நான் இங்கு கருத்துப் பகிர்வது எவருக்கும் சார்பாகவோ, எவரையும் மாற்றவோ, உபதேசிக்கவோ வழி நடத்தவோ அல்ல!
என்னளவில் நான் இந்த உலகின் ஒவ்வொரு அமிசத்தை இரசித்துக் கொண்டு புரிந்து கொண்டு தெளிந்த அறிவைப் பெற வேண்டும் என்ற பேராவல் கொண்டு பயணிக்கும் பயணி அவ்வளவே! இந்தப் பயணத்தில் என்னால் எவ்வளவு மற்றவர்களுக்கு உதவமுடியுமோ அவ்வளவு உதவலாம் என்ற எண்ணம் உள்ளவன்! பிரபஞ்சத்தின் அளவுடன் ஒப்பிடும் போது எமது இருப்பு என்பதே உண்மையில்லை எனும் நிலையிலேயே நாம் வாழ்கிறோம்!
நான் பகிரும் கருத்துக்கள் பலருக்குத் தெளிவு தருவதால் அவர்கள் தரும் மரியாதையைக் கண்டு பலரும் என்னைப் பலவாறாக தமது கற்பனைக்கு ஏற்றவாறு கற்பித்து உரையாடத் தொடங்குவது உண்டு.
நான் மனிதர்களை எண்ணங்களாகப் பார்க்கப் பழகியவன். எண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய சிந்தனை உடையவன். எண்ணங்கள் மாறக் கூடியவை, ஆகவே மனிதர்களும் மாறுபவர்கள்! இந்த மாற்றத்தைப் புரியாமல் உலகை இறுக்கமாகப் பார்ப்பவர்களே துன்பமடைகிறார்கள். எமக்கு துன்பம் இழைத்தவனும் தனது சிந்தனை மாறி நன்மை செய்யலாம் என்பதை ஏற்க மறுத்து பலர் தமது வாழ்வை வீணடிக்கலாம்.
பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்
முறை வழிப் படூஉம்
என்ற பூங்குன்றனார் வாக்கின் படி மாறும் எண்ணங்களில் ஓட்டத்தில் வாழ்வினை செலுத்தி வாழ்வினைக் கடக்க வேண்டும்.
உத்வேகமும், எண்ணமும் எப்படி செயலாற்றுகிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் அற்றவர்களுடன் நான் முரண்படுவது போன்று தோன்றலாம்.
எனது உரையாடல்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய சிந்தனைத் தெளிவை அடைய விரும்பும் நோக்கம் உடையவை! உணர்ச்சி வசப்பட்டு கொதிக்கும் மனதிற்கு சங்கடம் தரலாம்! ஆனால் இறுதியில் தெளிவினைத் தரும் என்பதே உண்மை!
இன்று பகல் ஒரு பதிவினை நான் இட்ட பின்னர் எனது புத்தகக் கடலில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்த எனது தம்பி, அண்ணா உங்களைப் பற்றிய சரியான விமர்சனம் இதோ என்று தந்த வசனம் கீழே
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.