கத்தரியில் 0.01 கிராம் விதை இறுதியின் மொத்தம் 10,000 கிராம் உள்ள செடியாகவும் விளைச்சலாகவும் மாறுகிறது.
இயற்கையின் வினைத்திறன் பத்து லட்சம் மடங்கு!
இயற்கைக்கு எப்படி இந்த ஆற்றல் என்பதைப் புரிந்து கொள்ள மனிதன் அறிவியலூடாக முயற்சிக்கிறான்.
Nitrogen, Phosphorous, Potassium என்கிறான்.
நீர் என்கிறான்!
Micro nutrient என்கிறான்.
ஆனால் மனிதனுக்குப் புரியாத ஏதோ ஒரு "சக்தி" இவற்றையெல்லாம் "ஒழுங்குபடுத்தி" நடாத்திக் கொண்டு தானே இருக்கிறது?
எப்படி சிறு விதை தன்னை விட பத்து லட்சம் மடங்கு உடைய செடியை மரத்தைப் படைக்கிறது?
தன்னை சூழ உள்ள வளியிலும், மண்ணிலும், நீரிலுமிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொண்டு தன்னுள் இருக்கும் அக்னியால் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு மண்ணிலிருந்து ஆகாயத்தில் சூரியனை நோக்கி எழுகிறது.
ஒளிமிகுந்த அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் உணவாக மாற்றி தான் வளர வேண்டும் என்பதே செடியின் யோகம்.
இதையே ரிஷிகளும் சித்தர்களும் உடலாகிய மண்ணிலிருந்து, மூச்சாகிய வளியின் வழி சுவாசத்தை இயக்கி, நீரையும் உணவையும் பெற்று அந்தக்கரணங்களில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை இருத்தி தியானிக்கச் சொன்னார்கள். தாவரத்திற்கு சூரியன் எப்படி உத்வேகமோ, மனிதனுக்கு உத்வேகம் சூரியனிற்கு ஒளிதரும் அந்தப்பரம்பொருளின் பேரொளி! மனிதன் தாவரத்திற்கும் மேம்பட்டவன். தாவரத்தை விட மேம்பட்ட செயலை தனது அந்தக் கரணத்தினால் செய்யும் ஆற்றல் உள்ளவன் மனிதன். ஆகவே அந்தக் கரணத்தில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியைப் பெற்று வளர்த்தல் மனிதன் செய்யும் யோகம், சூரியனின் பேரொளியை பெற்று உணவாகி வளர்த்தல் தாவரத்தின் யோகம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.