குழுவாகச் செயற்படுவதன் நோக்கம் என்ன?
வலிமையை பகிர்ந்து கொண்டு மேலும் வலிமையாதல்!
குழு எனும் போது குடும்பமாக இருக்கலாம். வேலைத் தளத்தில் உள்ள குழுவாக இருக்கலாம்.
அரசியல் கட்சியாக இருக்கலாம்.
எந்த மனிதர்களும் பூரணமானவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. திறமை இருப்பதைப் போல பலவீனமும் இருக்கிறது.
திறமைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், பலவீனங்கள் நிரப்பப்பட வேண்டும்.
இதற்காகவே குடும்பம், குழுக்கள் தேவை.
தனது பலத்தை மற்றவர்களுக்கு பகிரும் அதே வேளை தனது பலவீனத்தை நிரப்பும் பலத்தை இன்னொருவரிடம் பெற வேண்டும்.
இப்படி இல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும், எல்லாம் முடியும், நான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று எண்ணும் போது உண்மையில் நாம் பலவீனமாகி விடுகிறோம்.
கணவன் மனைவிக்கு பலமாக இருக்க வேண்டும்
மனைவி கணவனுக்கு பலமாக இருக்க வேண்டும்
அண்ணன் தம்பிக்கு பலமாக இருக்க வேண்டும்
தம்பி அண்ணனுக்கு பலமாக இருக்க வேண்டும்.
நண்பர்கள் நண்பர்களுக்கு பலமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தாம் வாழும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பலமாக இருக்க வேண்டும்.
பலமாக இருத்தல் என்பது தமது தனித் திறன்களையும், அறிவினையும், உழைப்பினையும் பகிர்ந்து கொள்ளுதல்.
வெறுமனே வார்த்தையில் நம்பிக்கை கொடுப்பது மட்டுமல்ல!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.