நவராத்ரியில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற ஒழுங்கில் ஏன் கொண்டாடுகிறோம்? சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்!
இதற்கு ஒரு வலுவான ஒரு தர்க்க ரீதியிலான ஒழுங்கு இருக்கிறது. ஒருவன் முதலில் அறிவைப் பெறவேண்டும், பின்னர் அதைக் கொண்டு செல்வத்தினைப் பெறவேண்டும். பின்னர் அறிவையும் செல்வத்தினையும் காப்பாற்ற வீரம் வேண்டும். இதுவே வாழ்க்கையின் ஒழுங்கு! இப்படிப்பார்த்தால் அறிவைத்தரும் சரஸ்வதியல்லவா முதலாவதாக வணங்கப்பட வேண்டும். தர்க்க ரீதியாகப்பார்த்தால் சரி தான்! ஆனால் யதார்த்தத்தில் இது உண்மையாக இருப்பதில்லை!
அறிவில் சிறந்த, கற்ற பலர் இருந்தாலும் நல்ல செயல்களைச் செய்ய தைரியம் இருப்பதில்லை! எந்த ஒரு செயலையும் செய்ய துணிவும், தைரியமும், சோம்பலற்ற உத்வேகமும் தேவை. இந்தப் பண்பு இருந்தால் மட்டும் தான் ஒருவனால் எந்தச் செயலையும் செய்ய முடியும். செயலைச் செய்தாலும் பின் வாங்காமல் தடைகளை உடைத்து முன்னேற துர்க்கையின் ஆற்றல் இருந்தால் மட்டுமே முடியும். பலரும் செயல் புரிவதையே ஒரு துன்பமாக கருதும் மன நிலையிலேயே இருக்கிறார்கள்.
ஆகவே செயலைத் தொடங்க அறிவும், செல்வமும் இருந்தால் போதாது. ஆனால் முதலில் தேவை தைரியம்! அதனால் தான் துர்க்கையை முதலில் பூஜிக்கும் படி வைத்தார்கள்! துர்க்கை என்றால் எவரும் அவளது ஆற்றலைத் தாண்டி வரமுடியாத வலிமையுடையவள் என்று பொருள்!
செயல் புரிய இந்த அபார ஆற்றல் வேண்டும்!
துர்க்கையை வழிபடுவது என்பது எம்மில் இந்த வலிமையை உண்டுபண்ணுவது என்று அர்த்தம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.