இயற்கை வேளாண்மையின் நோக்கம் தாவரங்களை வளர்ப்பதல்ல, மனிதனைச் செம்மைப்படுத்துவது என்ற Masanobu Fukuoka இனது கூற்று ஆழமானது!
மனித வாழ்க்கை பிரபஞ்ச ஒழுங்குக்கமைய இருக்க வேண்டும் என்ற அடிப்படையை அது கூறுகிறது. தாவரங்களை நாம் வளர்க்கிறோம் என்பது மனிதனது அகங்காரமைய அறிவீனம்.
மனிதன் தன்னை எப்படி பிரபஞ்ச இயக்கத்துடன் ஒத்திசையச் செய்துகொள்வது என்ற உத்தியை இயற்கை விவசாயத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
Masanobu Fukuoka இயற்கை விவசாயத்தின் நான்கு அடிப்படைகளைக் கூறுகிறார்.
1) மண் தன்னைத் தானே தயார்படுத்திக்கொள்ளும், உழுதல், மண்பிரட்டல் போன்ற மனிதத் தலையீடுகளே களைகளை அதிகமாக்கி நிலத்தை மேலும் சிக்கலாக்குகிறது.
2) மாசற்ற இயற்கை நிலத்தில் மண்ணின் வளம் அதிலுள்ள தாவர விலங்குகளின் வாழ்க்கையால் சம நிலைப்படுத்தப்படுகிறது. மண்ணின் வளம் அதீத ஒரு பயிரிடல் முறையாலோ, விலங்குகளின் மேய்ச்சலினாலோ இல்லாமலாக்கப்படுகிறது. மண்ணிற்கு இரசாயன உரம் இட்டால் தாவரம் வளரும், மண் உயிரிழந்து விடும். காலப்போக்கில் அந்த மண்ணில் எதுவும் வளர்க்க முடியாமல் உவர் நிலமாகிவிடும்.
3) களைகளைக் கட்டுப்படுத்த உழுதல், மண்ணைப் பிரட்டிப்போடுதல் என்பன களையை மேலும் உயிர்ப்பூட்டும் செயல். களையை மூடாக்கு கொண்டு மூடி மண்வளத்தை அதிகரிக்க வேண்டும். இரசாயன களைகொல்லியோ, உழுது மடித்தலோ செய்யக்கூடாது.
4) பூச்சிகள் பீடைகளை கொல்வதற்கு இரசாயன பீடைகொல்லிகள் பயன்படுத்தக்கூடாது. தோட்டத்தில் தாவரத்தை அழிக்கும் பீடைகளுக்குரிய இரைகௌவிகளுக்குரிய சூழலை உருவாக்க வேண்டும்.
ஆக இயற்கை வேளாண்மை என்பது கஷ்டப்படுவது அல்ல இயற்கையின் இயங்கியலைப் புரிந்து கொண்டு அதுனுடன் இயைந்து வாழுதல்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.