குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 04, 2011

போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு-01


போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு

ஓம் போக நாதர் பாதம் போற்றி

இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந்திரீக பார்வையில் விளங்கிக் கொள்ள ஒரு முயற்சி! போக நாதரும் சித்தர்களும் எம்முடனிருக்கட்டும்!

ஆதிகுரு லோபாமுத்திரை சகித அகஸ்தியர் மாமகரிஷி பாதம் வணங்கி, திருமூலர், காலங்கி நாதர், போகர் பாதம் பணிந்து போகர் ஏழாயிரம் எனும் ஞன, யோக வாத வைத்தியம் எனும் அறிவுக்கடலிற்குள் செல்வோம்.

இங்கு எடுத்தாளப்பட்ட பாடல்கள் அனைத்தும் தாமரை நூலகம் வெளியிட்ட பாடல்களை அடிப்படையாக கொண்டது, மற்றைய பதிப்புக்களை விட அது சந்தி பிரித்து வாசிக்க இலகுவாக இருந்ததால் ஆதாரமாக கொள்ளப்பட்டுள்ளது.  உண்மையான கருத்தினை போக நாதர் எம்முள் இருந்து புரிய வைக்கட்டும்;

இந்தப்பதிவிற்கு யாரும் அகராதிகளில் உள்ள சொற்பொருள் கொண்டு வாதிட வரவேண்டாம். அனேகமானவை போக நாதரை மனதில் நினைத்து பாடலை விளங்க முற்பட்டபோது பளிச்சிட்டவை. குண்டலினி யோகம், யோகவித்தையில் மற்றும் ஆறு ஆதாரங்களில் பயிற்சியுள்ள சாதகர்களுக்கு இவை புரியும் என்று எண்ணுகிறேன்.

பாடல் - 01
(பேரின்பம் எனும் நிலையான) ஆனந்தம் நிறைந்த ஆதி (யாகிய சக்தியின்) பாதம் வணங்குகிறேன், எங்கும் நிறைந்த பரிபூரணமான சிவனின் பாதம் வணங்குகிறேன்,  (சக்தியின்) ஆனந்தத்தில் உதித்த கணேசர் பாதம் வணங்குகிறேன், (சித்தர் பரம்பரையின்) மூலமாகிய நந்தி தேவரது பாதம் வணங்குகிறேன், தானே ஆனந்த சொருபமான காலாங்கி நாதர் பாதம் வணங்குகிறேன், சனகருடன் வியாக்கிரமர், பதஞ்சலி ஆகியோரின் பாதம் வணங்கி, கணக்கற்ற ரிஷிகள் பாதம் வணங்கி போற்றி போகர் ஏழாயிரம் எனும் நூல் கூறுகின்றேன்.

பாடல் - 02
தான் இருக்குமிடத்திலிருந்து தாமிரபரணி நதி ஏழு காதம் ( 1 காதம் =  3.3525219 கி.மீ), காவேரி எழுபது காதம், கங்கை எழு நூறு காதம் இவ்வளவற்றிற்கும் வேகமுடன் சென்றுவர குளிகை கொண்டேன், (குளிகை என்பது மாத்திரையை குறிக்கும், அத்துடன் ஜோதிடவிதிப்படி ஒரு நல்ல நேரமாகும்), அத்துடன் கடல்கள் ஏழும் சுத்தி வந்து காணாத காட்சியெல்லாம் கண்களால் கண்டு மனதிலே பராபரியை (பரா பட்டாரிகை என ஸ்ரீ வித்தையில் கூறப்படும்) சக்தியை மனதில் எண்ணி போகர் சப்த காண்டம் எனும் இந்த நூலினைப் பாடினேன்.

பாடல் - 03
பண்பான வைத்தியமும் வாதமார்க்கமும், பரிவான ஜெகசால குளிகை வித்தை, சித்தர்களின் மறைத்து வைக்கப்பட்டவை, அரசு புரிந்த ராஜாக்களால் மறைத்து வைக்கப்பட்டவை, தேவர்கள் இருந்த இடங்கள், மனோவேகம் செல்லும் இடங்கள், சாத்திரங்க்களின் தொகுப்பு, மூலிகை இரகசியம், என்பவை பற்றியும்

பாடல் - 04
பாண்டவர்கள் இருந்த இடம், சூரிய சந்திரரின் கிரியை செய்யும் முறைகள், பிரமாலயங்கள், தேவாலயங்கள், புகழ் மிக்க பாஷாண மலைகள் (சித்த வைத்தியத்தில் விஷமுடைய கற்சரக்குகள் எனக்கொள்ளப்படும், வடமொழியில் இதன் பொருள் கல் என்பதாகும்), சரக்குகளின் வைப்பு முறை, நதிகள் அவை உருவாகும் மலைகள், மிருகங்களின் மகத்துவம், அழகான பறவைகள் இருக்கும் இடம்,

பாடல் - 05
மனிதரிடம் இருக்கும் பேதமோ கோடாகோடி, அவர்கள் பேசும் வார்த்தகள் கோடி, அவற்றிற்கிடையிலான தொடர்போ அதுவும் கோடி, இவற்றிலுள்ள அதிசயங்கள எடுத்துகூற அழகான (ஆயிரம் தலையுடைய) ஆதிசேடனாலும் முடியாது. இப்படியாக இந்த உலகத்தின் மகிமையில் (பல) கோடி அதிசயங்கள் உள்ளன, இவற்றை யெல்லாம், சித்தர்களை வணங்கி போகனாகிய நானும் கூறி விட்டேனே!

பாடல் - 06
(இவற்றை முதலில்) ஏழு லட்சம் கிரந்தமாக எழுதினேன், பின்னர் அதிலுள்ள அதிசயங்களைப்பார்த்து உலக மாந்தர்களுக்கான போகர் ஏழாயிரமாக குறைத்திட்டேன். இந்த சப்த காண்டத்தில் நாலு யுகங்களினதும் அதிசயங்கள் யாவும் பாடிவைத்து விட்டு சீனதேசம் சென்றும் பாடினேன், அவற்றையெல்லாம் போகரிஷி யான் புகலுவேன்.

பாடல் - 07
(இரச) வாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் முதலில் (குருவைப்) போற்றி மெய்ஞ்ஞானம் பெறவேண்டும், அடுத்து ஆறாதாரங்களையும் அறிய வேண்டும், பின்பு அழிந்து போகக்கூடிய உடலை நிறுத்தவேண்டும், இதற்கு பராபரியாகிய சக்தியை (ஸ்ரீ சக்கரம் சாதனைதான்) பூசிக்க வேண்டும், இதில் வரும் அமிர்தத்தை துளித்துளியாக பருகவேண்டும் (பானம் என்றால் தூசிகாப் பரு(க)வம் வேண்டும்). இதிலே குருமுறையும், அனுபவமும் வேண்டும். இவையனைத்தும் இல்லாவிட்டால் இரசவாதம் என்பது சித்தி இல்லை.

குறிப்பு: இந்தப்பாடல் குண்டலினி யோகம் மூலம் யோக சக்தியினை எழுப்பி அமிர்த தாரையினை பானம் செய்தவனுக்கே வாதம் சித்தியாகும் எனக்குறிப்பிட்டுள்ளதிலிருந்து இரசவாதம் என்பது இரும்பைத் தங்கமாக்கும் வித்தையில்லை என்பது புலனாகிறது.

பாடல் - 08
வாதமது சித்தியாக வேண்டுமானால் சவர்க்காரத்தில் குருமருந்தும், உப்பினை கட்டு செய்தும், பூரத்தை உப்பாகவும், தாலகத்தை நீறாகவும், வங்கத்தை சுண்ணமாகவும், வேகமுடியாத துரிசினை குரு மருந்தாகவும் மாற்ற வேண்டும். இதுவெல்லாம் விளங்கியதென்றால் உனக்கு இரசவாதம் கைவந்துவிடும்.

குறிப்பு: இந்தப்பாடலிலேயே குறிப்பிட்டுள்ளார் மேலே குறிப்பிட்ட விடயமெல்லாம் விளங்கி விட்டதென்றால் வாதம் கைவந்து விடும் என்று! இவை நிச்சயமாக சித்த மருத்துவத்தில் கூறப்படும்  பொருட்களல்ல. குருவருளால் விளங்கிக் கொள்ளலாம்.

பாடல் - 09
யானை முகம் கொண்டவர் பாதம் போற்றி, கடவுளது பாதம் போற்றி, என்னைப் பெற்ற தாய் போற்றி, பிரம்மா விஷ்ணூவே போற்றி, சரஸ்வதிக்கு போற்றி, அருள் தந்த லட்சுமியின் பாதம் போற்றி, தூரியத்தில் பாட்டனார் (பரம குரு) திருமூலர் பாதம் போற்றி, (அதற்கு துணையான அவத்தையில்) காலாங்கி நாதர் பாதம் போற்றி, நிர்விகல்ப சமாதியடைந்த இருடிகளது பாதம் போற்றி! இவற்றிற்கெல்லாம் நிறைந்து நிற்கின்ற பூரணமே உண்மையான காப்பாகும்!

குறிப்பு: இது 08 பாடலினை குறிவிலக்கம் செய்வதற்கான பாடலாகும், கௌலாச்சார ஸ்ரீ வித்தை அறிந்தவர்கள் இதன் உண்மை அறிவார்கள். போக நாதரும் கௌலாச்சார ஸ்ரீ வித்தை உபாசகராவார்.

பாடல் - ௧௦ - 10 
சாத்திரங்களில் உள்ள கருவை எல்லாம் விளக்கி சிவன் ஏழு லட்சம் பாடல்களுடன் கூறினார், அதிலுள்ள கருக்களை எல்லாம் சுருக்கி ஏழு காண்டமாக்கி, வாதம் தொடர்பான விடயங்களை அதன் கருவையும் பாட்டனாரான (திருமூலரிடம்) கேட்டும் பயின்றும்,  அதன் பண்பை தாயாரிடமும், தேன் போன்ற எனது குருவான காலங்கி நாதரையும் இந்த ஏழாயிரத்தை கூறினேன். 

போக நாத சித்தர் உத்தரவு உள்ளவரை தொடரும்...


1 comment:

  1. I am interested in your translation of this great work of Bogar sithar. Looking forward for you to continue your translation...
    thanks,
    Magesh

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...