சாதனை அனுபவம்
இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங்கள் என கூறியபோது நம்மால் மந்திர சாதனை செய்ய முடியுமா அதற்கு உரிய தகுதி நமக்கில்லையே அத்துடன் மந்திர சாதனையெல்லாம் நம்மால் முடியாது என மறுத்து கூறினேன். அப்போது காயத்ரி ஜபம் மனதை வழிப்படுத்த உதவும் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறினார்கள். சரி நம்மால் முடியாத காரியம் எனினும் 48 நாட்கள் முயற்சி செய்து பார்ப்பது என்று முடிவெடுத்து நாள் ஒன்றுக்கு 27 ஜெப எண்ணிக்கை கொண்டு ஆரம்பித்தேன். அப்போது 48 நாட்கள் சாதனையை தடையின்றி செய்வதற்காக எந்தவித குழப்பங்களுக்கும் இடம் கொடாமல் குரு வழிகாட்டலில் செல்வது அத்துடன் தினமும் காலையில் தவறாது சாதனை செய்வது என்ற தீர்மானமும் செய்துகொண்டேன். சிரமம் இன்றி 48 நாட்கள் சாதனை முடிவுற்றது. நம்மால் சாதனை செய்ய முடியும் எனும் நம்பிக்கை வந்தது. அப்படியே தொடர்ந்து 54, 108, கல்ப சாதனை, லகு அனுஷ்டானம், மகா லஷ்மி சாதனை மற்றும் நவக்கிரக சாதனை என முயற்சித்து வருகிறேன். இந்த தொடர்முயற்சியையும், தினம் குரு வழிகாட்டலில் சாதனைசெய்வதும் என்னில் நம்மால்முடியும்என்ற நம்பிக்கையை வளர்த்தது. இந்த தன்னம்பிக்கை என்னால் முடியாது என எதையும் தவிர்க்காமல், எக்காரியத்தையும் நம்மால் இயன்றவரை செய்துபார்ப்போம் எனும் மனப்பாங்குடன் செய்யும் பண்பு வளர ஆரம்பித்துள்ளது.
சாதனை ஆரம்பிக்கும் காலத்தில் அடிக்கடி ஒற்றை தலைவலி, சைனஸ் infection வந்து சிரமப்படுவேன் . நோய் தாக்கத்தில் இருந்து வெளிவர குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகிவிடும் . இப்போது அவை வருவது அரிதாகிவருகிறது. அப்படியே வந்தாலும் அறிகுறிகள் ஆரம்பித்த உடனே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறேன். அத்துடன் தலைவலி, சைனஸ் தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றை தூண்டும் எண்ணஙகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்து கொள்கிறேன். இவ்வாறு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த பிரச்சினைக்கான தீர்வினை கண்டறிந்து அதற்கு ஏற்ப விடை கண்டு செயல்படுத்தி வருகிறேன்.
மனதில் தோன்றுவதை உள்ளது உள்ளபடி கூறுவது பழக்கம், இதனால் யாரையாவது மனம் நோகும்படி சொல்லிவிடுவேன். இப்போது பேசும் போது எனது வார்த்தைகள் ஒருவரை காயப்படுதாது இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். அவ்வாறு துன்புறுத்தும் வார்த்தைகள் எண்ண அலையில் ஏற்பட்ட உடனேயே என்னுள் ஒரு குரல் அதனை தடுத்து அவ்விடத்தில் மற்றவரது மனம் கோணாது சொல்லக்கூடியற்றை அறிவுறுத்துவதுடன் அவ்வாறு செய்யவும் கட்டாயப்படுத்துவதும் உண்டு. கோபத்துடனோ அல்லது பிறரை காயப்படுத்தும் செயல்களை என்னுள் இருக்கும் அந்த சக்தி அனுமதிப்பத்தும் இல்லை. சில நேரங்களில் என்னடா நம்மளை பாதிக்கும்படி பேசுவர்களை கூட மன ஆறுதலுக்கு கூட ஏதும் சொல்ல என தோன்றும் இருப்பினும் நான் அமைதியான சூழலை பாதிக்கும் செ யல்களையோ அல்லது எண்ணங்களையோ அந்த சக்தி அனுமதிப்பதும் இல்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சித்த சாதனையில் உள்ள வாக்கியங்களை நினைவுபடுத்தி அந்த சக்தி நல் வழிப்படுத்துவது உண்டு.
காயத்ரி சாதனை ஆரம்பித்த பின் நான் செய்யும் நற்காரியங்கள் அதிகரித்து இருப்பதை கவனித்தேன். பிறர்க்கு உதவும் மனப்பாங்குஅதிகரித்து உள்ளது. ஒருவரால் நான் அடைந்த பலன்களின் ஏற்ப அவர்களுக்கு உதவும் மனப்பாங்கு மறைந்து அந்த சந்தர்ப்பத்தில் செய்யவேண்டிய காரியத்தை முழுமனதுடன் செய்து வருகிறேன். என்னால் இயன்றவரை என்னை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி வருகிறேன்
மேலும் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களாலும், கோபம், எரிச்சலுறும் தன்மை, பொறாமை எண்ணங்கள் இருந்தது அவை எல்லாம் இப்பொழுது குறைந்து அமைதியானவளாகவும் அன்பு கொண்டவளாகவும் மாறுவதை உணர்கிறேன்.
எந்த காரியத்தையும் அவசரமாகவும் பதட்டத்துடனும் செய்யும் தன்மை இருந்தது அதுமாரி எக்காரியத்தையும் நிதானமாகவும் கவனமாகவும் சிறப்பாவாகவும் செய்யும் தன்மை அதிகரித்துள்ளது.
சாதனையானது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு ஒரு சிறு கண்ணோட்டத்த்தில் இருந்து செயல்படாது பரந்த நோக்குடன் செல்லப்படும்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அனுபவங்களை பண்பு மாற்றங்களை நான் ஒரு ஆரம்ப பள்ளி மாணவனிடம் இருக்கும் நிலையாகவே உணர்கிறேன். குருவழிகாட்டலின்படி நின்று தேவியின்கருணை பெற்று இந்த பண்பு மாற்றம் இன்னும் ஆழமாக என்னுள் ஏற்படுவேண்டும் எனும் பிரார்தனையுடனும் சாதனை தொடர்ந்து செய்வதை குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து இந்த பாதையில் பயணத்தை தொடர்கிறேன்….
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.