குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 08, 2011

மூச்சின் சூட்சுமம் அறிதல் - பிராணாயாம அடிப்படைகள்

இந்த பதிவினையும் பாருங்கள்: அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சி
============================================================================
சரம் எனும் மூச்சே உயிர் என எல்லாச் சித்தர்களும் யோகிகளும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். குழந்தையொன்று பிறந்தவுடன் மூச்சின் மூலமே உயிர் உடலினுள் வருகின்றது. அதுபோல் உயிர் போய் விட்டது என்பதுவும் மூச்சினை வைத்தே கணிக்கப்படுகிறது. ஆக வாழ்க்கை என்பது மூச்சு விடுவதில்தான் இருக்கின்றது.

சித்தர்களின், யோகிகளின் கூற்றுப்படி ஆரோக்கியமான மனிதனது ஒரு நாள் சுவாச எண்ணிக்கை அண்ணளவாக 21600 ஆகும். ஒரு நிமிடத்திற்கு அண்ணளவாக 15 மூச்சுகள் விடப்படும். ஒருவன் அமைதியாக இருக்கும் போது மெதுவாகவும் வேலை செய்யும் போது அதிகளவு மூச்சும் விடுவான். 

சர நூல்களின் கூற்றுப்படி"மூச்சின் அசைவைக் குறைத்தால் பிராணனின் அதிர்வு அதிகரிக்கும், மூச்சின் அளவை அதிகரித்தால் பிராணனின் அளவு குறையும்"

சிவ சம்ஹிதை எனும் ஹத யோக நூலின் கூற்றுப்படி "ஒழுங்காக பிராணாயாமம் செய்யும் ஒரு சாதகன் தனது மனதிலும், உடலிலும் ஒருவித ஒத்திசைவான நிலையினை அடைகிறான், நீண்டகால சாதனையில் அவனது உடல் ஒளிபெறுவதுடன் நல்ல மணமும் பெறுகின்றான், படிப்படியாக அவனது கர்மாவும் அழிவடைகிறது" என மூச்சினை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பயனைக் குறிப்பிடுகிறது. 

முன்னொரு பதிவில் மூச்சை கவனிக்கும் எளிய முறை யோகப்பயிற்சியினை பதிவிட்டபோது ஒரு நண்பர் "அதில் எப்படி மூச்சினை கவனிப்பது" என்பதைக் கூறவில்லை என்பதனை சுட்டிக்காட்டியிருந்தார். அந்தக் குறையினை நீக்க இந்தப் பதிவில் மூச்சினைக்கவனிப்பதற்கான எளிய முறை ஒன்றைக் கூறுகிறோம்.

பயிற்சி
ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள், மூச்சினை மாற்றுவதற்கு எதுவித முயற்சியும் செய்யாதீர்கள், தொப்புளிற்கு சிறிது மேல்புறமாக ஒரு கையினை வைத்துக் கொள்ளுங்கள், உங்களது வயிறு பூரணமான ஓய்வில் உள்ளவாறு இருத்திக்கொண்டு மெதுவாக உங்கள் மூச்சு உள்ளிழுக்கும் போது வயிற்றின் அசைவினைக் கவனியுங்கள்,உள்ளிழுக்கும் போது மேல் வயிற்றுப்பகுதி (தொப்புளுக்கு மேல்) உயர்வதையும், மூச்சு வெளிவிடும் போது மேல் வயிறு உள் இழுப்பதையும் அவதானியுங்கள். 

இவ்வாறு சிறிது நேரம் அவதானிக்கும் பொழுது உங்களுக்கு மூச்சின் மீது விழிப்புணர்வு வர ஆரம்பிக்கும். இதுவே மூச்சினை கவனிப்பதற்கான செயல் முறையாகும்.   

4 comments:

  1. மனக்கொந்தளிப்பில் இருந்து விடுபட நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு எளிய மூச்சுப் பயிற்சி கற்றுத்தந்தார்.
    தினமும் காலையும் மாலையும் செய்யவேண்டும். ஆரம்பித்துள்ளேன். பயன் தெரிகிறது.

    பதிவு அருமை. நன்றி.

    ReplyDelete
  2. தங்களின் இந்த விளக்கம் அற்புதம். செய்ய முயற்சி செய்கிறேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  3. மிகவும் நல்ல தகவல். நீண்ட நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன். நாளை முதல் முயற்சித்து பார்க்கின்றேன். மிக்க நன்றி .

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...