குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 24, 2011

சனி மஹாத்மியத்தில் சூரியனார் பெருமை




விக்கிரமாதித்திய மஹாராஜா கிரகங்களில் யார் முதன்மையானவர் என்ற கேள்வியினை முன் வைத்தவுடன் ஒவ்வொரு கிரகத்தினை உபாசித்து சித்தி பெற்ற பண்டிதர்கள் ஒவ்வோருவராக தமது கிரகத்தின் பெருமையினை ஒருவர் பின் ஒருவராக எடுத்துரைக்கத் தொடங்கினர். முதலில் நவக்கிரகங்களிலேயே ஒளிமிக்கதாகிய சூரியன் பற்றி பண்டிதர் ஒருவர் எடுத்துரைக்கத் தொடங்க்கினார்.

அவர் ஒளிமிகுந்த கண்ணுடன், உறுதியான உடல், மற்றும் வசீகரிக்கும் தோற்றத்துடன் கணீரென்ற குரலுடன் சூரியனது பெருமை பற்றி எடுத்துரைக்கத் தொடங்கினார்; 

"சூரியனே கிரகங்களில் உயர்ந்தவர், யார் தன்னை தொடர்ச்சியாக பிரார்த்திக்கிறாரோ அவர்களுக்கு கேட்பவற்றை கொடுப்பவர், நவக்கிரகங்களிலேயே சூரியனே பரம்பொருளின் அவதாரம், யாரொருவர் சூரியனை தொடர்ச்சியாக மனம் ஒன்றி வழிபடுகிறாரோ அவர் தனது மனக் கவலைகள், நோய்கள், வறுமைகள் நீங்கப் பெற்றவராகின்றார்கள். 

சூரியனின் தோற்றம் மெல்லிய, சுருண்ட தலை முடியுடையவர், ஒருமையான மனமுடையவர், வசீகரமான தோற்றம், கணீரெண்ர‌ குரல், அளவான உயரமுடையவர்,  தேன் போன்ற நிறமுடையதும் மது போன்ற ஒளியுடைய கண்களைக் கொண்டவர். எலும்புகள் உறுதியானவர், பித்த தோஷத்தினை உடையவர், அவர் உறுதியானவர், திடமானவர், அவரது உடல் நிறம் செம்புகலந்த பொன்னிறம் உடையது, அவரது பாதங்கள் காணமுடியாதவை, சிவப்பு பூக்களையும் பொன்னிற மஞ்சள் நிற உடையினையும் அணிந்திருப்பார். கைகளில் சிவப்பு தாமரை காணப்படும். அவருக்குரிய உலோகம் பொன் அல்லது செம்பு, இரத்தினம் மாணிக்கம், மனித உடலில் எலும்பின் தன்மையினை ஆழ்கின்றார். 

"அனைத்தும் சூரியனிலிருந்தே உற்பத்தியாகின்றன, அவரே அனைத்துக்கும் ஆத்மாவாகின்றார், அவரே வானாத்தின் அரசன், பூமிக்கும் வானத்தில் உள்ள தெய்வீக சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர், கிழக்குத்திசையின் அதிபதி, வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையினையும், ராசிகளில் சிம்மத்தினையும் ஆழ்பவர். ஒவ்வொரு நாளும் உருவாக காரணமானவர், தந்து உஷ்ணக்கதிர்களால் துளைப்பவர், உலகின் ஆனந்ததிற்கு காரணமானவர், இதனால் அவரை பிரகாசமானவர், உற்பத்திக்கு காரணமானவர், உருவாக்குபவர், உயிர்கொடுப்பவர், ஒளியானவர், நாள் ஒன்று உருவாக காரணமானவர் என அழைக்கப்படுகிறார். சூரியனது ஒளியில் காணப்படும் ஏழு நிறங்களே வேதங்களின் ஏழு சந்தஸ் ஆகிய காயத்ரி, துருஷ்டுப், அனுஷ்டுப், ஜகதி, பங்கி, ப்ருகதி, உச்ஷ்னிக் ஆகிய ஏழும். ஆகவே சூரியன் இன்றி காலக்கணிப்பு இல்லை. காலம் இன்றி வேதங்களும் இல்லை, கால நிலைகளும் இல்லை, எதுவுமில்லை. 

வருடம் என்பது சூரியனாரின் ரதம், அவரது ரத சக்கரம் 12 கம்பிகளால் ஆனது அவை ஒவ்வொரு மாதங்கள், மதிப்புக்குரிய அரசரே ஒவ்வொரு மாதத்திற்கும் அதிபதியாக அவரவர் தொழில்களை செய்வதற்கு ஒரு தேவதை, ஒரு அப்சரஸ், ஒரு ராக்ஷ்ஷர், ஒரு நாகன், ஒரு யக்ஷ்ஷன், ஒரு கந்தர்வன், ஒரு ரிஷி காணப்படுவர். உதாரணமாக ஜ்யேஷ்ட (ஆனி) மாதத்தினை எடுத்துக் கொண்டால் தேவதை - மித்ரா, அபசரஸ் - மேனகை, ராஷஷன் - பௌருஷ்ஷேயன், நாகன் - தக்ஷ்ஷக, யக்ஷ்ஷன் - ரதஸ்வானன், கந்தர்வன் - ஹாஹன், ரிஷி - அத்ரி ஆவர். தேவர்கள், ரிஷிகள், அப்சரஸுகள் அந்த மாதத்திற்குரிய நன்மையினையும், ராக்ஷ்ஷர், யக்ஷ்ஷர், நாகர்கள் அந்த மாதத்திற்குரிய தீயவற்றையும் செய்வர்.

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. சூரிய பகவானைப்பற்றிய விவரங்கள் அருமை..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...