குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 27, 2011

சித்தர்களின் பிராணமய கோச விளக்கம்

சித்தர்கள் மனிதனது அமைப்பு பற்றி விளக்குவதற்கு கூறிய மாதிரியுரு பஞ்சகோசம் என்பதாகும். இந்த அமைப்பு மனிதனது ஸ்தூல சூஷ்ம அமைப்பு இரண்டையும் விளங்கிக்கொள்ள சிறந்த ஒரு விளக்கமாகும். அதாவது மனிதனானவன் ஐந்து ஸ்துல சூஷ்ம பகுதிகளால் ஆக்கப்பட்டவன்;
  1. அன்னமய கோசம்
  2. பிராணமய கோசம்
  3. மனோமய கோசம்
  4. புத்திமய கோசம்
  5. ஆனந்த மய கோசம்
என்ற ஐந்துமே பஞ்சகோசம் எனப்படும். இவற்றுள் நாம் இந்தப்பதிவில் பார்க்கப்போவது இந்த ஐந்து கோசங்களுக்கும் இணைப்பாக விளங்கும் பிராணமய கோசம் எனும் பிராண உடல் பற்றி!

பிராணமய கோசத்தின் முக்கிய இயல்புகளை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்;
  1.  பிரபஞ்சத்தையும் தனியொருவரையும் இணைத்தல்
  2. ஸ்தூலத்தினையும் சூட்சுமத்திற்கும் இடையில் இணைப்பாக இருத்த‌ல்
  3. யோக‌ப்ப‌யிற்சி மூல‌ம் ம‌னித‌னது சூஷ்ம‌ ச‌க்திக‌ளை விழிப்பிக்க‌ ஆதார‌மாயிருத்த‌ல்
ஆகிய‌ இந்த‌ மூன்று இய‌ல்புக‌ளுமே பிராண‌ம‌ய‌ கோச‌த்தின் முக்கிய‌ இய‌ல்புக‌ளாகும்.

இனிச் சுருக்கமாக இந்த மூன்று இயல்புகளைப்பற்றியும் பார்ப்போம்;
முதலாவதாக பிரபஞ்சத்தினையும் தனியொருவரையும் இணைத்தல்; பிராணனே தனியொரு மனிதனையும் பிரபஞ்சத்தினையும் இணைக்கும் இணைப்பகும். அதாவது அணு முதல் அண்டம் வரையிலான அனைத்திலும் அசைவாக இருப்பது பிராணனே!அதன் அதிசூட்சும அசைவு அணுவிலும், பௌதீகத்தில் ஒளி, ஒலி, வெப்பசக்தியாகவும், பூமியின் அசைவாகவும், அண்டங்களின் அசைவாகவும் காணப்படுகிறது. இதனை வைத்தே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்றார்கள், யோக சாதனையின் அடிப்படையே எம்மில் உள்ள பிராணனின் அசைவை உணர்ந்து அறிவதன் மூலம் அண்டத்தின் சக்தி இயக்கத்தினை அறிவதே! அதுபோல் எமது பிராணன் கட்டுப்படும் அளவிற்கேற்ப அண்டத்திலுள்ளவற்றை கட்டுப்படுத்தும் தன்மை பெறுவதே அஷ்டமா சித்திகளின் அடிப்படை.

அடுத்து இரண்டாவது தன்மையான ஸ்தூலத்தினையும் சூட்சுமத்திற்கும் இடையில் இணைப்பாக இருத்த‌ல். பிராண‌ன் அதி சூஷ்ம‌மான‌து ம‌ற்றைய‌ நான்கு கோச‌ங்க‌ளையும் ஊடுருவும் த‌ன்மை வாய்ந்த‌து. அதாவ‌து ம‌ற்றைய‌ கோச‌ங்க‌ளுக்கு உயிப்பினை/ச‌க்தியினை வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ப் பிராண‌ம‌ய‌ கோச‌மே!இன்னும் விள‌க்க‌மாக‌ அறிவ‌தானால் ஆன‌ந்த‌ம‌ய‌, விஞ்ஞான‌ம‌ய‌, ம‌னோம‌ய‌ கோச‌ங்க‌ள் அன்ன‌ம‌ய‌ கோச‌த்தில் செய‌ற்ப‌டுவ‌த‌ற்கான‌ ஆற்ற‌லையும் இணைப்பையும் வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ பிராண‌ம‌ய‌கோச‌மே! பிராண‌ன் ப‌ல‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே எல்லா கோச‌ங்க‌ளில் உள்ள‌ ஆற்ற‌ல்களும் வெளிப்ப‌ட‌முடியும். அடுத்து இந்த‌ப் பிராண‌ன் ஸ்தூல உட‌லில் உற்ப‌த்தியாவ‌து இல்லை. வெளியிலிருந்து பிராண‌ம‌ய‌ கோச‌த்தால் ஏற்க்க‌ப்ப‌ட்டும் 72000 நாடிக‌ளால் உட‌லிற்கு விநியோகிக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பிராண‌ம‌ய‌ கோச‌த்தின் அமைப்பிய‌ல் ப‌ற்றி விரிவாக வேறோரு ப‌திவில் பார்ப்போம்.

மூன்றாவது இயல்பு: சித்தர்கள் பிராணசக்தி எல்லாக்கோசங்களையும் ஊடுருவும் என்று அறிந்திருந்தார்கள், அதனைப் பயன்படுத்தி மனிதன் எப்படி தன்னை உயர்த்திக்கொள்வது என்று கண்டறிந்ததே சித்தர்களது அட்டாங்க யோகம், கிரியா யோகம் என்பவையெல்லாம். இதன் மூலம் யோக‌ப்ப‌யிற்சிகள் எல்லாம் ம‌னித‌னது சூஷ்ம‌ ச‌க்திக‌ளை விழிப்பிக்க‌ ஆதார‌மாயிருத்த‌ல் என்ப‌து பெறப்படுகிறது. பிராண‌னுட‌ன் எதைக்க‌ல‌ந்தாலும் அத‌ன்மூல‌ம் ஸ்தூல, ம‌ன‌, புத்தி, ஆன‌ந்த‌ம‌ய‌கோச‌ம் மாறுத‌லையும் என்ப‌த‌ன் அடிப்ப‌டையிலேயே யோக‌ப்ப‌யிற்சிக‌ள் அனைத்தும் உள்ள‌ன‌.
 
அனேகமான யோகசாத்திரம் தொடர்பான பதிவுகளில்,நூற்களில் பிராணமய கோசத்தினை இரண்டாவது கோசம் எனக்குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது பஞ்ச கோசங்களை ஒன்றின் மேல் ஒன்றான அடுக்குகளாக உருவகிக்கப்படுவதாக விளக்கம் தரப்படுகிறது. இது தவறானதாகும் ஸ்தூல உடலாகிய அன்னமய கோசம் தவிர்ந்த மற்றைய நான்கும் சூஷ்மதன்மை நிறைந்ததாகும். அவை பிரபஞ்சத்தில் எங்கும் பரவும் தன்மை வாய்ந்தவை.
 
இந்த சுருக்கமான விளக்கத்தின் மூலம் பிராண மயகோசத்தினை வலுப்படுத்துவதால் மனிதன் பெறக்கூடிய பலன்கள் என்ன என்பதனை வாசகர்கள் மேலும் சிந்தித்து அறிந்து கொள்ளலாம்.

3 comments:

  1. பஞ்ச கோசங்கள் பற்றி விரிவான செய்திகளுக்கும், பிராணனே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதையும் சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. ஆஹா...அருமையான வலைப்பூ...சித்தர் ரகசியங்கள் தேட தேட முடியாதே....! அது வேறு ஒரு உலகம்..

    ReplyDelete
  3. @ முன்பனிக்காலம், Sankar Gurusamy

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...