குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, December 20, 2011

சாணக்கிய நீதி

  


 • மனிதன் தனியாக பிறந்தான், தனியாக இறக்கிறான், நல்லதோ கெட்ட கர்மாவினையோ தனியாகவே அனுபவிக்கிறான், இறுதியாக சொர்க்கமோ நரகமோ தனியாகவே செல்கிறான்
 • ஒரு மனிதனது உயர்வு அவனது செய்கையாலேயே தீர்மானிக்கப்படுகிறது, பிறப்பால் அல்ல.
 • ஒரு மனிதன் எப்போதும் அதீத நேர்மையுடன் இருத்தல் கூடாது, நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன, அதுபோல் நேர்மையான மனிதனே முதலில் தண்டிக்கப்படுகிறான்.
 • ஒருவேலையினை தொடங்குமுன் மூன்று கேள்விகளை கட்டாயம் உன்னுள் கேள்;
  1. இதை ஏன் நான் செய்கிறேன்?
  2. இதன் விளைவு என்ன?
  3. இதில் தற்போது நான் வெற்றிபெறுவேனா?
  இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகள் அழ்ந்த சிந்தனைக்குபின் திருப்திகரமாகவும் உண்மையாகவும் உன்னுள் பெற்றவின் காரியத்தினை செய்!
 • முட்டாளுக்கு புத்தகம் அறிவைதரும் என்பது குருடனுக்கு கண்ணாடி பார்வைதரும் என்பதைப் போலாகும்.
 • கல்வியே உண்மையான நண்பன், கற்றவன் எங்கும் மதிக்கப்படுகின்றான், கற்றவனின் அழகு இளைமை அழகையும் விட மேலாக காட்டுகிறது.
 • பாம்பு தற்போது விஷமற்றதாக இருக்கலாம், ஆனால் எப்போதாவது விஷத்தினை கக்கும் என்பதில் அவதானமாக இரு!
 • கடவுள் சிலைகளில் இல்லை, உன்னுடைய ஒவ்வொரு உணர்ச்சியும் கடவுளே, அதனை உள்ளிருந்து உருவாக்கும் ஆத்மனே கோயில்,
 • யார் ஒருவன் தன்னுடைய குடும்பத்துடன் அளவுக்கதிகமான பற்றுக்கொள்கிறானோ அவன் எப்போதும் பயமும், அதிக துன்பமுடையவனாக இருக்கிறான், எந்த துன்பத்தினதும் மூலம் பற்று, ஆதலால் இன்பத்துடன் இருக்க அதீத பற்று அறுத்தல் அவசியம்.
 • உன்னுடைய தகுதிக்கு மேற்பட்டவரிடமோ, தாழ்ந்தவரிடமோ நெருங்கிய நட்புவைத்தலால் நீ எப்போதும் சந்தோஷமடையப்போவதில்லை.
 • அறிவுள்ளவனே உன்னிடமுள்ள செல்வத்தினை எப்போதும் பயன்படுத்தக்கூடியவனிடம் கொடு! உப்பான கடலிலிருந்து பெறும் நீரினை மேகங்கள் இனிப்பான நீராகத்தான் தருகின்றன. அதுபோல் உன் செல்வமும் சரியான முறையில் பயன்படுத்தப்படும்!
 • நீ ஏதாவதொரு வேலையினை தொடங்கும் போது அது பிழையாகிவிடும் என்ற பயத்துடனோ , சரியாக வரும் என்ற சந்தேகத்துடனோ தொடங்காதே! நான் உண்மையாக சிரத்தையுடன் செய்கிறேன் வெற்றிபெறும் என்ற எண்ணத்துடன் தொடங்கு!
 • புத்தகத்திலுள்ள அறிவும், மற்றார் கையிலுள்ள செல்வமும் உனக்கு தேவைப்படும் போது பயன்படாது.
 • தெய்வதன்மை அடைய விரும்புபவன் தனது பேச்சில், எண்ணத்தில், செய்கையில் தூய்மையும் இதயத்தில் இரக்கமும் உடையவனாயிருத்தக் வேண்டும்.
 • வேலைக்காரனின் தன்மையை வேலையை விட்டு நீக்கும் போது அறியலாம்,உறவினரின் தன்மையை துன்பத்தில் அறியலாம், நண்பனின் தன்மையை ஆபத்தில் அறியலாம், மனைவியின் தன்மையை துரதிஷ்டத்தில் அறியலாம்.
 • உனது இரகசியங்கள் எவற்றையும் எந்த சந்தர்ப்பத்திலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதே அதுவே உன்னை அழிக்கும்.
 • பூவின் மணம் காற்று வீசும் திசையிலேயே பரவும், ஆனால் நல்லவனின் குணம் எல்லா திசைகளிலும் பரவும்.
 • ஒருவன் இன்பமும் ஆனந்தமும் அடைவது ஆன்மாவினை உணர்தலினால் மட்டுமே, இதுவ‌ல்லாம‌ல் பேராசையுட‌ன் எல்லாவ‌ற்றையும் தேடி ஓடும் ச‌ல‌ன‌முடைய‌ ம‌ன‌தை உடைய‌வ‌ரால் அல்ல!
 • அறிவுள்ள மனிதன் தனது புலனுணர்வுகளையும் அறிவையும் ஒரு கொக்கைப் போல் பயன்படுத்தவேண்டும், அதாவது தனது நோக்கம் குறித்த இடத்தில் நிறைவேறுமா, நேரம் குறித்த காரியத்திற்கு சாத்தியமானதா, அவனது ஆற்றல் அந்த காரியத்தினை செய்ய போதுமானதா என அறிந்து காரியமாற்றல் வேணடும்.
   
 • உலகில் மிக சக்திவாய்ந்தது பெண்ணின் அழகும் இளமையும்!
 • உலகில் சமமான மனநிலையை விட சிறந்த செல்வம் எதுவும் இல்லை, திருப்தியை விட சிறந்த மகிழ்ச்சி எதுவுமில்லை, பேராசையினை விட பெரிய நோயுமில்லை, இரக்கத்தினைவிட சிறந்த குணமுமில்லை!
 • பாம்புக்கு வாயில் விஷம், தேளிற்கு கொடுக்கில் விஷம், தீயமனிதனிற்கு மனம் பூராகவும் விஷம்!
 • எந்த ஒரு நட்பிலும் ஒரு சுய இலாபம் உள்ளது, சுய இலாபம் இல்லாத புனிதமான நட்பு என்று எதுவும் இல்லை, இது ஒரு கசப்பான உண்மை.
 • ஒருவன் கடந்தகாலத்தினை நினைத்து கவலை கொள்வதோ, எதிர்காலத்தினை நினைத்து பயப்படுவதோ கூடாது, நிகழ்காலத்தில் செய்வதை கருத்தூன்றி செய்தலே சரியான வழி!

 

போகரும் புவனேஸ்வரி தேவியும்

*********************************************** ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக்கொண்டிருந்தார். நீண்...