!

வேதங்கள் உன் கண்களில் தூசினை நிரப்பும்!

ஆறுதத்துவ தரிசனங்கள் உன்னைக் குருடாக்கும்!

கிரகங்கள் அவளை ஆழங் காணமுடியாது!

யார் இந்த வேடிக்கை விளையாட்டை உடைக்க முடியும்!

இந்த பேரின்பச் சந்தையில் குருவோ, சிஷ்யனோ, வித்தையோ எதுவுமில்லை

அவளே நடிகர்களை, மேடைகளை, கதையின் சொந்தக்காரி!

அவளே அனைத்தாகவும் இருக்கிறாள்!

பிறகு இந்த நாடகத்தின் உண்மையை யாரால் உணரமுடியும்?

தைரியமான அவளது சாரம் அறிந்த அவள் உபாசகன் மாத்திரமே 

அந்தக் கோட்டையுள் நுழைய முடியும்!

ராம்பிரசாத் கூறுகிறேன், எனது அறியாமை உடைந்தது!

யார் தீயினை மூட்டுவார்? 

ராம்பிரசாத் ஸென்

தமிழி: ஸ்ரீ ஸக்தி சுமனன்


தலைப்பு இல்லை

***************************************

ராம்பிரசாத் சென்னுக்கு மாத்திரம் எப்படி இப்படி கவிதை எழுத வருகிறது, நானும் எழுத வேண்டும் என்று அன்னையிடம் கோவிக்க சரி நீயும் எழுதிப்பார் என்று கூறினாள்! இங்கிருக்கும் கவிஞர்கள் என்னை மன்னிப்பார்களாக!

****************************************

குருவென்ற மாமரம்

***************************

குருவென்ற மாமரம்!    

குருவென்ற மாமரம் பரந்து விரிந்து சூரியனை ஈர்த்து

பூத்துக் காய்த்து கனிதரும்! 

கனிகள் நாடி பறவைகள் பல வரும்!

பூக்கள் நாடி தேனீக்கள் படையெடுக்கும்!

பறவைகள் சதையை உண்டு விதைகள் பரப்பும்!

உண்டு உறங்கிக் களிக்கும்! 

பறவைகள் பழத்தை உண்பதால் மரமாவதில்லை!

பறவைகள் பழத்தை உண்ட கடன் விதை பரப்புவதில் செலுத்தும்! 

கல்லெறியும் மானிடர்கள் வருவர் பழம் தேடி!

சதை தின்ற பின் விதை மரமாக நினைப்பவர் மிகச்சிலர்!

ஆகா பழம் அருமை என்று விதை பற்றி எண்ணாமல் 

குப்பை என்று எறிவோர் பலர்!

நல்ல நிழல் என்று ஊஞ்சல் கட்டி ஆடுவோர் சிலர்!

சுவையான பழம்தரும் மரம் 

எனக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணும் சிலர்!

வீட்டுமுற்றத்தில் கஞ்சல் கொட்டும் மாமரம் 

என்று வையும் சிலர்!

ஆனால் மாமரமோ பூத்து, தேன்பரப்பிக் காத்திருக்கும் 

தன் சந்ததி வளர்க்கும் மகரந்தத்திற்கும், 

தேன் குடித்து மகரந்தம் பரப்பும் தேனிக்காகவும்

குருவான மரம் தேடுவதோ 

தேனீக்களையும் மகரந்தங்களையும்!

மகரந்தம் தன்னை பூவில் சரணடைக்கும்

பறவை பலன் பெறும், மரம் பரவ தாம் அறியாமல் உதவி செய்யும்!

தேனீ தேன் பெறும் தன் கடன் கழிக்க

மகரந்தம் சேர்க்கும்! சந்ததி வளர்க்கும்!

பறவையும் தேனியும் மரத்தின் மணம் பரப்பும்

அணுக்கச் சீடர்!

பழம் உண்டு விதை சூப்பி ஆணவத்தில் களிக்கும் 

மானிடரில் நன்றியுணர்வுடன் விதை பரப்புவர் சிலர்!

விதை பரப்பா மானிடருக்கு 

மரம் பழத்தை மறுப்பதில்லை! 

அம்மானிடரையும் பழம் தந்து ஆசீர்வதிக்கும் மாமரம்! 

குருவென்ற மாமரம்!


Saturday, October 10, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 15

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

******************************************

மனமே தூங்கிவிடாதே!

ஆகவே நான் கூறுகிறேன்:

மனமே தூங்கிவிடாதே

காலம் ஓடிக்கொண்டிருக்கிறது

உன்னிடமிருந்து திருடிக்கொண்டிருக்கிறது!

காளி என்ற நாமத்தை வாளாக ஏந்திக்கொண்டு

தாரா என்ற நாமத்தை கேடயமாக்கு

உன்னிடம் மரணம் வரமுடியுமா?

உன் சங்கில் காளியின் நாமத்தை நிறைத்து 

உரக்க ஊது

துர்க்கை, துர்க்கை என்ற நாமத்தை ஜெபித்திடுவாய்!

உன்னில் விடியல் ஏற்படும் வரை!

இந்தக் கலியுகத்தில் அவள் காக்கமாட்டாள் என்றால்

எத்தனை பாவிகளைக் கரையேற்றியதெல்லாம் யாரென நினைக்கிறாய்?

அப்படியானால் இதைச் சொல்லும் இந்த ராம்பிரசாத் ஸென் 

தீர்க்கமுடியாத மூடத்தனமுடையவன் என்று எண்ணுகிறாயோ மனமே?

ராம்பிரசாத் ஸென்

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


தலைப்பு இல்லை

யார் இந்த ராம் பிரசாத் ஸென்?

எங்கிருந்து கொண்டு இவற்றையெல்லாம் 

என்னை எழுத வைக்கிறார்கள்?

கவிதையென்றால் என்னவென்று தெரியாத 

ஒருவன் கவிதைகளை மொழிபெயர்க்கச் செய்ய

நோக்கம் என்ன?

காளி என்றால் சூனியமும், பில்லியும் கொண்டவள் என்ற எண்ணம் கொண்டலையும் மூடர்களுக்கு

யோகியரும் சித்தர்களும் கொண்டாடும்

நான், ஞானமாதா

நான், யோகமாதா

என்று தமிழில் உரைக்கக் கங்கணமோ?

ஸ்ரீ ஸக்தி சுமனன்

***************************************

கீழேயுள்ள தேவியின் படம் எமது ஓவியர் கோபி ரமணனால் காளி கவிதைகள் என்ற ராம்பிரசாத் சென்னினுடைய இன்னுமொரு அன்பரின் தமிழ் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்காக வரையப்பட்டது!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 14

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

*************************************************

இந்தப் பாடல் காளியை மானச உபாசனை செய்யும் வழியைப் போதிக்கிறது. 

காளியை எம்முள் உணர்வதற்கு ஐந்து வழி இருக்கிறது; 

1) தியானம் - அவள் ரூபத்தை, தத்துவத்தை தியானித்தல்

2) சுய பரிசோதனை: எந்தெந்த உணர்ச்சிகளை அழுத்தி நாம் உள்ளே மிருகங்களாகவும், வெளியே பண்பானவர்களாகவும் நடிக்கிறோம் என்று அகத்தில் ஆராய்ந்து களைதல். 

3) நாத உபாசனை - உடலிலுள்ள ஸப்தத்தினை/ நாதத்தினைக் கூர்ந்து கவனித்து உபாசித்தல். 

4) பலி : எம்முள் இருக்கும் தாழ் மிருக உணர்ச்சிகளை அவளிற்கு பலியிடல்

5) சம்பாஷணை: அவளை எம்முள் இருக்கும் ஒருத்தியாகக் கருதி நாம் எப்போது ஆன்ம முன்னேற்றம் பெறுவோம்? எனக்குத் தகுதியைத் தா என்று உரையாடல்!

இந்த ஐந்து வழிகளால் காளியை எம்முள் மானச வழிபாடு செய்ய முடியும். இவை பற்றி இந்தப்பாடலில் ராம்பிரசாத் உரையாடுகிறார். 

********************************************************

அன்னையே என்னுள் வசிக்கிறாய்;

அன்னையே, நீ என்னுள் வசிக்கிறாய்;

சியாமளையே, யார் கூறினார்கள் நீ தூரத்தில் இருக்கிறாய் என்று, 

நீ வஜ்சிரப் பெண், பயங்கர மாயை,

பல வேடமிட்டு வழிகாட்டுபவள்.

உன்னை உபாசிக்க பலவழிகள் உண்டு

ஐந்து முதன்மையானவையாக்கியுள்ளாய்!

ஆனால் இந்த ஐந்தும் ஒன்றுதான் என்ற ஞானம் உதிக்கும் போது

உன்னிடமிருந்து எவரும் தப்ப முடியாது என்று புரியும்!

உண்மையை உணர்ந்தவன்

போலியான முறைகளால் உபாசிக்க மாட்டான்!

நீ நிறுத்த வேண்டும்

நீ அவனது துன்பங்களை நிறுத்துவதற்கு முடிவெடுத்தால்!

அவன் பொன்னினது மதிப்பறிந்தால் தவறியும் கண்ணாடித்துண்டினைத் தேடுவானோ? 

பிரசாத் கூறுகிறேன்,

எனது இதயத்தை அப்பழுக்கற்ற தாமரையாக்குகிறேன்

வந்தமர்வாய் எனது மானச தேவியே!

நடனம் புரிவாய்!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 13

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

*****************************************

மனமே அவளைக் காதலி!

>>>>>>>>>>>>>>>>>>>>

மனமே அவளைக் காதலி!

அவள் கப்பலேற்றிக் கடத்துவாள்

பிறப்பு இறப்பு என்ற சாகரத்தை.

இந்தப்பயனற்ற சந்தையிலே வரிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்

செல்வமும், குடும்பமும் உண்மையென அறியாமையில் நம்பிக்கொண்டிருக்கிறோம்

உனது கடந்த காலத்தை மறந்து விட்டாயா?

நீ எங்கிருந்தாய்? எங்கு வந்திருக்கிறாய்?

எங்கு போகிறாய்?

நீ எதையும் அணிவதில்லை

ஆனால் உலகத்தில் அணியப்பட்டுள்ளாய்!

இந்த மந்திரிப்பு உன்னை மாய நடனத்தில் ஆடவைக்கிறது!

நீ ஆடுகிறாய் அவள் மடியில் அமர்ந்து அவள் சிறையில் வசிக்கிறாய்!

எம்மை திருப்திப்படுத்தும் வஸ்துக்களுடன் 

ஆணவம், வெறுப்பு, அன்பு, பற்று காட்டுகிறோம்!

உனது இராச்சியத்தை ஏன் இவற்றுடன் பகிரச் செய்கிறாய்?

காரணத்தைச் சொல்லுவாய்?

நீ செய்திருப்பது எவராலும் உதவமுடியாத ஒன்று!

நாட்கள் சென்றுவிட்டது!

மணித்துவீபத்தில் சிவனார் தனது வீட்டில் அமர்ந்து 

எப்போதும் அவளைத் தியானம் செய்கிறார்!

பிரசாத் கூறுகிறேன்,

துர்க்கையின் அம்ருத நாமம் முக்தியளிக்கும்

நிறுத்தாமல் ஜெபித்திடு

உன் நாவானது அம்ருதத்தில் நிறையும்! 

ராம் பிரசாத் ஸென்

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 10

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

******************************************

குண்டலினி யோகம் முழுமையும் காளி வித்தையால் சாதிப்பது எப்படி என்ற சாவியை இந்தப் பாட்டில் திறந்து காட்டியிருக்கிறார்! 

குருவின்றி இந்த வித்தை பயிற்சிக்கும் அதிகாரம் இல்லை! அவளருளுடையோருக்கு அர்த்தம் புரியட்டும்! 

**************************************************

குலகுண்டலினி – பிரம்ம பூர்ணம் – தாரா

*****************************************************

குல குண்டலினி! பூரண பிரம்மமே! தாரா

நீ என்னுள் இருக்கிறாய்

நீ என்னுள் இருக்கிறாய் 

தாயே

மூலாதாரத்தில், சஹஸ்ராரத்தில், எண்ணியதெல்லாம் தரும் மணிப்பூரகத்தில்!

கங்கை இடதுபுறம் பாய்கிறாள், யமுனை வலதுபுறம் பாய்கிறாள்!

இருவர் நடுவில் சரஸ்வதி ஓடுகிறாள்! எங்கு சிவமும் ஸக்தியும் பிரகாசிக்கின்றனரோ அங்கே!

உன்னைத் தியானித்தல் என்பது 

மாணிக்க செம்பாம்பு ஸ்வயம்பு லிங்கத்தை சுற்றியதைப் போல்!

இங்கனம் தியானிப்பவன் பூரண ஆசி பெற்றவன்! 

போற்றத்தக்க தாமரைகள்

மூலாதாரம், சுவாதிஷ்டானம், நாபியில் மணிப்பூரகம்

அ நாகதம், விசுத்தி! 

நீ அக்ஷரமாக அவதரிக்கிறாய்!

வம் தொடங்கி ஸம்

பம் தொடங்கி லம்

டம் தொடங்கி பம்

கம் தொடங்கி டம்

அகராதி சோடஷமாய் கழுத்தில்

ஹம் க்ஷமாய் புருவமத்தியில்.

என் குரு உறுதியாய் உபதேசித்தாரே;

அவர் சொன்னார் நீ எனது உடலில் இப்படி இருக்கிறாய் என்று!

நாற்கரத்து பிரம்மன், டாகினியும் அவள் பஞ்சசக்தியும்

ஏறிவரும் தாமரையில் இருக்க! 

யானையும், முதலையும் ஆட்டுக்கடா, மான், யானை!

உன் மூச்சுக் கும்பித்தால் அவளை உணரலாம்

ஹ்ரீங்காரிக்கும் மதுவருந்திய தேனியின் ஒலியாக உள்ளே ஒலிப்பாள்

பிருதிவி, அப்பு, தேஜோ, வாயு, ஆகஸம் அனைத்தும் கரையும் உடனே

யம் – ரம் – லம் – ஹம் – ஹௌம் என்ற அக்ஷரம் ஒலித்தவுடனே!

என்னைக் கருணைப் பார்வைக்குள் எறிந்துவிடு

நான் மீண்டும் பிறந்து வருவேன்!

உன் பாதம் மட்டுமே மூழ்கும் அம்ருதம்

நீயே ஸக்தி, அநாகதத்வனி!

சிவம் ஓமென்ற பிந்து

சந்திரன் போன்ற பூரண அம்ருதம்

இந்த ஒரே பரம்பொருளை எப்படிப் பிளக்க முடியும்?

பூஜையும், துவைதம், அத்வைதம் என்ற முரண்பாடும் பற்றி

எனக்குக் கவலையில்லை!

காலத்தின் மகா எஜமானி காலத்தை நசுக்குவாள்

ஒரு தடவை உறக்கம் கலைந்தால் 

பிறகு உறக்கம் என்பதில்லை அந்த ஆத்மனுக்கு!

அது சிவமாக மாறிப்போகும்! 

அவன் மீளப் பிறந்தாலும் ஒரு புதிய உணர்வுடன் பிறப்பான்!

அவனுக்கு முக்தி என்பது மகளைப்போல் வணங்கி நிற்பாள்

ஆக்ஞா சக்கரத்தை துளை;

பக்தனின் விரக்தி காணாமல் போகும்

சதுர், சஷ்டி, தச, துவாதச சோடஷ துவி

என்ற ஆறு தாமரைகளினூடு பயணித்து 

உச்சியிலே சஹஸ்ரதள பதுமத்தைச் சேர்ந்திட வேண்டும்!

பெண் அன்னம் தன் கம்பீரத் துணையுடன் கூடி நிற்கும்

இறைவனின் கோட்டையிலே

பிரசாத்தின் வார்த்தைகளைக் கேளுங்கள்;

யோகியானவன் பேரின்பச் சாகரத்தில் மிதப்பான்!


Friday, October 09, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் – 11

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

************************************************

மனதினால் மதிப்பிட முடியாப் பெறுமதி அது!

********************************************************

இந்தப்பிரபஞ்சத்தில் எவர் பயமுறுவர்

என் அன்னை அனைத்தையும் வழி நடத்தும்போது?

அவளது தோட்டத்தில் மிகுந்த சௌகரியத்துடமும், (அவள் வேறு நான் வேறு என்று) பிரிக்கமுடியா விழிப்புணர்வுடனும் பேரானந்தத்துடனும் வாழுகிறேன்.

நான் அவளிடம் நேரடியாக வாடகை செலுத்தும் வாடகைக்காரன்

நான் சம்பிரதாயங்கள், உயர்வு, தாழ்வு எனும் படிநிலைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரன்!

இந்தச்சரணாலயத்தில் வாடகை இல்லை,

நான் வேறு நீ வேறு இல்லை என்ற இந்த அத்வைதப் பூங்காவில்!

இது மனதின் மதிப்புகளுக்கு அப்பாலுள்ள பெறுமதி

எனது இந்தப்புனித வாழிடம் எவராலும் ஏலமிடப்பட முடியாது!

இங்கு சொந்தக்காரர் எவருமில்லை சொந்தம் கொண்டாட எதுவுமில்லை!

அன்னையின் சொத்துகளின் சொந்தக்காரர் சிவன்,

இங்குள்ள ஒவ்வொரு குறுகிய எண்ணத்தையும் பரிமாற்றத்தையும் பேருணர்வாக்குகிறார்!

இங்கு குழப்பமோ அநீதியோ இல்லை

பாகுபாடோ பிரிவினையோ இல்லை

அன்னை மத வழிபாட்டுக்கென 

கொழுத்த வரி கேட்பதில்லை

பணியாளனாக எனது கடமை 

அவளை உள்ளே நித்திய ஸ்மரணம் செய்வதுதான்!

நித்தியமாக காளி காளி காளி என்று சுவாசிப்பதுதான்! 

இந்த பித்துப்பிடித்த கவிக் காதலன் 

அன்னையிடமிருந்து நேரடியாகப் பிறந்தவன்

இவன் நேசித்து ஆசைகொள்வதெல்லாம் 

அவளது வைர சுவர்க்கமான மகிழ்ச்சியையும்

தளையற்ற கருவூலமான தூய அன்பையும் 

இதை இலவசமாக அனைத்து உயிர்களுக்கும் கொடுப்பதும்தான் 

- ராம்பிரசாத் ஸென் - 

தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமனன்


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 10

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

***************************************************

அன்னையே, நான் வாழ்க்கை எனும் நோயிலிருக்கிறேன்!

**********************************************************

அன்னையே, நான் வாழ்க்கை எனும் நோயிலிருக்கிறேன்!

வாழ்வும் பணமும் ஓடிக்கொண்டிருக்கிறது

ஆனால் நான் "தாரா" தாரா" என்று அழுதுகொண்டு உன்னை எதிர்பார்க்கிறேன்!

நீயே அனைத்தையும் போசிக்கும் அன்னை!

மூன்று உலகங்களையும் உனது வயிற்றில் சுமப்பவள்!

ஆகவே நான் வானிலிருந்து வீழ்ந்த அனாதையா?

நான் தீயவன் என்று நீ நினைத்தால் 

நீதான் நன்மையையும் தீமையையும் உருவாக்குபவள், இணைப்பவள் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்! 

நான் நீ உருவாக்கிய கருவிகளால் பிணைக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் உண்மை!

உனது நாமம் மரணபயத்தை நீக்குகிறது

என்று சிவன் கூறுகிறார்!

ஆனால் பயங்கரியே, நீ அதையெல்லாம் மறந்து

சிவம், காலம், மரணம் அனைத்தையும் உறிஞ்சிக்கொண்டிருக்கிறாய்!

பிரசாத் கூறுகிறேன்:

உனது விளையாட்டு பரம இரகசியம் தாயே 

நீயே ஆக்குகிறாய், நீயே அழிக்கிறாய்! 

இந்த வாழ்வில் நான் என்ற ஆணவத்தை அழிப்பாய்!

ராம் பிரசாத் ஸென் 

தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமனன்


Thursday, October 08, 2020

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 09

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

******************************************

மரணத்தை வெல்வோம் தாயே! தாயே! தாயே! என்ற உடுக்கையொலியில்!

*********************************

யாரிந்த தனித்துவமான போர்புரியும் வீராங்கனை?

அவளின் பயங்கரமான போர் இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்திலும் ஊடுருவி அழுகையைத் தருகிறது!

யாரிந்த ஒப்பீடற்ற சக்தி தத்துவம்?

அவளது எல்லையற்ற இயல்பினை தியானிக்கிறேன்,

அனைத்தையும் அடையவேண்டும் என்ற ஆர்வம் அழிந்து நன்றியுணர்வில் கரைகிறேன்.

யார் இந்த நழுவுகின்ற ஞானப்பெண்?

அவளது மென்மையான நறுமணம் கமழும் உடல்மீதான தீவிரவமான கவனம் 

கருநீலக் கமலத்தின் இதழ்களை ஒத்தது.

அவளின் நெற்றியில் ஜொலிக்கும்

ஒரு கண்ணிலிருந்து வரும் ஞானம்

சூரியனை விழுங்கும் சந்திரன் போன்றது!

இந்த பரம இரகசியமான பெண், நித்ய சோடஷி. 

அவள் திகம்பர ஞானம், தெளிந்த நுண்ணறிவு. 

அவளின் ஆடும் பாதத்தை தொடும் அலைபோன்ற கருங்கேசம் நீர்வீழ்ச்சியாக தொடுகிறது. ஞானப்போர்க் கலையில் செம்மையுறச் செய்கிறது

அவள் ஒவ்வொரு உயர்வான விஷயத்தினதும் கருவூலம்!

அனைத்து நன்மையினதும் சேகாரம்!

அவளின் கவி அசைக்கமுடியாத உறுதியுடன் கூறுகிறேன்:

"எவனொருவன் இந்த ஜொலிக்கின்ற காப்பாளின் பிரத்தியட்ச உணர்வில் வாழ்கிறானோ அவன் மரணத்தை தாயே! தாயே! தாயே என்ற உடுக்கையொலியுடன் வெல்வான்!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 08

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

காளியை உபாசிப்பவன் வீரனாக மாத்திரமே இருக்க முடியும்! அஷ்டபாசங்களுக்கு கட்டுப்பட்ட பசுவாக – விலங்காக இருக்க முடியாது! எதையும் எதிர்கொள்ளும் வீரம் இருக்க வேண்டும்! அதேவேளை அது ஆணவத்தினால் வந்த அறியாமை வீரமாக இருக்கக்கூடாது! அன்னையின் அருள் நம்முள் பாய்வதால்தான் நாம் அத்தகைய வீரத்தைப் பெறமுடியும் என்ற ஞானமும் இருக்க வேண்டும். 

கவிதையின் முதல் பகுதியில் தான் அத்தகைய வீரன் என்பதை அன்னைக்கு கூறிவிட்டு கடைசியில் இல்லை அம்மா, நான் இப்படியே போரிட்டுக்கொண்டிருக்க முடியாது; கருணை கூர்ந்து ஓய்வுதா என்றும் எல்லோரும் இன்பத்தை வேண்டும் என்று கேட்கும் போது நான் துன்பத்தை தா என்று கேட்கும் அற்புதம் உன்னை நான் என்னுள் கொண்டிருப்பதால் அல்லவா என்று அற்புதம் எனும் உணர்ச்சியைப் பாய்ச்சுகிறார்! 

துன்பம் என்னைப் பயமுறுத்த முடியுமா?

*****************************

துன்பம் என்னைப் பயமுறுத்த முடியுமா? தாயே,

நான் இந்த உலகில் துன்பப்படட்டும்.

எனக்கு இன்னும் தேவையோ?

துன்பம் எனக்கு மேலாக ஓடட்டும்!

துன்பம் எனக்குப் பின்னால் ஓடட்டும்!

நான் அவற்றை என் தலையில் ஏந்தி நிமிர்ந்து நிற்பேன்!

அவற்றை தெருவில் இட்டு மிதிப்பேன்!

நான் ஒரு விஷப்புழு, விஷத்தில் செழித்து வளர்பவன்!

நான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வேன்! 

பிரசாத் கூறுகிறேன்;

தாயே, என் சுமைகளை நீக்கு!

எனக்குச் சிறிது ஓய்வு அவசியம்!

அனைவரும் இன்பத்தைத் தா என வேண்டும் போது,

நான் துன்பத்தைத் தா என வேண்டுகிறேன்!

இது அற்புதமானது!


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 07

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

எவ்வளவு தான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் மனதின் கீழ் இயற்கைப் பண்பை வெல்வது கடினம்! தேர்ந்த யோக சாதகர்களும் தவறிப் போய் விடுவார்கள்! இப்படியொரு நிலையை எப்படி வெல்வது என்பதற்கு உபாயம் சொல்கிறார் ஸ்ரீ ராம்பிரசாத்! 

மனம் எப்போதும் ஆணவத் தூண்டலால் இயங்கிக் கொண்டிருக்கும்; ஆணவத் தூண்டல் மனதின் கடுமையான குறை; சாதனை செய்ய வேண்டும் என்று குரு உபதேசம் இருந்தாலும், உறுதியாக எவ்வளவு தான் முயன்றாலும் எம்முள் இருக்கும் ஆணவத் தூண்டல் எம்மை வீழ்த்திக்கொண்டே இருக்கும்! இதனுடன் போராட முனைந்தால் இது இன்னும் அதிகரிக்கும்! 

ஆகவே இலகுவான வழி இந்தப் போராட்டத்தை அன்னையிடம் கொடுத்துவிட்டு நாம் அவள் கருவியாகச் சாதனையை முயற்சிப்பது! இது சாத்தியமானால் தினசரி சீரான தியான சாதனை வாய்க்கும்! 

பலர் தியானம் செய்கிறோம், மந்திர ஜெபம் செய்கிறோம் என்று மனதில் ஆணவத் தூண்டலுடன் தொடங்கி சில நாட்களில் ஆணவம் சாதனையை வீழ்த்தப் புலம்பிக் கொண்டிருப்பார்கள்! சாதனை தடைப்படுகிறது, உபாசனை தடைப்படுகிறது என்றால் அவள் நடத்துவிக்கிறாள் என்ற எண்ணம் இல்லாமல், நாம் செய்கிறோம் என்ற ஆணவத் தூண்டல் எங்கோ மனதின் மூலையில் இருக்கிறது என்று அர்த்தம்!

இதற்கு என்ன செய்வது? மருந்து கூறுகிறார் இந்தக்கவிதையில்! 

சாதகர்களுக்கு தமது சாதனை ஏன் தடைப்படுகிறது? யோகம் ஏன் பலிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை தரும் அருமையான கவி இது! 

கடுமையான குறை

****************

ஜெகன்மாதாவால் எனக்கு நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைகள் உளது.

என்னைக் காக்கும் தாயாக உன்னை விழிப்புணர்வுடன் வெளிப்படையாக எண்ணும் போது கூட,

எனது வீடாகிய மனமும் உடலும் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது,

எனது எண்ணற்ற ஆணவத்தூண்டலால்! 

ஒவ்வொரு நாளும் உன் நாமத்தை ஜெபிக்க உறுதி கொள்கிறேன், அதியுயர் பாதுகாப்பாக,

ஆனால் எனது இந்த நல்ல நோக்கம் மறக்கடிக்கப்படுகிறது

ஊடுருவும் நபர் வருவது போல. 

நான் எனது விளையாட்டுத்தனத்தில் சிக்கியிருக்கிறேன்! 

ஹே மாதா, எதன் மூலம் இந்த பற்றை நீக்கப்போகிறாய்?

இந்தக்குழந்தை அகத்திலிருந்து உன்னைப் பிரார்த்திக்க எந்தச் சக்தியையும் நீ தரவில்லை,

ஆகவே என்னிடமிருந்து தொடர்ச்சியான பக்தி உனக்குக் கிடைக்கப்போவதில்லை.

எனவே இனி இது எனது பிழை என்று வருந்தப்போவதில்லை. 

புகழும் இகழும், நன்மையும் தீமையும் வாழ்க்கையின் சுவை,

அனைத்து நிகழ்வுகளும் உனது விளையாட்டு!

மெய்மறந்து நீ ஆடும் ஆட்டம்போல்,

நாம் குழப்பத்தினுள் வீசப்படுகிறோம்.

ஹே தேவி, எம்மை உனது ஞானப்பாதையில் செலுத்து. 

இந்தக்கவி அவளின் இரகசியத்தைப் பாடும் தைரியமுள்ளவன்:

ஹே, மகாமாயா, தாயே! ஒவ்வொரு மனதிற்கும் ஆற்றல் கொடு,

ஆணவம் அழிந்து சாம்பலாவதை இனிமையானது எனவும், 

ஏமாற்றங்களையும், அதிர்ச்சிகளையும் சுவையாகவும் உணர;

இப்போதே விழிப்புணர்வு கொடு சுதந்திரனாக நடமாட! 

ராம்பிரசாத் ஸென்

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்

08-Oct-2020: 07:00 PM


தலைப்பு இல்லை

இன்னும் நாற்பது நிமிடங்களில் இன்றைய கவிதைகள் பகிரப்படும் இணைந்திருங்கள்!

Wednesday, October 07, 2020

தலைப்பு இல்லை

இன்றைய நாளிற்குரிய மூன்று பாடல்களுடன் மொத்தம் 06 பாடல்கள் முடிவுற்றது! 

படித்தவர்கள் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்! 


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 06

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

**********************************************

பலரும் காளி சிவனின் மேல் கால்களை வைத்திருக்கிறாள்! சிவம் பெரிதா சக்தி பெரிதா என்று ஆணவ மலத்தில் சிக்கிய அற்ப மானிடர்கள் பட்டிமன்றம் நிகழ்த்த அந்தப்பாதங்கள் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று ஹ்ருதயத்தில் அன்புப் பெருக்கால் கட்டிவைத்து ஆழ்ந்த ஸமாதியில் அமர்ந்திருக்கிறார் சிவன்! 

இப்படி அன்னையின் பாதத்தை ஹ்ருதயத்தில் முழுமையாகக் கட்டி வைத்திருப்பதால் தான் அவர் பசுகளுக்கெல்லாம் பதியாக ஆழ்ந்த ஸமாதியின்பம் அனுபவித்து அமர்ந்திருக்கிறார் என்ற உண்மை புரிந்த சாதகர் ராம்பிரசாத் தனது மனமாகிய கூட்டாளியுடன் சேர்ந்து அந்தத் திருவடியைத் திருடத் திட்டம் போடுகிறார்; 

இந்தத் திட்டத்தினை விபரிக்கும் அற்புதக் கவிதை இது! சிவனார் வருந்தாமல் திருவடியைத் திருடவும் உத்திகளை உரைக்கிறார்! 

வருவாய் மனமே திருவடி திருடுவோம்!

*****************************

வருவாய் மனமே, திருடச் செல்வோம்!

நீயும் நானும் சேர்ந்து செல்வோம்!

அன்னையின் பாதத்தை சிவனார் முழுமையாகப் பிடித்து வைத்திருக்கிறார்! 

அவற்றை நாம் கைப்பற்ற வேண்டும்!

ஆனால் அவர்கள் எம்மைப் பிடித்துவிட்டால்

அந்த விழிப்புணர்வுடன் கூடிய வீட்டிற்குள்

அதுவே எமது உடலிற்கு முடிவாகும்

அவர்கள் கைலாயத்தில் பிடித்துக் கட்டிவிடுவார்கள்!

உனது குருவின் அறிவுரையை மறக்காதே!

நாமிருவரும் பாதத்தைத் திருடினால் 

சிவனார் காயப்படுவார்! 

அவரை பக்தி என்ற அம்பால் கட்டிவிட்டு

பறித்துக்கொண்டு ஓடிவிடுவோம்!

ராம்பிரசாத் ஸென்

புரிந்த அளவில் தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 05

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

**********************************************

காளியை உபாசிக்கிறோம் என்றால் இவன் மந்திர தந்திரத்தில் வல்லவன்; குருவென்று பணிந்து தாஜா செய்துகொண்டால் தமது காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என்று எப்போதும் உபாசகரை ஒரு கூட்டம் சுற்றப்பார்க்கும்! 

தேவி உபாசனை செய்யத்தொடங்க எம்மைச் சுற்றி ஆற்றல் வளர அனேகர் மதிப்பாக, மரியாதையாக பழக எமது மனம் சற்று பூரிக்கத்தொடங்கும்! 

இப்படியெல்லாம் அவளின் இந்த லீலையில் மயங்கி அவள் நாமத்தை விட்டுவிடாதே கள்ள மனமே என்று இந்தப்பாடலில் சுவைபடக் கூறுகிறார்! 

எனக்கு தனிப்பட மிகவும் பிடித்த கவிதை இது!

*******************************************************

காளியை அழைப்பாய் மனமே காளியை அழைப்பாய்

எண்ணிப்பார் மனமே! 

யாருக்கும் எதுவும் இல்லை இங்கு!

நீ எதற்காகவும் இந்த உலகத்திற்கு வரவில்லை!

உனது வாழ்க்கையில் சில நாட்கள் 

இவர்கள் உன்னைக் குருவென்பார்கள்!

ஆனால் அந்த குருவை விட்டு வெகுவிரைவில் நீங்குவார்கள்!

இறப்பு வாழ்வு என்ற குரு அவர்களைத் தீண்டும் போது!

நீ நோயுற்றால் நீ தேடியலைந்த பெண் கவலையடைவாளா?

உன்னுடன் கூடி வாழ்வாளா?

உன்னைப் போன்ற துரதிஷ்டசாலியிலிருந்து தன்னைச் சுத்திக்க கோமியம் கரைத்துத் தெளிப்பாள்!

ஸ்ரீ ராம்பிரசாத் கூறுகிறேன்;

மரணம் வந்து உன் பிடரியை உலுக்கும் போது

அழைப்பாய்: காளீ காளீ

பிறகு அவன் என்ன செய்ய முடியும்?

புரிந்துகொண்ட அளவிற்கு தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 04

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}

********************************************

இந்தப் பாடல் ராம்பிரசாத் சென்னுடைய வாழ்வுடன் சுவையான சம்பவத்துடன் தொடர்புடையது! பாடலின் இறுதியில் தன்னை அமோகமான செல்வந்தன் ஆக்கு என்று கேட்கிறார்! அவரது காலத்து ஜமீந்தாரான ராஜா கிருஷ்ணசந்திர ராய் அவரது காளி சாதனையைப் பார்த்து 100 ஏக்கர் நிலம் வரி இல்லாமல் எழுதிக் கொடுத்தாராம்! கேட்டமாதிரி காளி கொடுத்திருக்கிறாள்! 

ஆகவே நாமும் கேட்போம் எம்மையும் அமோகமான செல்வந்தனாக்கு என்று! 

*****************************************************

ஹே மாதா, என்னை எல்லாவற்றிலிருந்தும் வெளியேற்று!

குப்த வித்தையில் என்ன பயன்?

தத்துவ அறிவில் என்ன பயன்?

அனைத்தையும் அரவணைக்கும் உன்னுடைய அன்பெனும் மதுவினுள் முழுமையாகச் செலுத்து! 

பரம இரகசியத்தின் தாயே!

உன்னை நேசிப்பவர்களின் இதயத்தை 

அந்தப்பரம இரகசியத்தால் நிறைப்பவளே!

மீள முடியாமல் என்னை மூழ்கடிப்பாய்!

எல்லையற்ற ஆர்ப்பரிக்கும் கடலாகிய 

தூயஅன்பு, தூயஅன்பு, தூயஅன்பால்! 

உனது அன்பு எங்கெல்லாம் வசிக்கிறதோ

அவையெல்லாம் உன்மத்த வீடாகத் தெரியும்

பொதுப்புத்திகளின் பார்வைக்கு!

உனது சுதந்திரத்தால் சிரித்தபடி சிலர்

உனது மென்மையால் ஆனந்தக்கண்ணீர் 

சொரிவோர் சிலர்!

உனது பேரானந்தம் தாக்க ஆடுவோர் சிலர்!

கௌதமரும் மோசஸும்

கிருஷ்ணரும் ஜீஸசும்

நானாக்கும் முகம்மதும்

உனது அன்பு வெடிப்பில் தொலைந்து போகிறார்கள்!

இந்த கவிஞன் திக்குகிறேன்

ஏக்கத்தால் தாக்குண்டு

எப்போது? எப்போது? எப்போது?

எப்போது தோழமையுடன் உன்னருகிலிருக்கும் பாக்கியம் கிடைக்குமென்று!

எப்போது அவள் தீவிர அன்பு கிடைக்குமென்று!

அவள் புனித உறவு சொர்க்கமயமானது!

இத்தகைய அன்பிலே மூழ்கி பித்துக்கொண்டிருப்போருக்கு

நியாயமாக நடக்கும் நாடு!

அப்படியான நாட்டிலே 

குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான பேதம் அற்றுப்போயிருக்கும்,

அவர்கள் அன்பின் அன்பு கானமிசைக்கிறது

அம்மா, அம்மா, அம்மா என்று

யார் உனது பரம இரகசியத்தின் ஆழத்தினை அறிவார்கள்?

உனது எல்லையற்ற அன்புடன் அன்பு புரியக்கூடியவர் யார்?

நீ தெய்வீக உன்மத்தம்! 

ஹே தேவி!

உனது அன்பு புத்திசாலித்தனம் எனும் கிரீடமணிந்த உன்மத்தம்!

இந்த ஏழைக் கவியை அமோகமான செல்வந்தன் ஆக்கு!

ராம்பிரசாத் சென்!

தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...