குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 31, 2019

தலைப்பு இல்லை

நான் இங்கு கருத்துப் பகிர்வது எவருக்கும் சார்பாகவோ, எவரையும் மாற்றவோ, உபதேசிக்கவோ வழி நடத்தவோ அல்ல! 

என்னளவில் நான் இந்த உலகின் ஒவ்வொரு அமிசத்தை இரசித்துக் கொண்டு புரிந்து கொண்டு தெளிந்த அறிவைப் பெற வேண்டும் என்ற பேராவல் கொண்டு பயணிக்கும் பயணி அவ்வளவே! இந்தப் பயணத்தில் என்னால் எவ்வளவு மற்றவர்களுக்கு உதவமுடியுமோ அவ்வளவு உதவலாம் என்ற எண்ணம் உள்ளவன்! பிரபஞ்சத்தின் அளவுடன் ஒப்பிடும் போது எமது இருப்பு என்பதே உண்மையில்லை எனும் நிலையிலேயே நாம் வாழ்கிறோம்! 

நான் பகிரும் கருத்துக்கள் பலருக்குத் தெளிவு தருவதால் அவர்கள் தரும் மரியாதையைக் கண்டு பலரும் என்னைப் பலவாறாக தமது கற்பனைக்கு ஏற்றவாறு கற்பித்து உரையாடத் தொடங்குவது உண்டு. 

நான் மனிதர்களை எண்ணங்களாகப் பார்க்கப் பழகியவன். எண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய சிந்தனை உடையவன். எண்ணங்கள் மாறக் கூடியவை, ஆகவே மனிதர்களும் மாறுபவர்கள்! இந்த மாற்றத்தைப் புரியாமல் உலகை இறுக்கமாகப் பார்ப்பவர்களே துன்பமடைகிறார்கள். எமக்கு துன்பம் இழைத்தவனும் தனது சிந்தனை மாறி நன்மை செய்யலாம் என்பதை ஏற்க மறுத்து பலர் தமது வாழ்வை வீணடிக்கலாம். 

பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் 

என்ற பூங்குன்றனார் வாக்கின் படி மாறும் எண்ணங்களில் ஓட்டத்தில் வாழ்வினை செலுத்தி வாழ்வினைக் கடக்க வேண்டும். 

உத்வேகமும், எண்ணமும் எப்படி செயலாற்றுகிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் அற்றவர்களுடன் நான் முரண்படுவது போன்று தோன்றலாம். 

எனது உரையாடல்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய சிந்தனைத் தெளிவை அடைய விரும்பும் நோக்கம் உடையவை! உணர்ச்சி வசப்பட்டு கொதிக்கும் மனதிற்கு சங்கடம் தரலாம்! ஆனால் இறுதியில் தெளிவினைத் தரும் என்பதே உண்மை! 

இன்று பகல் ஒரு பதிவினை நான் இட்ட பின்னர் எனது புத்தகக் கடலில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்த எனது தம்பி, அண்ணா உங்களைப் பற்றிய சரியான விமர்சனம் இதோ என்று தந்த வசனம் கீழே  


தலைப்பு இல்லை

இதுவும் கடந்து போகும்! 

தவறுகளை அளவுக்கு மீறி பெரிதாக்கி எமது உணர்ச்சிகளைக் காட்டும் போது அந்தத் தவறு செய்பவன் சிந்தித்து திருந்தும் ஆற்றலையும் இழக்க வைத்து, சுட்டிக் காட்டுபவனின் சரியும் பிழையாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது. 

ஒரு உணவு விடுதி தமிழ் மொழியில் உரையாடக் கூடாது என்று அறிவுறுத்தல் செய்த விஷயத்தை சுட்டிக்காட்டி சரியான புரிந்துணர்வு வந்தவுடன் ஒரு சம நிலைக்கு கொண்டு வந்து ஒத்திசைவை ஏற்படுத்தி விட்டு நாம் எமது வேலையைப் பார்க்க வேண்டும். 

உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கு அதிகமாக தாக்கி அதளபாதாளத்திற்கு உன்னைத் தள்ளுவோம் என்று புத்தியில்லாமல் கூவிக் கொண்டு குழிவெட்டினால் தவறு செய்தவனுக்கு பாதிக்கப்படுகிறான், அவன் நம்மாள், அவனுக்கு உதவுகிறோம் என்று பெரிய கூட்டம் கிளம்பி தவறையே சரி என்று நிறுவி எம்மைக் குழிக்குள் வீழ்த்தும். அதன் பிறகு அவனை வீழ்த்துகிறோம் நாம் என்று இந்த சுழற்சி தொடரும். பிணைத்த மாடுகள் இரண்டு செக்கைச் சுற்றும் நிலைதான் இறுதியில். முன்னேற மாட்டோம். 

மக்களை உசுப்பேத்தி உணர்ச்சிக்குள் வைத்திருந்தால் தான் காரியம் சாதிக்கலாம் என்ற நுண்மை தெரிந்தவர்கள் இப்படி புத்தித் தெளிவிற்குள் மக்கள் வருவதை விரும்புவதில்லை! 

தவறு, தவறைச் சுட்டிக் காட்டுதல், தவறைத் திருத்துதல், அனைவருமாக ஒன்றிணைந்து முன்னேறுதல் என்று இருக்கும் சிந்தனைப் பண்பு சமூகத்திற்கு ஆரோக்கியம். 

தவறு, தவறைச் சுட்டிக்காட்டுகிறோம், மன்னிப்புக் கேட்கிறான், மன்னிப்பை நாம் ஏற்கமாட்டோம், அவனைப் பழி வாங்குவோம், அழிப்போம் என்று நாம், சரி நீ அழிக்க முனைந்தால் அதை நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனும் சவால், அதற்கு ஆதரவாக சில முட்டாள் கூட்டங்கள், கருத்து மோதல்கள், நேர விரயம், இறுதியில் இதன் பெருவடிவம் கலவரம், வன்முறை, இன முரண்பாடு! 

மனிதனுக்குள் இருக்கும் பரிணாமத்தின் பிந்திய வளர்ச்சியடையாத உணர்ச்சிவசப்பட்ட மூளையின் செயற்பாட்டில் இருந்து வெளி வந்து மேல் மூளையின் மூலம் புத்துருவாக்க சிந்தனையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி மனிதன் பழக்கப்பட வேண்டும்.


Wednesday, October 30, 2019

தலைப்பு இல்லை

இயற்கை வேளாண்மையின் நோக்கம் தாவரங்களை வளர்ப்பதல்ல, மனிதனைச் செம்மைப்படுத்துவது என்ற Masanobu Fukuoka இனது கூற்று ஆழமானது! 

மனித வாழ்க்கை பிரபஞ்ச ஒழுங்குக்கமைய இருக்க வேண்டும் என்ற அடிப்படையை அது கூறுகிறது. தாவரங்களை நாம் வளர்க்கிறோம் என்பது மனிதனது அகங்காரமைய அறிவீனம். 

மனிதன் தன்னை எப்படி பிரபஞ்ச இயக்கத்துடன் ஒத்திசையச் செய்துகொள்வது என்ற உத்தியை இயற்கை விவசாயத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். 

Masanobu Fukuoka இயற்கை விவசாயத்தின் நான்கு அடிப்படைகளைக் கூறுகிறார். 

1) மண் தன்னைத் தானே தயார்படுத்திக்கொள்ளும், உழுதல், மண்பிரட்டல் போன்ற மனிதத் தலையீடுகளே களைகளை அதிகமாக்கி நிலத்தை மேலும் சிக்கலாக்குகிறது. 

2) மாசற்ற இயற்கை நிலத்தில் மண்ணின் வளம் அதிலுள்ள தாவர விலங்குகளின் வாழ்க்கையால் சம நிலைப்படுத்தப்படுகிறது. மண்ணின் வளம் அதீத ஒரு பயிரிடல் முறையாலோ, விலங்குகளின் மேய்ச்சலினாலோ இல்லாமலாக்கப்படுகிறது. மண்ணிற்கு இரசாயன உரம் இட்டால் தாவரம் வளரும், மண் உயிரிழந்து விடும். காலப்போக்கில் அந்த மண்ணில் எதுவும் வளர்க்க முடியாமல் உவர் நிலமாகிவிடும். 

3) களைகளைக் கட்டுப்படுத்த உழுதல், மண்ணைப் பிரட்டிப்போடுதல் என்பன களையை மேலும் உயிர்ப்பூட்டும் செயல். களையை மூடாக்கு கொண்டு மூடி மண்வளத்தை அதிகரிக்க வேண்டும். இரசாயன களைகொல்லியோ, உழுது மடித்தலோ செய்யக்கூடாது. 

4) பூச்சிகள் பீடைகளை கொல்வதற்கு இரசாயன பீடைகொல்லிகள் பயன்படுத்தக்கூடாது. தோட்டத்தில் தாவரத்தை அழிக்கும் பீடைகளுக்குரிய இரைகௌவிகளுக்குரிய சூழலை உருவாக்க வேண்டும். 

ஆக இயற்கை வேளாண்மை என்பது கஷ்டப்படுவது அல்ல இயற்கையின் இயங்கியலைப் புரிந்து கொண்டு அதுனுடன் இயைந்து வாழுதல்!


Sunday, October 27, 2019

தலைப்பு இல்லை

ஸ்ரீ மகாலக்ஷ்மி பற்றி ஸ்ரீ அரவிந்தர்.... 

உடல் கொண்ட ஆன்மாக்களின் இதயத்திற்கு இவளை விட வசீகரமான தெய்வ சக்தி வடிவம் வேறு இல்லை. மகாலக்ஷ்மியை அனைவரும் மகிழ்ந்து விரும்பி நாடுகின்றனர். ஏனெனில் அவள் இறைவனின் இனிமையை, போதை தரும் அந்த ஜாலத்தை வீசுகிறாள். அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும். அவளை இதயத்தில் உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப் பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும். வனப்பும் வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவது போல் அவளிடமிருந்து பெருகி வருகின்றன. அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம் எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு அளவில்லா ஆனந்தத்தின் ஆழங்களில் அமிழ்த்தப்படுகிறது. அவள் கரங்களின் ஸ்பரிஸம் காந்தம் போன்றது. அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது. அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.


தலைப்பு இல்லை

அன்னம் பஹுகுர்வீத| தத் வ்ரதம்

Annam bahu kurveet tad vratam

உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள். இது உங்கள் கடமை...

தைத்திரீய உபநிஷத் 3.9

இதுவே எமது இயற்கை வேளாண்மை முயற்சிக்குரிய உத்வேகம்! மந்திரம்! குறித்த மந்திரம் உணவு உற்பத்திக்குரிய இரகசியத்தையும் சொல்லித் தருகிறது. 

உணவினது இரகசியம் அறிந்தவன் உணவுச் செல்வமும் உடையவனாகி புனிதப் பேரொளி மிக்கவனாக மகிமை மிக்கவனாக ஆகிறான்!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

தீபாவளி மகாலக்ஷ்மி உபாசனைக்கு உகந்த நாள்! அன்னையின் ஆற்றல் பற்றிக் கூறும் ஸ்ரீ அரவிந்தர் கீழ்வருமாறு மகாலக்ஷ்மி பற்றிக் கூறுகிறார். 

ஞானமும் சக்தியும் மட்டுமே பராசக்தி அன்னையின் வெளிப்பாடுகளல்ல. அதி நுண்ணிய இரகசியம் ஒன்று அவளது இயல்பில் உளது. அஃது இன்றேல் ஞானமும் சக்தியும் முழுமை பெறா, பூரணம் பரிபூரணமாயிராது. அவற்றிற்கு மேல் என்றுமுள்ள எழிலின் அற்புதம், தெய்வீக இசைவுகளின் பற்ற முடியாத இரகசியம், தடுக்க முடியாத மோகன வசீகரத்தின் பரந்த மாயாஜாலம் உள்ளது. அது உலகளாவிய பொருட்களையும், சக்திகளையும் ஈர்த்துப் பிடித்து அவற்றை கூட்டி இணைத்து, மறைவிலுள்ள ஓர் ஆனந்தம் திரைக்குப் பின்னின்று தன் லீலைகளை நடத்தவும், அவற்றைத் தனது சந்தங்களாக்கவும் தனது வடிவங்களை ஆக்கவும் உதவுகிறது. இதுவே மகாலக்ஷ்மியின் மாட்சி. 


ஸ்ரீ அரவிந்தர்


Saturday, October 26, 2019

இயற்கையின் யோகம்

கத்தரியில் 0.01 கிராம் விதை இறுதியின் மொத்தம் 10,000 கிராம் உள்ள செடியாகவும் விளைச்சலாகவும் மாறுகிறது. 

இயற்கையின் வினைத்திறன் பத்து லட்சம் மடங்கு! 

இயற்கைக்கு எப்படி இந்த ஆற்றல் என்பதைப் புரிந்து கொள்ள மனிதன் அறிவியலூடாக முயற்சிக்கிறான். 

Nitrogen, Phosphorous, Potassium என்கிறான். 

நீர் என்கிறான்!

Micro nutrient என்கிறான். 

ஆனால் மனிதனுக்குப் புரியாத ஏதோ ஒரு "சக்தி" இவற்றையெல்லாம் "ஒழுங்குபடுத்தி" நடாத்திக் கொண்டு தானே இருக்கிறது? 

எப்படி சிறு விதை தன்னை விட பத்து லட்சம் மடங்கு உடைய செடியை மரத்தைப் படைக்கிறது? 

தன்னை சூழ உள்ள வளியிலும், மண்ணிலும், நீரிலுமிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொண்டு தன்னுள் இருக்கும் அக்னியால் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு மண்ணிலிருந்து ஆகாயத்தில் சூரியனை நோக்கி எழுகிறது. 

ஒளிமிகுந்த அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் உணவாக மாற்றி தான் வளர வேண்டும் என்பதே செடியின் யோகம். 

இதையே ரிஷிகளும் சித்தர்களும் உடலாகிய மண்ணிலிருந்து, மூச்சாகிய வளியின் வழி சுவாசத்தை இயக்கி, நீரையும் உணவையும் பெற்று அந்தக்கரணங்களில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை இருத்தி தியானிக்கச் சொன்னார்கள். தாவரத்திற்கு சூரியன் எப்படி உத்வேகமோ, மனிதனுக்கு உத்வேகம் சூரியனிற்கு ஒளிதரும் அந்தப்பரம்பொருளின் பேரொளி! மனிதன் தாவரத்திற்கும் மேம்பட்டவன். தாவரத்தை விட மேம்பட்ட செயலை தனது அந்தக் கரணத்தினால் செய்யும் ஆற்றல் உள்ளவன் மனிதன். ஆகவே அந்தக் கரணத்தில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியைப் பெற்று வளர்த்தல் மனிதன் செய்யும் யோகம், சூரியனின் பேரொளியை பெற்று உணவாகி வளர்த்தல் தாவரத்தின் யோகம்.


தலைப்பு இல்லை

Snake Okra    
பாம்பு வெண்டிக்காய்!    

மந்திர ஜெபத்திற்கு எந்த மாலையைப் பயன்படுத்தினால் அதிக நன்மை?

இன்று பலரும் மந்திர சாதனைக்கு எந்தமாலையைப் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை, அவ்வளவு நன்மை என்று புலம்புவதைக் காண்கிறோம்.  இது அடிப்படையில் மந்திர சாதனையின் நோக்கம் தன்மை புரியாதவர்கள் கூறும் கூற்று. 

மாலைகளை மாற்றியவுடன் அதிக சக்தி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிப்பது தவறு. 

மந்திரம் என்றால் மனதைத் திடப்படுத்துவது என்று பொருள். மனம் என்ற சொல்லை விரித்துச் சொல்வதானால் மேல்மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான் காக்கி அந்தக்கரணங்கள் என்று சொல்லுவார்கள் சித்தர்கள். 

மந்திர சாதனையின் முதல் சித்தி மேல் மனதின் சலனிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தி எண்ணங்கள் குறைந்து சாதனைக்கு எடுத்துக்கொண்ட மந்திரத்தில் மேல் மனம் லயமாகுவது. இப்படி நடந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒரு மடங்கு. 

மந்திர சாதனையின் அடுத்த சித்தி புத்தி தெளிவடைதல், புத்தி தெளிவடைந்தால் சித்தத்தில் ஏற்படும்  விருத்திகளை கட்டுப்படுத்தலாம். இப்படி புத்தி தெளிந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒன்றுக்கு பத்து மடங்கு. 

மூன்றாவது சித்தி சித்த விருத்தி நிரோதமாதல், எண்ணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளிருந்து எழுந்து எம்மைக் குழப்பாமல் சித்தம் புத்தியால் கட்டுப்படுத்தக்கூடிய அளவு ஆற்றலைப் பெறுதல். இப்படி ஜெபிக்கப்படும் மந்திரத்திற்கு ஒன்று 100 மடங்கு பலன். 

 நான் காவது எமது ஆங்காரம் நான் பணக்காரன், நான் அறிவாளி என்ற சிறு ஆங்காரம் ஒழிந்து நான் ஜெபிக்கும் மந்திர தெய்வத்தின் தன்மையுடையவன் என்று உணர்தல். இது நடந்தால் மந்திரத்திற்கு 1000 மடங்கு பலன். 

ஐந்தாவது எமது மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கும்  நாம் உபாசிக்கும் தெய்வத்தின் தன்மை பெறுதல், இதற்கு பலன் லட்சம், கோடி என்று உங்கள் மனத்திருப்திக்குத் தேவையான எண்ணிக்கையைச் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். 

இதை விட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் குறித்த மாலைகள், குறித்த மந்திரங்களுக்கு என்ற விதிகள் அவை சாதனைக்கு மேற்கூடியபடி அந்தக்கரணங்கள் ஒழுங்காகினால் பிரபஞ்சத்தில் இருந்து குறித்த தெய்வ சக்தியை எம்மில் ஈர்த்து சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதே. 

ஆகவே ஒரு சாதகன் ஆரம்ப காலத்தில் தனது சாதனையை அந்தக்கரணங்கள் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கான எளிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விடுத்து தங்கமணி மாலையில் ஜெபம் செய்தால் ஒரு லட்சம் பலன் என்று கூறியிருப்பதைக் கேட்டு தங்கமணி மாலை செய்ய பணமில்லையே, இருந்தால் விரைவாக முன்னேறலாமே என்று மயங்கி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. இவை எல்லாம் முற்காலத்தில் சாதனையைச் சாதாரணமானவர்கள், தகுதியற்றவர்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காக நுட்பமாகத் தடைகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட விதிகள். உண்மை சாதனை சித்தியின் நுட்பம் அந்தக்கரணங்களைச் சீர்படுத்துவதில் இருக்கிறது. 

தற்காலத்தில் சாதனை செய்யும் ஆர்வம் அதிகரித்து வருவதால் அதை வியாபாரமாக்க ஜெபமாலை வியாபாரம் நல்ல வழியாகிப் போவதால் இப்படியான சாதனையில் முக்கியத்துவம் குறைந்த விஷயங்கள் அதிகம் பிரபலப்படுத்தப்படுகிறது. 

ஆகவே உண்மையில் சாதனை செய்யும் ஆர்வமிருந்தால் உங்கள் கைகளில் எண்ணிக்கையினை எண்ணும் முறையினைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிக அளவு ஜெபம் செய்யும் சாதகர்களாக இருந்தால் குறித்த தெய்வ மந்திரங்களுக்கு சாஸ்திரம் கூறும் எளிய மாலைகளைப் பயன்படுத்துங்கள். அதை விடுத்து கிடைத்ததற்கரிய, விலைகூடிய மாலைகளைத் தேடி சாதனையைச் செய்யாமல் விடாதீர்கள். 

Friday, October 25, 2019

தலைப்பு இல்லை

விதை உலகைப் படைப்பதற்கான குறியீடு! இது பழைய தலைமுறையின் செய்தியைத் தாங்கிக் கொண்டு புதிய சக்தியுள்ள உலகத்தை உருவாக்க உறைந்திருக்கும் ஆற்றல். 

விதை பூச்சியத்திற்குள் நிறைந்திருக்கும் இராச்சியத்தைப் படைக்கும் ஆற்றல்!

விதை எல்லாவற்றையும் தன்னில் கொண்டிருக்கிறது, ஆனால் அதை வளரும் வரை பார்க்க முடியாது! 

நிலத்திற்கு கீழிருந்து ஆற்றலைப் பெற்று ஆகாயத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது! விதை மனிதன் தனது ஆற்றலை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதன் குறியீடு!

தன்னிடமுள்ள தாழ்ந்த குணத்தின் ஆற்றலை எல்லாம் பயன்படுத்தி உயர் தெய்வ  குணத்தைப் பெற்றிட வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு! 

நல்வித்துக்களை இந்தப் பிரபஞ்சத்தில் நடுவோம்!


Thursday, October 24, 2019

தலைப்பு இல்லை

இயற்கை விவசாயம் என்பது பயிர்களைப் பராமரிப்பது இல்லை! 

மண்ணைப் பராமரிப்பது!

Rodolf steiner என்பார் இப்படிக் கூறுகிறார். 

So long as one feed on food from unhealthy soil, the spirit will lack the stamina to free itself from the prison on the body!

எமது பழமொழிகளில் தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்று கூறுவதைப் போன்றது தான் இது! 

மண்ணில் உயிர் இருந்தால் அதில் வளரும் தாவரமும் உயிர் வளர்க்கும்! 

மண் மலடாக இருந்தால் அதை உண்ணும் உடலும் மலடாகும்! 

மண்ணிற்கு உயிர் ஊட்டும் முறை இயற்கை விவசாயம்!


Tuesday, October 22, 2019

தலைப்பு இல்லை

Good bye Chennai!
Meeting
Connecting
Sharing knowledge
Is an incredible experience! It's elevate the mind and soul!
Thanks for your hospitality and Love!
Back to Home    

Monday, October 21, 2019

தலைப்பு இல்லை

அக்னி!

உருமாற்றும் சக்தி

திருவுருவ மாற்ற சக்தி

குருவான சக்தி

அருவுருவ யோக சக்தி


Saturday, October 19, 2019

தலைப்பு இல்லை

நமது இயற்கை வேளாண்மை வெண்டிக்காய்!

Wednesday, October 16, 2019

தலைப்பு இல்லை

நன்றி ரகு! உதவி என்பது ஒருவருக்கு எது தேவை என்று அறிந்து அதை அவர் கேட்காமல் அல்லது கேட்க முன்னர் செய்வது! 

அப்படிச் செய்யக் கூடிய நான் பெற்ற நட்புகள்! நான் பெற்ற நட்புகள் என்பதை விட குருவின் அருள் என் மீது கொண்ட கருணையால் நான் எழுத்தாளனாகி, புத்தக ஆசிரியனாகி பெற்ற நட்புகளுடன்!


Friday, October 11, 2019

தலைப்பு இல்லை

குழுவாகச் செயற்படுவதன் நோக்கம் என்ன? 

வலிமையை பகிர்ந்து கொண்டு மேலும் வலிமையாதல்! 

குழு எனும் போது குடும்பமாக இருக்கலாம். வேலைத் தளத்தில் உள்ள குழுவாக இருக்கலாம். 

அரசியல் கட்சியாக இருக்கலாம். 

எந்த மனிதர்களும் பூரணமானவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. திறமை இருப்பதைப் போல பலவீனமும் இருக்கிறது. 

திறமைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், பலவீனங்கள் நிரப்பப்பட வேண்டும். 

இதற்காகவே குடும்பம், குழுக்கள் தேவை. 

தனது பலத்தை மற்றவர்களுக்கு பகிரும் அதே வேளை தனது பலவீனத்தை நிரப்பும் பலத்தை இன்னொருவரிடம் பெற வேண்டும். 

இப்படி இல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும், எல்லாம் முடியும், நான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று எண்ணும் போது உண்மையில் நாம் பலவீனமாகி விடுகிறோம். 

கணவன் மனைவிக்கு பலமாக இருக்க வேண்டும் 

மனைவி கணவனுக்கு பலமாக இருக்க வேண்டும்

அண்ணன் தம்பிக்கு பலமாக இருக்க வேண்டும்

தம்பி அண்ணனுக்கு பலமாக இருக்க வேண்டும். 

நண்பர்கள் நண்பர்களுக்கு பலமாக இருக்க வேண்டும். 

ஒவ்வொருவரும் தாம் வாழும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பலமாக இருக்க வேண்டும். 

பலமாக இருத்தல் என்பது தமது தனித் திறன்களையும், அறிவினையும், உழைப்பினையும் பகிர்ந்து கொள்ளுதல். 

வெறுமனே வார்த்தையில் நம்பிக்கை கொடுப்பது மட்டுமல்ல!


Thursday, October 10, 2019

வெண்டிக் காடு...

இயற்கை வேளாண்மை!
உரம் இல்லை
பூச்சி மருந்து இல்லை
எந்த செயற்கைப் பொருட்களும் தாவரத்திற்கோ மண்ணிற்கோ இடுவதில்லை!
இயற்கையில் விளைந்த பொருட்களின் சுவையே அவை இயற்கை விவசாயப் பொருட்கள் என்பதற்கு சான்று!

Tuesday, October 08, 2019

தலைப்பு இல்லை

அமேசன் காட்டுத் தீ பற்றிய ஒரு உரையாடல்! 

எட்டாம் மாதம் ஒளிபரப்பானது இன்று தான் தெரிந்தது youtube இல் இருக்கிறது என்று! 


வித்யாரம்பம் கரிஷ்யாமி...

ஒவ்வொரு விஜயதசமிக்கும் புதிதாக ஒவ்வொன்றைக் கற்பதற்கு சங்கல்பம் எடுத்துக் கொண்டு முயற்சிப்பது வழக்கம்!

புதிதாக கற்பதால் மூளை இளமையாக இருக்குமாம்!

ஆகவே அடுத்த வருடத்திற்கு இயற்கை விவசாயத்திற்கு தேவையான பூச்சியலும், தாவரவியல் அறிவினை மேம்படுத்த திட்டம்!

மற்றது உப நிஷதங்கள் படிப்பது...

கார்ல்மாக்ஸின் மூலதனம் படித்துப் புரிய வேண்டும் என்று ஒரு ஆவல்

தந்திரலோக ஆச்சாரியார் அபிநவ குப்தரின் திரிக தத்துவம் விளக்க நூல்!


Monday, October 07, 2019

தலைப்பு இல்லை

நவராத்ரியிற்கு ஒரு புறம் சகலகலாவல்லி மாலைக்கு நாம் பொருள் எழுதி முடிக்க, இன்னொரு புறம் தமிழ்த் தாய் அந்தாதி எழுதி முடித்திருக்கிறார் அம்மா பெற்ற இளவல்! 

மூன்று பத்துச் செய்யுள் கொண்டிருப்பதால் தமிழ்த் தாய் முப்பதிற்றந்தாதி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இன்று சரஸ்வதி பூஜையின் பின்னர் வீட்டில் அரங்கேற்றம் நடைபெற்றது! 

அறிஞர் சபை பாடலை அங்கீகரித்து நூலாக வெளிவர ஆவன செய்யப்பட்டது (வேறு யாரும் இல்லை அது நான் தான்!    ) 

பலவருடங்கள் தடைபட்டிருந்த கவிதைப் பிரவாகம் மீண்டும் பிரவாகிக்க ஆரம்பித்திருக்கிறது! இன்னும் பல நூற்கள் படைக்க வாழ்த்துக்கள் ! 

எமது முன்னோர்கள் வழிபட்டு அருள்பெற்ற திருமறைக்காடரினதும் யாழைப்பழித்த மென்மொழியம்மை அன்னையின் அருளும் ஆசிகளும்!    


Sunday, October 06, 2019

தலைப்பு இல்லை

சித்தப்பா சொல்லிக் கொடுத்த எதுகை மோனை விளையாட்டில் அம்ருதவர்ஷினியின் கவிதை

மலையைப் பார்த்து மலைத்தது மழை

அதனால் மாத்தளையில் வந்தது மழை

நாங்களும் இப்படி முயற்சிப்போம் என்று மகளிற்கு போட்டியாக நாம் கூறிய கவிதை வரி கீழே;

எமது ஊர் "அழகுமலைச் சிகரத்தில் அழகு மழை


Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 11

சரஸ்வதி தியானம் - 11 {சகலகலாவல்லி மாலை பாடல் - 10}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே
வெள்ளைக்குடை தர்மத்தின் சின்னம், தூய மனதுடன் வெண்குடைக்கு கீழமர்ந்து மண்ணை ஆளும் மன்னன் எனது பண் கண்ட அளவில் எனக்கு பணியவேண்டும் என்ற ராஜவசிய வேண்டுதல் வைக்கிறார்! ஏனென்றால் இது பாடப்பட்ட சந்தர்ப்பம் அத்தகையது.
இந்தக்காலத்தைப்போலவே அந்தக்காலத்திலிம் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்திருக்கும் போல! டில்லி சுல்தானுக்கு தமிழ் தெரியாது, குருமரகுருபரரிற்கோ இந்தி தெரியாது! ஆனால் எப்படியாவது மூடிக்கிடக்கும் காசி விசுவ நாதர் கோயிலை திறக்கவேண்டும். அதற்காக சுல்தானை மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு வேண்டுகோள் விடுக்க சுல்தான் "என்னுடன் பேசுவதற்குரிய மொழி தெரியாத உனக்கு உதவி செய்யமுடியாது என்று" அவமதித்து அனுப்பிவிட்டான். மனம் வெதும்பிய குமரகுருபரர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எதையும் செய்யாமல் 😂😂🤭 எல்லா ஞானத்தையும் தரக்கூடிய சரஸ்வதியை உபாசித்து இந்த சகலகலாவல்லி மாலையைப் பாடி இந்தியும், உருதும் பேசும் ஆற்றலைப் பெற்று சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சுல்தானிடம் பேசி காசி விசுவ நாதர் கோயிலை வழிபாட்டிற்காக மீளவும் திறந்து பெற்றார் என்பது கதை!
ஆக குருமரகுருபரர் தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை தெளிவுறக் கற்று அதனால் பெற்ற செம்மையான தெளிந்த மனத்தினால் விரைவாக அயல் மொழியான இந்தியை துரிதமாகப் படித்துக்கொண்டார் என்பது புலனாகிறது. இன்றைய நவீன ஆய்வுகளும் தாய்மொழியை சிறப்பாக கற்பவர்களுக்கு இரண்டாவது மொழி கற்கும் ஆற்றல் இலகுவாக வரும் என்பது நிருபணமாகியுள்ளது.
மொழியைக் கற்றால் வரும் கூர்மையான மனமும் மூளையும் ஆற்றல் மிக்க மன்னனைப் பணிய வைக்கும் ஆற்றலைத் தரும்.
சகலகலாவல்லி என்பதை சகல கலைகளிலும் வல்லமை உடையவள் என்றே பலரும் பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்திற்குரிய சூடாமணி நிகண்டு வல்லி என்றால் விரைந்து என்று பொருள் தருகிறது. ஆக சகல கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தருபவள் என்று பொருள். குமரகுருபரரிற்கும் விரைந்து இந்தி கற்கும் ஆற்றலைத்தந்தால் இந்தப்பொருளே பொருந்தி வருகிறது.
எல்லாக்கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தரும் அன்னையே பிரம்மன் முதல் பல்கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னைப்போன்ற கண்கண்ட தெய்வம் இருக்கிறார்களா என்று வியந்து போற்றுகிறார்.
இந்தப் பாடல்தொகுப்பிற்குரிய கதைப்படி டில்லி சுல்தானை தான் வசப்படுத்த வேண்டும் என்ற இச்சாக்தியினை (will power) இந்தக்கடைசிப் பாடலின் முதல்வரியில் வைத்திருக்கிறார்.
இந்தப்பாடல் கற்கும் கல்வியால், சரஸ்வதியின் அருளால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை மாணவர்களுக்குத் தரும் ஒரு அரிய பாடல்!
இத்துடன் சரஸ்வதி தியானம் என்ற தலைப்பில் கடந்த நவராத்ரியின் கல்வித் தெய்வம் சரஸ்வதி தேவியையும் அவளது ஆற்றல்கள் பற்றிய சிந்தனையும் முற்றிற்று!
  

சரஸ்வதி தியானம் - 10

சரஸ்வதி தியானம் - 10 {சகலகலாவல்லி மாலை பாடல் - 09}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சொற்கும் பொருட்கும் உயிராம்
மெய் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலந்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாண நடை
கற்கும் பாதாபுயத் தாயே
சகலகலாவல்லியே
சொல்லும் சொல்லிலும், அதன் பொருளிலும் உயிர்த் தன்மை இருக்க வேண்டும். உயிர்தன்மையினை சைதன்யம் என்று சொல்லுவார்கள். இந்த சைதன்ய சக்தி எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதால்தால் உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
தைத்ரிய உப நிஷதத்தின் பிருகுவல்லீ சுலோகம் 10.4 கூறுகிறது; பரம்பொருளை அதைத்திற்கும் ஆதாரமானவராக போற்ற வேண்டும். அப்படிப்போற்றுபவன் தன்னை அறிந்து தன்னில் நிலைபெற்றவனாக ஆகிறான். அவரை ஆற்றலுள்ளவனாக அறிந்தவன் ஆற்றல் வாய்ந்தவனாகிறான். சிந்தனையாகப் போற்றுபவன் சிந்திக்க வல்லவன் ஆகிறான். ஆசைகள் அவனுக்கு அடிப்பணிகின்றன. அவரைத் தலைவராகப் போற்றுபவன் தலைவனாகிறான். அவரை அழிக்கும் சக்தியாகப் போற்றுபவனைச் சூழ உள்ள பகைவர்களும் வெறுப்பவர்களும், எதிரிகளும் அழிக்கப்படுகின்றார்கள் என்று கூறுகிறது.
இந்த உப நிஷத வாக்கியத்தின் உட்பொருளை அறிந்த மகா ஞானியே குருமரகுருபர் என்பது இந்தப்பாடலில் முதல் வரிகளில் தெரிகிறது. சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உயிர்தருவது மெய்ஞானம், மெய் ஞானத்தின் தோற்றமே சரஸ்வதியிடமிருந்தே பிரவாகிக்கிறது. அந்த சரஸ்வதியை மெய் ஞானத்தின் பிரவாகமாக மேலே தைத்திரீய உப நிஷத்தின் பிரகாரம் தியானிக்க வல்லவர்களது சொற்கள் வாக்கு சித்தியாகிறது. சொன்ன சொல் உயிர்ப்புடன் நடக்கிறது. ஆசி கூறினால் அந்த ஆசியில் உயிர்த்தன்மையுடன் ஆசி பலிக்கிறது. ஆகவே சரஸ்வதியை சொல்லிற்கும் பொருளிற்கும் உயிராக இருக்கும் மெய்ஞானமாக தியானிக்க வேண்டும்.
எப்படித் தியானிக்க வேண்டு என்ற அழகினை அடுத்த வரிகளில் கூறுகிறார். நிலத்தில் படும் அளவிற்கு நீண்ட துதிக்கையுடைய சிறந்த பெண் யானையும், அரச அன்னமும் வெட்கப்படும் அளவிற்கு இடை அசைவு இருக்கும் பேரழகுள்ள தாமரை போன்ற பாதங்களை உடைய தாயே உன்னை மெய் ஞானமாக தொழுது தியானிப்பவர்கள் சொல்லும், அதன் அர்த்தமும் உயிர்ப்படையும் என்ற உண்மை தெரிந்து தியானிப்பவர்கள் யார் உள்ளார்கள்? எனக்கு இந்த இரகசியம் தெரிதிருக்கிறது என்று உள்ளூர மகிழ்ந்து பாடுகிறார்.
சரஸ்வதியை மெஞ்ஞானத்தின் தோற்றமாக் தியானிப்பவர்கள் வாக்கும் சொல்லும் அதன் பொருளும் உயிர்ப்புடன் இருக்கும்.

சரஸ்வதி தியானம் - 09

சரஸ்வதி தியானம் - 09 {சகலகலாவல்லி மாலை பாடல் - 08}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சொல்விற்பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை
கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு
காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே
சகல கலாவல்லியே
செல்விற்பனம் என்பது மொழியையும் சொல்லியும் எப்படி திறமையாக உபயோகிப்பது என்று திறமை. இன்றைய காலத்தில் communication skill என்றும் சொல்லலாம். பலர் தமது அறிவை வெளிக்காட்டுகிறோம் என்று வார்த்தைகளைக் கொட்டுவதால் மற்றவர்கள் அவரை அறிவுடையவர்கள் என்று எண்ணிவிடமாட்டார்கள்.
சிலர் தமக்கும் முன் இருப்பவர்கள் மன நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சிலும் சொல்விற்பனம் இருப்பதில்லை.
யார் சூழலுக்குத்தகுந்த சொற்களை மற்றவர்கள் கேட்கக்கூடிய வகையில் இனிமையாக திறமையாக, ஆழமாக, தெளிவாக கூறக்கூடிய வல்லமை இருக்கிறதோ அவனுக்கு சொல்விற்பனம் இருக்கிறது எனலாம். இப்படியான சொல்விற்பனம் சரஸ்வதியின் அருளால் வருவது.
அடுத்தது அவதானம், தற்கால நவீன மூளையியல் ஆய்வுகள் சாதாரணமாக ஒரு மனிதன் தனது முன்மூளையின் ஆற்றலில் நான்கு விஷயங்களை மாத்திரமே அவதானித்து கிரகிக்ககூடிய ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்று கண்டறிந்துள்ளார்கள். முற்காலத்திலும், தற்காலத்திலும் சரஸ்வதி உபாசனையின் வல்லமையால் நாற்கவனகம் என்று நான் கு விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கக் கூடியவர்களும், எண்கவனகம் என்ற எட்டு விஷயங்களை கவனிக்கக்கூடியவர்களும், பத்து விஷயங்களைக் கவனிக்கக்கூடிய பத்துக் கவனகர்களும், பதினாறு விஷயங்களை கவனிக்கக்கூடிய பதினாறு கவனகர்களும், முப்பத்திரெண்டு கவனகம், நூறுகவனகம் என்றேல்லாம் மன ஆற்றல் உள்ளவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கவன ஆற்றல் ஒருவன் தனது மூளையையும் மனதையும் சரியாக ஒழுங்குபடுத்துவதால் கிடைக்கக்கூடியது. இதற்குரிய வழிதான் சரஸ்வதி உபாசனை.
கவி சொல்லும் வல்லமைக்கு யாப்பிலக்கணம் தெரிய வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தாலும் நல்ல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி கவி சொல்ல முடியாது.இதற்கு மனம் மிக நுண்மையாக சீராக சந்தமாக இயங்க வேண்டும். இப்படி இயங்க சரஸ்வதியின் அருள் இருக்க வேண்டும்.
ஆக முதல் வரியில் சொல்விற்பனமும், அவதான சக்தியும், கவி சொல்ல வல்ல ஆற்றலும் இவற்றிற்குரிய அறிவையும் தந்து தன்னை அடிமை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். இவற்றைத் தரும் தேவி அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சகலகலாவல்லியான உனக்கு அறிவாற்றலால் சிதையாத புகழ் கிடைக்கவல்ல கல்வி என்ற பெரும் செல்வப்பேற்றை எனக்குத் தருவது முடியாத விஷயம் அல்ல.
இன்று பலரும் கல்வி என்று மனதை நெருக்கும், அழுத்தம் தரும் விஷயங்களையே கற்கிறார்கள். அவதானக்கலை எனும் கவனகம், கவி சொல்லும் யாப்பிலக்கணம் எல்லாம் நுண்மையாக மனதின் ஆற்றலை வளர்க்கும் கலைகள். இவற்றையும் மாணவர்கள் கற்க வேண்டும். இப்படி மனதின் ஆற்றலை வளர்த்துக் கொள்பவர்களுக்கு எந்தத் தொழிலும், கல்வியும் எளிதாக செய்யும் ஆற்றல் வாய்க்கும்.

சரஸ்வதி தியானம் - 08

சரஸ்வதி தியானம் - 08 {சகலகலாவல்லி மாலை பாடல் - 07}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே!
இந்தப்பாடல் நாம் எப்படி கற்கவேண்டும் என்று தெளிவைத் தருகிறது. பள்ளிக்கூடத்தில் நவராத்ரியிற்கு சகலகலாவல்லி மாலை படிக்கிறோம், அதன் பொருள் என்ன என்று ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. பொருள் தெரியாமல் படிக்கும் எதுவும் வாழ்க்கைக்கு உதவுவதில்லை. மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் கடைசியில் இதைப்போல் ஒரு வரியை எழுதி வைத்தார், சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து" என்று, ஆகவே எமது முன்னோர்கள் மனிதனது மனம் மூளை எப்படிச் செயல் புரிகிறது என்பதை நன்கு ஆய்ந்து தெளிந்துதான் கலைகளை வகுத்திருக்கிறார்கள். பொருள் தெரியாமல் உருப்போடுபவர்களது ஞாபகம் நீண்டகாலம் இருப்பதில்லை என்பதை தற்போதைய மூளை நரம்பியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது. ஒரு விஷயத்தின் தொடர்பினை ஆராய்ந்து தெளிந்தவனது மனதில் அந்த குறித்த விஷயம் ஆழமாகப் பதிந்து பின்பு தேவைப்படும் நேரத்தில் ஞாபகசக்தியினூடாக எண்ணமாக எழுந்து உபயோகப்படும். ஆகவே சகலகலாவல்லி மாலையோ, சிவபுராணமோ, தேவாரமோ, அபிராமி அந்தாதியோ பொருள் தெரியாமல் படித்தால் பலனில்லை. பொருள் தெரிந்தால் அதனால் கிடைக்கும் பலனும் தெரியும்.
இதுவரை ஆறு பாடல்களுக்கு பொருள் புரிந்ததால் சரஸ்வதி தேவியின் தத்துவம், அவளை எமது எண்ணத்தில் இருத்தி தியானிப்பதாலும் கிடைக்கும் பலன் பற்றி தெரிந்துகோண்டோமல்லவா? ஆகவே எந்தப்பாட்டையும் பொருளுடன் தெரியவேண்டும், பொருள் தெரிந்தால் அதைப் படிப்பதால் பலன் என்னவென்று தெரியும்.
இப்படி பாட்டிற்கு பொருளும் அதன் பயனும் தெரியவேண்டும் என்றால் அவனிற்கு தேவியின் கடைக்கண் பார்வை கிட்ட வேண்டும் (ஆஹா.. இந்தப்பாட்டிற்கெல்லாம் பொருள் சொல்கிறேன் அல்லவா, எனக்கு அவள் கடைக்கண் பார்வை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டார் குமரகுருபரர் 😍🤩)
இப்படி தேவியின் கடைக்கண் பார்வை கொண்டு பெறும் ஆற்றலால் முத்தமிழ் என்ற இயல் இசை நாடகம் ஆகிய மூன்றிலும் அமுதம் தெளித்தால் கிடைக்கும் அழியாத காவியங்கள் உருவாக வெள்ளை அன்னத்தில் வீற்றிருக்கும் பெண்ணே, சகலகலாவல்லியே உனதருளல்லாவா என்கிறார்.
இந்தப்பாடலுக்குரிய தியானம் வெள்ளை அன்னத்தில் அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியின் கடைக்கண் பார்வை ஒருவன் தன் மேல் படுவதாக பாவிக்க வேண்டும். இந்த பாவனை சரிவந்தால் அவன் பாட்டும் அதன் பொருளும், பொருளல் பொருந்தும் பயனும் அறிந்து சுவையான அமுதம் தெளித்த படைப்புகளை ஆக்கும் வல்லமை உள்ள கலைஞன் ஆவான்.

சரஸ்வதி தியானம் - 07

சரஸ்வதி தியானம் - 07 {சகலகலாவல்லி மாலை பாடல் - 06}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகலகலா வல்லியே!
ஆறாவது பாடல் இன்னும் என்ன கலைகளில் தான் தேர்ச்சி பெறவேண்டும் என்ற வேண்டுதலும், சரஸ்வதியின் அறிவாற்றல் ஐம்பூதங்களிலும் நிறைந்து நிற்கிறது என்ற பாவத்தை உணர்ந்து பாடுகிறார்.
இசை என்பது மனதினை ஒருமைப் படுத்தி ஒலிகளை மனதிற்கு இதமாக வரும் வகையில் கோர்த்து எழுப்பப்படும் ஒரு நுண்ணிய கலை. இந்த இசையில் பண் என்பது தமிழர்கள் வகுத்த ஒழுங்கு. தற்காலத்தில் இராகம் என்று வழங்கப்படுவதற்கு ஒத்ததே பண் எனப்படும். பாடலின் இனிமையைப் பண் தரும். பண் இருப்பதால் மனம் லயமடையும். மனம் லயமடைந்தால் இன்ப உண்ரச்சி தோன்றும். இதுவே இசை மனிதனில் உண்டாக்கும் தாக்கம். ஆகவே மற்றவர்கள் மனதிலும், தனது மனதிலும் இன்ப உணர்ச்சி உருவாக்க அவசியமான கலை இசை, அந்த இசை இயங்குவது பண் எனப்படும் இராகத்தில் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஒலியமைப்பின் அடிப்படையில்.
மனதிற்கு இசை என்றால் உடலுக்கு பரதம். பாவத்தையும் {உணர்ச்சியையும்} ராகத்தையும் தாளத்தையும் உடலில் வெளிப்படுத்தும் கலை பரதம். ஒருவருடன் உரையாடாமல் உடல் மொழியில் கருத்தை தெரிவிக்கும் ஆற்றலைத் தரும் கலை பரதம். பரதம் பயில்வது மனதையும் உடலையும் இணைக்கும் ஆற்றலைத்தரும். மனதும் உடலும் இணைந்து செயல்புரியும் ஆற்றலைப் பெற்றால் அவர்கள் மிகுந்த சக்தியுடைய மனிதர்களாக இருப்பார்கள். யோகமும் இதையே சாதிக்கிறது. ஆனால் யோகத்தின் நோக்கம் இறைவனை அடைதல், ஆனால் பரதத்தின் நோக்கம் மனதையும் உடலையும் சம நிலைப்படுத்தி இன்ப உணர்ச்சி பெறல். இப்படி ஒருமை பெற்ற மனத்தினதும், உடலினதும் ஆற்றலால் தெய்வ நிலை பெறவேண்டும் என்பதாலேயே எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவம் ஆடவல்லானாகவும் நடராஜனாகவும் குறிக்கப்பட்டிருக்கிறார்.
மனதையும், உடலையும் இணைத்து ஒழுங்கமைக்கும் பண்ணும் பரதமும் அறிந்து தன்னை வலுப்படுத்திய ஒருவன் தனது அறிவினை வலுப்படுத்த கல்வியும் நல்ல நூற்களையும் கற்க வேண்டும்.
ஒருவனுக்கு மனதையும் உடலையும் ஒழுங்குபடுத்தும் பண்ணும், பரதமும், அறிவை வளர்க்கும் கல்வியும் நல்ல நூற்களது கற்கையும், இனிமையான மொழியாற்றலும் வருமானால் உலகில் பெருமதிப்பு உள்ளவனாக இருப்பானல்லவா?
ஆகவே இவை நான்கும் எண்ணும் போது எளிதாக ஒருவனுக்கு வாய்த்தால் அவன் இந்த சமூகத்தில் இன்பமாக வாழும் நிலை பெறுவான். இப்படி ஒருவன் தனது உலக வாழ்க்கையை சரிசெய்து இன்பமுடையதாக்கினாலும் பிரபஞ்சத்தின் பேரறிவினைப் பெறாமல் அறிவின் எல்லை பூர்த்தியடையாது. ஆகவே அவன் எழுதா மறை எனும் வேதங்களின் உட்பொருளை அறியும் ஆற்றலுள்ளவனாகவும் இருக்கவேண்டும். பிரபஞ்சத்தின் மூல அறிவு சக்தியான சரஸ்வதியின் அருள் இல்லாமல் ஒருவனால் வேதங்களின் உட்பொருளை அறிந்துகொள்ள முடியாது. ஆகவே எழுதாமறையின் அறிவும் நல்காய் எய்த வேண்டும் என்றார்.
அடுத்த வரிகள் ஸ்தூலப்பிரபஞ்ச ஆக்கப்பட்டிருக்கும் பஞ்சபூதங்களிலும் அறிவு சக்தியாக சரஸ்வதி நிறைந்திருக்கிறாள் என்பதை உணர விண்ணும் புவியும், புனலும், கனலும் வெங்காலும் என்று ஐம்பூதங்களிலும் நிறைந்த அறிவு சக்தியே அன்பர்களின் கண்களிலும், மனதில் கருத்தாகவும் நிறைந்திருக்கிறாய் என்று பாடுகிறார்.
கண்களில் வழியே செல்லும் அனைத்துமே ஒருவன் மனதில் பதிந்து கருத்தாகிறது. இப்படி கண்கள் வழி ஏற்கும் கருத்துக்களை சீர்துக்கும் அறிவு சக்தி சரஸ்வதி. ஆக கண்களில் சரஸ்வதியின் ஆற்றல் இல்லாமல் கருத்து மனதிற்கு மூளைக்குப் பதிவதில்லை.
இந்தப்பாடல் சரஸ்வதியிடம் உலக வாழ்க்கைக்குத் தேவையான இசை, நடனம், பல நூற்கல்வியில் சிறந்து விளங்கும் அறிவும், ஆன்ம முன்னேற்றம் பெற வேத நூல் அறிவும் பெற வேண்டுகிறது. இதற்கு அன்னையை ஐம்பூதங்களில் கலந்து நிறைந்த அறிவு சக்தியாகவும், எமது கண்களிலும் நிறைந்திருக்கும் சக்தியாகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும்.

சரஸ்வதி தியானம் - 06

சரஸ்வதி தியானம் - 06 {சகலகலாவல்லி மாலை பாடல் - 05}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பஞ்சப்பிதம் தரும் செய்ய பொற்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும்
அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்
சகல கலாவல்லியே
அடுத்த பாடல் படைப்பாற்றல் பற்றியது. படைப்பாற்றல் இருக்க ஒருவனுக்கு ஹிருதயம் மலர்ந்திருக்க வேண்டும். ஹிருதயம் மலர்ந்திருத்தல் என்பது சரியாக நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டியது.
இன்று பலரும் செயல்களைச் செய்வது தமது புகழிற்காக, பணத்திற்கா, தமக்கு மட்டும் நன்மைக்காக என்ற அடைப்படையில் தமது அறிவாற்றலைப் பயன்படுத்துகிறார்கள். இது ஹ்ருதயம் மலராத நிலை.
பாட்டு எழுத வல்ல மொழியாற்றல் உள்ளவர்களும் தமது மனதில் இருக்கும் கசடுகளை அகற்றாமல் ஹ்ருதயம் மலராமல் சிக்கலில் மாட்டிக்கொள்வதைக் காண்கிறோம்.
ஹ்ருதயம் மலராது யோகம் செய்கிறோம் என்பவர்கள் வெறும் உடலை வளைத்து வித்தை செய்வதையே யோகம் என்று எண்ணத் தொடங்கி விடுகிறார்கள்.
ஹ்ருதயம் மலராத பேச்சாற்றல் உள்ளவர்கள் வீண்கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்கள்.
ஹ்ருதயம் மலராமல் கடவுளை வணங்குகிறோம் என்று பக்திமானாகியவர்கள் பேதபுத்தி நீங்காமல் என்மதம் பெரிதா உன்மதம் பெரிதா என்ற சர்ச்சையில் இறங்கி பிரிவினை பேசத் தொடங்கி விடுவார்கள்.
ஹ்ருதயம் மலர்தல் என்பதை புரிவது என்றால் சுருக்கமாக மனதிலுள்ள தீய பண்புகளும் எண்ணங்களும் அகன்று தன்னைப்போல் மற்றைய உயிர்களையும் சமமாகப் பார்க்கும், பேதபுத்தி அற்ற ஞானம். நவீன உளவியலில் ஒப்பிடுவதாக இருந்தால் Empathetic character என்று ஒப்பிடலாம். ஆனால் முழுமையான அர்த்தத்தைத் தராது.
இப்படி ஹ்ருத்யம் மலரும் நடைமுறை சாதாரண தாமரை மலர்வதைப்போன்ற ஒன்றே! எப்படி சேற்றிலிருக்கும் தாமரை சூரியனைக் கண்டு சேற்றைவிட்டு, நீரை விட்டு வெளியே வந்து மலர்ந்து சிரிக்கிறதோ அதைப்போல் ஒருவனது மனமும், நெஞ்சும் காமம், குரோதம், அழுக்காறு, வெகுளித்தனம், கோபம் என்ற சேற்றால் நிறைந்திருக்கிறது. இதையே நெஞ்சத்தடத்து என்று நெஞ்சமாகிய தடாகத்திலிருந்து அறிவுக் கிரகணத்தை கதிர்க்கும் உனது பொற்பாதங்களை கண்டு எனது ஹ்ருதய கமலம் மலராதா? என்கிறார்.
சரஸ்வதியின் பாதங்களை செம்மையான செம்மஞ்சக் குழம்பு தீட்டப்பட்ட பொற்பாதங்கள் என்கிறார். இவை அறிவின் குறியீடு. எப்படி சேற்றிலிருக்கும் செந்தாமரை மலர சூரியன் காரணமோ, அதுபோல் அழுக்கு நிறைந்த நெஞ்சத்திலிருந்து அறிவு மலர தேவியின் பொற்பாதங்கள் காரணமாக இருக்கிறது.
இப்படி தேவியின் பொற்பாதங்களின் கிரணங்கள் ஒருவனது மனதைத் தாக்கினால் அவனது தீய குணங்கள் எல்லாம் நீங்கி படைப்பாற்றல் நிறைந்தவனாகிவிடுவான்.
அதை அடுத்த வரிகளில் பிரம்மாவின் நாவிலும், அகத்திலும் நீ வெள்ளைக்கமலத்தில் அமர்ந்து இருப்பதாலேயே அவர் அனைத்தையும் சீராக படைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவராக இருக்கிறார் என்று ஒப்பிட்டு நிறுவுகிறார்.
முற்காலத்தின் மாணவனின் திறமை அவன் எடுக்கும் பெறுபேறுகளிலிருந்து கவனிக்கப்படவில்லை. அவனது பண்பு மலர்ச்சியிலிருந்தே அறியப்பட்டது. அறிவு கூடிப் பண்பு இல்லாதவர்களே அசுரகள் எனப்பட்டார்கள். அறிவுடன் பண்புள்ளவர்களே தேவர்கள் எனப்பட்டார்கள்.
ஆகவே கல்வியின் அடிப்படை பண்பு மலர்ச்சி!
இந்தப்பண்பு மலர ஒருவனுக்கு சிரத்தையும், ஒழுக்கமும் அவசியம்!
இதைப்பெற ஒரு சாதகன்/மாணவன் சரஸ்வதி தேவியில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட பொன் நிறப்பாதங்களை தனது ஹ்ருதயத்தில் தியானிக்க வேண்டும். இப்படி தியானிப்பவன் பிரம்மாவைப் போன்ற படைப்பாற்றல் உள்ளவனாக இருப்பான்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...