குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 10, 2011

ஸ்ரீ தத்தாத்திரேய குருவின் அரிய ஞானம்

ஓம் த்ராம் தத்தாத்திரேய குரவே நமஹ‌
இன்று (10/12/2011) தத்தாத்திரேய ஜெயந்தி, தத்தாத்திரேயர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அமிசமாக கருதப்படுபவர். தத்தாத்திரேயர் பற்றிய புராணக்கதைகள் பலவுள்ளன, இந்த பதிவில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஞானம் என்ன? என்பது பற்றி மட்டுமே நோக்குவோம். எம்மைப் பொறுத்தவகையில் அவரே உலகின் முதலாவது சூழலியல் கல்வியாளர் (Environmental educator) ஆவார். இன்று உலகம் சூழல் மாசுபடுதல்(Environmental pollution), நீடித்து நிலைத்திருத்தல் (Sustainability) பற்றியெல்லாம் பேசுபவர்களுக்கு அடிப்படையின் விடை தத்தாத்திரேய குருவிற்கும் மன்னன் யதுவிற்கும் நடந்த உரையாடலே உலகிற்கான சிறந்த உபதேசம். சூழலியல் ஆய்வாளனான எனக்கு தத்தாதிரேய குருவின் இந்த உபதேசங்கள் நல்ல வழிகாட்டி, அவற்றை அனைவரும் அறிந்து கொள்ள இங்கு பதிகிறோம்.
============================================================================
ஒரு நாள் மன்னன் யது காட்டிற்கு வேட்டையாட சென்றசமயம் தத்தாத்திரேயரை கண்ணுற்றான். அவரது ஞான ஒளியும் மகிழ்ச்சியான மனமும் கண்டு வியந்து "உங்களிடைய இந்த அளவற்ற மகிழ்ச்சியிற்கும், ஞானத்திற்கும் காரணமான குரு யார் என அறியலாமா?" என வினாவினான்.

அதற்கு தத்தாதிரேய பகவான் " எனக்கு நானே குரு, அதைவிட மேலும் 24 பேரிமிருந்து ஞானத்தினைப் பெற்றுக்கொண்டேன்" என்றார். அவரது இருபத்தி நாலு குருமாரும் அவர்களிடம் பெற்றுக்கொண்ட ஞானமும் கீழே;

1. பூமித்தாய்:  இவரே எனது முதல் குரு, யார் உன்னை துன்புறுத்தினாலும், வெட்டினாலும், கொத்தினாலும் அதனை சாதரணமாக ஏற்றுக் கொண்டு அதற்கு பதிலாக அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களுக்கு சிறந்ததையே பிரதிபலனாக கொடுக்கும் உயர்ந்த குணத்தினை பூமித்தாயிடம் இருந்து ஞானமாக பெற்றுக் கொண்டேன்.

2. நீர்: நீரானது தனது தொடர்ச்சியான ஓட்டத்தினால் தன்னையும் சுத்தி செய்துகொண்டு, அதன் மூலம் மற்றவற்றையும் சுத்தம் செய்கின்றது. அருந்துபவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது, எங்காவது தேங்கும் போது அசுத்தமாகிறது. ஆதலால் எப்போதும் மனதினை சுத்தமாக வைத்திருக்க அதனை நல்லெண்ண சுழற்சியில் வைத்திருக்க வேண்டும் என்ற ஞானத்தினை நீரிட்மிருந்து பெற்றேன். 

3. நெருப்பு: நெருப்பு தன்னுடன் சேரும் அனைத்தையும் எரித்து ஒளியாக்குகிறது, அந்த ஒளியும் சூடும் மற்றவர்களுக்கு தெளிவான பாதையினையும், குளிர் எனும் கஷ்டத்திற்கு கதகதப்பு எனும் இன்பத்தினை தருவதாக அமைகிறது. அதுபோல் ஒருவன் தன் ஞானாக்கினியை வளர்ப்பானானால் தன்னை அண்டி வருபவர்களது துன்பமாகிய குளிரினை நீக்கி இன்பன் எனும் பாதையினை காட்டக்கூடியவனாவான்.

4. காற்று: காற்று இது நல்லது, இது கெட்டது என பிரித்துப் பார்த்து சேருவதில்லை, நறுமணமுள்ள மலரிடமும் கலக்கும், முள்ளுடனும் தடவி செல்லும், ஆனால் எதனுடனும் நிரந்தரமாய் நின்று விடாது. தனது சுழற்சி மூலம் அனைவரையும் உற்சாகப்படுத்தும். அதுபோல் நான் எப்போது எதனிடமும் கலக்காமல் ஆனால் அனைத்தையும் மகிழ்விக்கும் ஞானத்தினை பெற்றுக் கொண்டேன்.

5. ஆகாயம்: இந்த பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் அரவணைத்துக் கொண்டு சூரிய, சந்திரன், நட்சத்திரங்கள் என அனைத்தையும் தாங்கி பிடித்திருப்பது ஆகாயம், ஆனால் எதனாலும் தொடமுடியாததும், எதற்குள்ளும் அடங்காதது. அதுபோல் இந்த உலகவாழ்க்கையில் எதிர்படும் அறிவு, அறியாமை, துன்பம், இன்பம் ஆகிய அனைத்தையும் அரவணைக்க வேண்டும் ஆனால் எதனாலும் எனது விழிப்புணர்வு பாதிக்கப்படாமல் இருத்தல் வேண்டும் என்ற ஞானத்தினை ஆகாயத்திடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

6. சந்திரன்: சந்திரன் தேய்ந்து வளர்ந்து கொண்டிருப்பது ஆனாலும் தனது தோற்றத்தில் எப்போதும் மாறுவதில்லை, உருவம் மட்டுமே நாளுடன் மாறும் ஆனால் அதன் தன்மை, அளவு, பூரணத்துவம் எப்போதும் மாறுவதில்லை. அதுபோல் இன்பம் - துன்பம், மகிழ்ச்சி - துக்கம், நல்லது கெட்டது என தேய்தலும் வளர்தலும் வாழ்க்கையில் வரும், ஆனால் நான் எப்போதும் எனது விழிப்புணர்வினை இழத்தல் கூடாது என்ற ஞானத்தினை சந்திரனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

7. சூரியன்: சூரியன் தனது கதிர்கள் மூலம் நீரினை உறிஞ்சி, தூய்மைப்படுத்தி, பின் மேகங்களாக்கி பூமியின் மீது பாரபட்சமின்றி மழையாக பொழிகின்றது. அதுபோல் நான் காணும் அனைத்திலிருந்தும் அறிவைப் பெற்று அதனை அனுபவ ஞானமாக்கி அதனை ஏற்றத்தாழ்வின்றி அனைவருடனும் பகிர்ந்துகொள்ள் வேண்டும் என்ற ஞானத்த்னை சூரியனிடம் பெற்றுக் கொண்டேன்.

8. புறாக்கூட்டம்: ஒருமுறை தனது குஞ்சுகளுடன் தாய்ப்பறவை, ஆண் பறவை கொண்ட புறாக்கூட்டம் செல்லும் போது சிறிய பறவைகளில் ஒன்று தானியங்க்கள் மீது கொண்ட ஆசையால் வேடன் விரித்த வலைகளில் மாட்டிக்கொண்டது. தாய்பறவை தனது குஞ்சின் மீதி கொண்ட பாசத்தினால் அதனைக் காப்பாற்ற சென்று அதுவும் வலையில் மாட்டிக்கொண்டது, அதன் மீது காதல் கொண்ட ஆண்பறவை அவற்றைக் காப்பாற்ற சென்று அதுவும் மாட்டிக்கொண்டது. இதன் மூலம் துன்பங்களின்  மூலம் பற்று என்பதும், ஒரு பற்று மற்றைய பற்றினை சங்கிலியால பற்றிக் கொள்ளவைக்கும் என்ற ஞானத்தினை பெற்றுக் கொண்டேண்.

9. மலைப்பாம்பு: மலைப்பாம்பு ஒருபோதும் இரையினைதேடி களைப்படைவதில்லை, தானிருக்குமிடத்தில் கிடைக்கும் உணவினை உட்கொள்ளும், அதனிடத்திலிருந்து எனக்கு இந்த உணவுதான் வேண்டும் என்ற கரிசனையுடைய மனதினை நீக்கி கிடைப்பதை உண்ண வேண்டும் என்ற ஞானத்தினைப் பெற்றுக் கொண்டேன்.

10. கடல்: கடலானது பல்லாயிரக்கணக்கான ஆறுகள் வந்து கலந்தபோதும் அதனி அசைக்கமுடிவதில்லை. அதுபோல் ஞானம் பெற்றவனது மனதினை எந்த உணர்ச்சிகளோ, இன்ப துன்பங்களோ அசைக்கமுடியாது என்ற ஞானத்தினை கடலினை பார்த்து பெற்றுக் கொண்டேன்.

11. விட்டில்: விட்டில் பூச்சியானது விளக்கொளியினைக் கண்டவுடன் அதில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறது. அதுபோல் ஆசை வழி புலனை செலுத்தும் மனிதனும் மாய்கிறான், ஆகவே புலங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஞானத்தினை விட்டில் பூச்சியிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

12. தேனி: தேனியானது ஒரு மலரிலிருந்து தேனினை பேறுவதற்கு முன் அதன் முன் ஆடி, தனது இனிய ரீங்கார ஒசையினை வாசித்து சிறிய அளவே தேனினை எடுத்துக்கொள்ளும், மலரினை காயப்படுத்தாது. அதுபோல் இயற்கையில் இருந்து நாம் சிறிய அளவே பெற்றுக் கொள்ளவேண்டும், அதனையும் சரியான அளவில் மதிப்புடனும், நன்றியிடனும் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானத்தினை பெற்றுக் கொண்டேன்.

13. தேனியின் தேன் சேகாரம்: தேனியானது தனதூணவிற்காக தேனினை சேகரிக்கிறது, பின் மீதமான தேனினை கூட்டில் மற்றவர்கள் பயன்பெறவேண்டுமென சேகரித்து வைக்கிறது. இதைப்போல் ஞானமாகிய தேனினை பெறுவதற்கு ஞானத்தினை வழ்ங்க்கும் பலவித மலர்களாகிய குருக்களிடம் சென்று ஒருவன் ஞானத்தினை சிறுக சிறுக சேர்த்து தன்னையும் வளர்த்து மிகுதியாக உள்ளவற்றை மற்றவர் பயன்படும் வண்ணம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஞானத்தினை தேனி தேனினை செகரிப்பதனை வைத்து உணர்ந்து கொண்டேன்.

14. யானை: காமம் உடைய ஆண் யானை பெண்யானையினை சேரவிரும்பி யானை பிடிப்பவனின் குழியில் மாட்டிக்கொண்டதனைக் கண்ட நான், காமமாகிய புலனிச்சையின் விளைவுகளைப்பற்றிய ஞானத்தினைப் பெற்றுக் கொண்டேன். அந்த யானை பிடிபட்டதன் பின் அடிமையாக மற்றவர்களுக்கே உபயோகப்படுகிறது, துபோல் புலனின்பத்தின் பால், உலகம் காட்டும் புகழ், மாயை ஆகியவற்றின் பால் வசப்படும் மனது அடிமைப்படுத்தப்படுகிறது.

15. மான்: மானினை பிடிப்பதற்கு வேடன் இசையினை ஆயுதமாக பயன்படுத்துகிறான். மான் தனது காது மூலம் இசையில் மயங்கி  இறுதியாக பொறியில் பாட்டிக்கொள்கிறது, அதுபோல் நாமும் மற்றவர்கள் பேசும் வதந்திகள், கருத்துக்கள், புகழாரங்கள், தூற்றல்கள் என்பவற்றில் மயங்கி மாயைகளில் மாட்டிக் கொள்கிறோம் என்ற ஞானத்தினை மானிடமிருந்து பெற்றேன்.

16. மீன்: மீன் தூண்டிலிலுள்ள இரையினைக் கண்டு ஆவலாய் சென்று மாட்டிக்கொள்கிறது, அதுபோல் இந்த உலகே பெரிய இரைதான், எமது புலங்களுக்கு இந்த உலகில் பலவிதமானான் இரைகள் காணப்படிகின்றது, அவற்றில் மாட்டி எமது உணர்வினை இழக்காமல் இருக்கவேண்டும் என்ற ஞானத்தினை மீனின் மூலம் அறிந்துகொண்டேன்.

17. விபச்சாரி: விபச்சாரி தன்னிடம் வருபவர்களிடன் உண்மை அன்பைக்காட்டி காதல் செய்வதில்லை, அவர்களுக்காக காத்திருக்கிறாள், பணத்திற்கு ஏற்றவிதத்தில் காதல் செய்கிறாள், அதுபோல் உலகில் வாழும் பலரும் தமது திருப்தியிற்கு ஒரு விலை வைத்திருக்கின்றனர், அந்த விலை கொடுக்கப்படும் போது திருப்தியுறுகின்றனர், இல்லாத போது விட்டு நீங்குகின்றனர். இதிலிருந்து நான் சுய திருப்தியுடன், உலகிலிருந்து எந்த இன்பத்தினையும் எதிர்பார்க்காமல் எனதுள் ஆய்ந்து  அகத்திருப்தியுடன் இருத்தல் வேண்டும் என்ற ஞானத்தினை பெற்றுக் கொண்டேன்.

18. புழுவினை தூக்கிகொண்டு செல்லும் சிறிய பறவை: இதனை கண்ணுற்றபோது அந்த பறவை அந்த புழுவினை விடும் வரை பல பெரிய பறவைகள் துரத்துவதனை கண்ணுற்றேன், இதன் மூலம் எமது துன்பங்களை தொலைப்பதற்கான வழி பற்றுகளை அறுத்தலே என்பதனை அறிந்துகொண்டேன்.

19. பசியுடன் அழுத பிள்ளை பாலகுடித்தபின் அழுகையினை நிறுத்தியமை: குழந்தை பசியுடன் உள்ளபோது மட்டுமே தனது அழுகையினை வெளிக்காட்டும், அது தேவைக்கு மாத்திரமே அழுகின்றது, தனது பசி இல்லது போனவுடன் தாய் பலவந்தப்படுத்தினாலும் குடிக்காது, அது போல் நாம் தேவை கருதியே எமது செயலகளை செய்யவேண்டும் என்ற ஞானத்தினை பெற்றுக் கொண்டேன்.

20. உணவளித்த இளம் பெண்: ஒருமுறை நான் உணவு பெற சென்ற வீட்டு பெண், எனக்கு உணவளிப்பதற்காக உள்ளே சென்று உணவு தயார் செய்யும் போது அவள் கை நிறைய அணிந்திருந்த வளையல்கள் எழுப்பும் ஓசையினால் மற்றவர்களுக்கு இடையூறாகும் எனக்கண்டு அதனை ஒரு வளையலாக மட்டும் குறைத்துக்கொண்டாள். இதிலிருந்து நான் பெற்றுக்கொண்ட ஞானம் உலகில் வாழும் போது இடையூறுகள், மனத்தாங்கல்கள் வரும், அதனை குறைக்கும் அளவுக்கு எமது செய்கைகள் இருக்கவேண்டும் என்பதே.

21. பாம்பு: பாம்பு தனக்கென ஒரு வாழிடம் அமைத்துக்கொள்வதில்லை, அது போல் பற்றைதுறந்தவர்கள் தமது இருப்பிடத்தினை பற்றிகவலையற்றவர்களாக இருப்பதை வைத்து திருப்தியுறவேண்டும்.

22. அம்பு செய்பவனது மனம்: அம்பு செய்பவன் தனது அம்பின் தலை எவ்வளவு கூர்மையாக இருக்கின்றது என்பதிலேயே கவனமாக இருப்பான், அதுபோல் எந்த வேலையாக இருந்தாலும் மனதினை ஒருனிலைப்படுத்தி ஆழ்ந்து செய்யவேண்டும் என்ற ஞானத்தினை பெற்றுக்கொண்டேன்.

23. சிறிய சிலந்தி: சிறிய சிலந்தி கஷ்டப்பட்டு தந்து வலையினை அழகாக பின்னுகிறது. பின் பெரிய சிலந்து ஒன்று வந்து அந்தவலையினை ஆக்கிரமித்துக்கொண்டு சிறிய சிலந்தியினை விழுங்குகிறது. அதுபோலவே மனிதர்களும் தாம் சௌகரியமாக இருக்க பின்னும் வலையிலேயே மீண்டும் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆகவே எம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாம் உருவாக்கும் வலைகளே எமக்கு எமனாகும் எனும் ஞானத்தினை பெற்றுக்கொண்டேன். 

24. குளவியும் புழுவும்: புழுவைக் கொண்டுவந்த குளவி அதனை தனது ரீங்கார நாதத்தின் மூலம் கொட்டி கொட்டி குழவியாக்குவதுபோல் மனிதனும் எதனை பாவிக்கிறானோ அதுவாகிறான். அதபோல் நாத்மாகிய பிரம்மத்தினை உள் ஒலியின் மூலம் தொடர்ச்சியாக கேட்பதன் மூலம் ஆத்மானந்தத்தினை அனுபவித்து மோட்சத்தினை அடையும் வழியினை உணர்ந்தேன்.

என தனது 24 குருக்களையும் அதிலிருந்து பெற்ற ஞானத்தினையும் யது மன்னனிற்கு எடுத்துரைத்தார். இதன் மூல தத்தாத்திரேயர் உலகத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் எம்மை சூழவுள்ள அனைத்திரிருந்தும் ஞானத்தினை பெறலாம் என்பதனை விளக்கியுள்ளார். 

இயற்கையிலிருந்து கற்பது எப்படி என்பதன் வழிமுறையினை விளக்கி சென்றுள்ளார், இவை இன்று சூழலியலாளர்கள், நீடித்தி நிலைத்திருக்கும் வளமுகாமைத்துவத்தினை போதிக்கும் ஆலோசகர்களுக்கு ஒரு அரிய வழிகாட்டி என்பதில் எதுவித ஐயமுமில்லை.  

4 comments:

  1. அய்யா ,
    மிக சிறந்த கட்டுரை.
    விழிப்புணர்வு பற்றிய கதைகள், ஜென் கதைகளாகவே காணப்படும் நிலையில்
    இவை புதிதாக உள்ளது. சிறிந்த பதிவு
    நன்றி

    ReplyDelete
  2. @ தேடல்

    கருத்துக்கு நன்றி

    எம்மவர்கள் கதைகளை கதைகளாக ரசித்துவிட்டும் ஒதுக்கிவிடுவதால்தான் எம‌து புராணங்களும், இதிகாசங்களும், சித்தர்களது வரலாறும் மாயாஜாலமாக இருக்கின்றது.

    ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ஞானத்தினை மறைத்து வைத்துள்ளார்கள்!

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி

    மிக சிறந்த கட்டுரை... please read my tamil kavithaigal in www.rishvan.com

    ReplyDelete
  4. குரு தத்தாத்திரேயரின் குருமார்கள் பற்றிய விளக்கங்கள் அருமை... நம் அகக்கண்களை எதுவும் திறக்கும் என்பதற்கான சான்று..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...