குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 02, 2011

அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சி

============================================================================
ஓம் அகத்திய மாமகரிஷி குரவே நமஹ
ஓம் கண்ணைய யோகீஸ்வர குரவே நமஹ
ம் காயத்ரி சித்த குரவே நமஹ
======================================================================================
மேலதிக விபரங்களுக்கு இந்த பதிவினையும் பாருங்கள்:
============================================================================

இன்றைய உலகில் யோகா பழகிறேன் என்று சொல்வது ஒருவித நாகரீக சொல்லாகிவிட்டது. அதேவேளை யோகம் என்பது கடினமானது எல்லாராலும் பழகமுடியாதது என்றும் பலமான கருத்து உண்டு. ஏனெனில் யோகப்பயிற்சிகள் கடினமானவை, இயமம், நியமம் என்பன கடைப்பிடிப்பதற்கு கஷ்டமானவை. தினசரி அலுவலகவேலைகள், படிப்பவர்கள் இதையெல்லாம் எப்படி செய்வது! தனியாக நேரம் ஒதுக்கி கற்கவியலாது, ஆதலால் யோகம் செய்வது எமது தினசரி வாழ்க்கையுடன் சரிவராது என மனம் சலித்து போயுள்ளவர்களுக்கு எமது குரு நாதர் உபதேசித்த மிக எளிமைப் படுத்தப்பட்ட ஆனால் சக்தி வாய்ந்த யோகப் பயிற்சி ஒன்றினை இந்த பதிவில் குருவருளுடன் வெளிப்படுத்துகிறோம்.

இந்தப்பயிற்சி மிக இலகுவானது, சிரத்தையும் ஆர்வமும், பொறுமையுமே இதற்கு தேவையான தகுதிகள். இது அஷ்டாங்க யோகத்தின் பிராணாயமம், பிரத்தியாகாரம், தாரணை ஆகிய மூன்று அங்கங்களையும் ஒருங்கிணைத்த எளிமைப்படுத்தப்பட்ட பயிற்சியாகும். மற்றைய சாதனைகளால் விளையக்கூடிய அனைத்து பயன்களும் மெதுவாக ஆனால் நிச்சயமாக வரும்.

நீங்கள் எந்தக்கருத்துடனும் இந்த பயிற்சியினை செய்ய முன்வந்தாலும் இதனை கூறப்பட்ட நியமத்துடன் செய்து வருவீர்களேயானால் இந்தப்பயிற்சி உங்களுக்கு ஒரு புதுத் தெம்பையும், வாழ்வில் மறுமலர்ச்சியினையும், மனதில் உற்சாகத்தினையும் கொடுக்கும் என்பதனை உறுதி கூறுகிறோம்.

பயிற்சி
தினசரி காலை, மாலை குறித்த நேரத்தில் ஓர் அமைதியான இடத்தில் உடலை தளர்ச்சியாக வைத்தவண்ணம் அமர்ந்து கண்மூடி இயற்கையாக நடக்கும் மூச்சை ஆழ்ந்து கவனித்தபடி இருக்கவும். இதற்காக மூச்சை கட்டுப்படுத்தவோ, அதிகம் இழுக்கவோ, மாற்றவோ வேண்டாம். இயற்கையாக வரும் சுவாசத்தை கவனித்தால் மட்டுமே போதும். மற்றும்படி வேறெந்த முயற்சியும் தேவையில்லை. உங்களால் இருக்ககூடிய கால அளவிற்கு இருக்கவும். பயிற்சி கூட கூட பயிற்சியினால் பெறும் ஆனந்தத்தில் அதிகளவு நேரம் இருக்ககூடிய தன்மை வரும்.

இவற்றின் பலன் இன்னது என பட்டியலிடுவது ஒவ்வொருவரது சுய அனுபவத்தினையும் பாதிக்குமாதலால் செய்து பயன் பெற்றபின்னர் எமக்கு அறிவித்தால் மகிழ்வடைவோம். இந்த பயிற்சியினை செய்து ஆர்வமுடன் மற்றைய எளிய பயிற்சிகளையும் செய்ய விரும்புவபர்களுக்கு அவற்றின் விபரம் பகிர்ந்து கொள்ளப்படும்.

இதையே அஜபா ஜெபம் என்பர், இந்த அரிய சாதனையை மட்டுமே செய்து சித்தி பெற்ற சாதகர்கள் பலர் உண்டு என குருதேவர் கூறியுள்ளார். இந்த சிறிய அருட் சக்தி நிறைந்த அரிய சாதனையினை செய்துவாருங்கள்.

உங்கள் சந்தேகங்களை, கேள்விகளை பின்னூட்டமிடுங்கள் இதுதொடர்பான அனைத்துக்கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.

13 comments:

  1. @ DrPKandaswamyPhD

    வணக்கமுடன் நன்றி பெரியவரே!

    ReplyDelete
  2. Thank you very much bro !!!!!!

    ReplyDelete
  3. @ PLAY BOY

    பயிற்சித்து பலன்பெற்றவுடன் அனுபவத்தினை கட்டாயம் கூறுங்கள் விளையாட்டு பையனாரே!

    நன்றி

    ReplyDelete
  4. ஏற்கனவே கேட்டிருக்கிறேன். முயன்றும் இருக்கிறேன். கை வரவில்லை. மறுபடியும் முயற்ச்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. @ bandhu
    முயற்சி எதுவும் செய்யாதீர்கள், எதனையும் எதிர்பார்க்காதீர்கள், மனம் சந்தோஷமாக இருப்பதை மட்டும் எண்ணி விருப்புடன் செய்யுங்கள் கைகூடிவரும்!

    ReplyDelete
  6. முயற்சி செய்யாமல் இருப்பது என்பதே ஒரு மிக கடினமான பயிற்சிதான். நாம் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு வகையில் முயற்சியை செய்தே பழகி இருக்கிறோம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  7. After when I do concentrate of my breath, I feel my breath is not normal (i mean I am doing extra breath than as usual). I would like to know why it so.
    SORRY FOR NOT TYPING IN TAMIL.

    - Raviii

    ReplyDelete
  8. @ Ravi

    இந்த பயிற்சியினை நீங்கள் முயற்சித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    நீங்கள் ஆங்கிலத்தில் கூறியதை தமிழில் இவ்வாறு கூறலாம் என நினைக்கிறேன்,

    "நான் மூச்சினை கவனித்தவுடன் மூச்சு வழமைக்கு மாறாக செல்கிறது, அதாவது ஆழமான மூச்சு உருவாகிறது, இது ஏன் என அறியலாமா?

    எனது புரிதல் சரி என நினைக்கிறேன், இது சரியெனின்,

    நீங்கள் சரியான பாதையில் இருக்கின்றீர்கள் என்பதன் குறி நண்பரே, இந்த பயிற்சியின் அடுத்த நிலையிற்கு இயல்பாகவே நீங்கள் செல்கிறீர்கள்,

    மேற்குறித்த பயிற்சியினை செய்யத்தொடங்கியவுடன், சாதரணமாக அலைக்கழிந்து கொண்டிருந்த மூச்சு, ஒழுங்கடையத் தொடங்கும், விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளை பெற்றோர் கவனித்தவுடன் தனது படிப்பை கவனிப்பது போல், ஒழுங்கடைந்தவுடன் ஆழமாக செல்லத்தொடங்கும், இது "தீர்க்க சுவாசம்" எனப்படும். ஒழுங்காக பயிற்சிப்பவருக்கு தானாகவே வரும் நிலை.

    இதனால் உங்கள் பயிற்சி சரியாக செல்கிறது! ஆனால் ஒருவிடயத்தினை கவனியுங்கள், நீங்களாக‌ வலிந்து ஆழமாக சுவாசிக்கவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

    ஆர்வமிகுதியால் அளவுக்கு அதிகமாக செய்யாதீர்கள்!

    குருவருள் பெற பிரார்த்திக்கிறேன்,

    ReplyDelete
  9. ஐயா,
    அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் "சம்" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் "ஹம்" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் "சோ-ஹம்" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
    அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன். இது பற்றி உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  10. @ ஆதித்த கரிகாலன்


    பயனுள்ள இந்தக்கேள்விக்கு நன்றி, விளக்கத்தின் விரிவுகருதி தனியான பதிவில் இவற்றுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.

    இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்:http://yogicpsychology-research.blogspot.com/2011/12/blog-post_17.html

    ReplyDelete
  11. very nice... i try to do this.

    ReplyDelete
  12. sorry for not typing in tamil..it is very useful for high blood pressure patients to lower BP readings....therapeutic breathing...very nice friend

    ReplyDelete
  13. Thank you. This is very nice...

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...