குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 07, 2011

விழிப்புணர்வும் எளியமுறை யோகப்பயிற்சியும்

 தாந்திரீக தியான முறைகளிலும், பௌத்ததியான முறைகளிலும், யோகப்பயிற்சிகளிலும் விழிப்புணர்வு (awarness/mindfulness)  என்பது பிரதான விடயமாகும். சுருக்கமாகச் சொல்வதானால் விழிப்புணர்வு என்பது நிகழ்காலத்தில் தனது பௌதீக உலகிலும் மன உலகிலும் நிகழ்வதை எந்த வித முந்துணிபும் இன்றி அவதானித்தலாகும். இது உடல் அசைவு, பார்வை, மூச்சு, சப்தம், மணம், சுவை, உடல் உணர்வுகள், வலி, இன்ப உணர்வு, எண்ணங்கள் ஆகிய அனைத்தின் முலமும் சாதிக்க முடியும்.

நிகழ்காலம் என்பது என்ன? உணர்வுடன் (Conscious)  புற உலகோ, அக உலகோ தொடர்புகொள்ளும் முதற்கணம் நிகழ்காலம் எனப்படும். அதாவது மனம், பொருள் அல்லது எண்ணம் ஆகிய இரு விடயங்கள் சந்தித்துக்கொள்ளும் புள்ளி!இந்த இடத்தில் ஒருவருக்கு அனுபவம் உண்டாகிறது, அதாவது கேட்டல், பார்த்தல், மணத்தல், அசைதல் போன்ற புலணுணர்வுகள் உண்டாகின்றன்.

இவை தொடர்ச்சியாக நிகழும் போது மனம் இவற்றை பிரித்தறியும் தன்மையினை இழக்கின்றது. அதனால் மனம் தனது பழைய அனுபவத்தினை நிகழ்காலமாக கருதிக்கொண்டு அறியாமையில் துன்புறுகின்றது.

மனதில் ஒரு எண்ணத்தை அறிவதோ, புலனுணர்வினைப் பெறுவதோ ஒருவித தோற்றமும் முடிவும் உள்ள செயல்முறை. அதாவது கோபம் வருகின்றதானால் அது தொடங்குவதில் இருந்து முடியும் வரையிலான செயல்முறை ஒன்று காணப்படும். அதனை நாம் விழிப்புணர்வுடன் அவதானிப்பதனால் எமது மன இயக்கம் என்னவென்பதனை நாம் அறிந்து கொள்ளலாம். இப்படி அறிந்து கொள்ளும் போது மனம் செயற்படுவது விருப்பு அல்லது வெறுப்பாகிய இரு தூண்டு காரணிகளால் என்பதனை புரிந்து கொள்வீர்கள். இந்த அறிவு திடமாகும் போது அவற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு மனம்  ஞானத்தினை அடைகிறது. 

இந்த விழிப்புணர்வினை அடையும் பயிற்சிகளில் முதன்மையானது; முந்துணிபுகளை நீக்கி நடப்பதனை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான்! இது எல்லாவ‌ற்றிற்கும் ஒரு கார‌ண‌ காரிய‌ தொட‌ர்புக‌ளை தேடுப‌வ‌ர்க‌ளுக்கு, எதையும் கேள்வி கேட்பவர்களுக்கு மிக‌ க‌டின‌மான‌ ஒன்று, கேள்வி கேட்கும் போது ம‌ன‌ம் சிந்த‌னை செய்கிற‌து. சிந்தனை, ஆராய்தல் என்ப‌து ம‌ன‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தினை நிக‌ழ்கால‌த்தில் ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு செய‌ல்முறை. இத‌னை சித்த‌ர்க‌ள் சுருக்க‌மாக‌ "சும்மா இரு" என்றார்கள். அடுத்த‌து கேள்வி கேட்பதன்  அடிப்ப‌டை குழ‌ப்ப‌ம் அல்ல‌து தெளிவின்மை ஆகும். அதாவ‌து கேள்வி கேட்கும் போது ம‌ன‌ம் குழ‌ப்ப‌ நிலையில் உள்ள‌து, தெளிவை நாடுகிற‌து. ஆனால் கேள்வி மூல‌ம் தெளிவை அடைத‌ல் முடியாது, கேள்வி என‌ப‌து தெளிவை அடைவ‌த‌ற்கான‌ முத‌ற்ப‌டி, அதாவது தெளிவை அடைவ‌தற்குரிய‌ தூண்டுகோல், பலர் கேள்வி கேட்பது அறிவை வளர்க்கும் பயிற்சி என சொல்லிக்கொண்டு எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பர்,அது தொடர்ச்சியாக நடக்கும் போது மனம் பழக்கப்படும் போது அந்த நிலையே மனம் விழிப்புணர்வு அடைவதை தடுத்து விடுகிறது, இதற்கு அடுத்த நிலையாகிய முயற்சி, முயற்சியின் பின் ப‌யிற்சி என்பன எப்போதும் அவ‌சிய‌ம். கேள்விக‌ளால் நிறைந்த‌ கோப்பைக‌ளில் ஞான‌த்தினை உற்ற முடியாது என்ப‌தே ஜென் போன்றவ‌ற்றில் தேனீர் கோப்பை க‌தைக‌ளின் உருவ‌க‌ம்.

இந்த நிலையினை ஒருவர் 24 மணி நேரமும் சாதிக்க இயலுமா? சாதாரண வாழ்க்கையில் படிப்பவர்களுக்கு, வேலை செய்பவர்களுக்கு இதனை 24 மணி நேரம் செய்யமுடியாது, இதனை பயிற்சி செய்வதற்கு குறித்த ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கிகொள்வதன் மூலம் பயிற்சிக்கலாம். இத‌னால் ம‌ன‌ம் சுத்த‌ம‌டையும். இப்ப‌டியான‌வ‌ர்க‌ளுக்கான எளிய‌ ப‌யிற்சி ப‌ற்றிய‌ ப‌திவு இங்கே இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து, காண‌வும்.

அந்த‌ப் பதிவில் இத‌னை அஜ‌பா ஜெப‌ம் என்ப‌ர் என‌க் குறிப்பிட்டிருந்தேன். அஜ‌பா என்றால் "முயற்சி அற்ற விழிப்புணர்வு" என‌ யோக‌ப் பொருள் கொள்ள‌லாம். குறித்த‌ ப‌யிற்சி விழிப்புண‌ர்வினை அடைவ‌த‌ற்கு மெதுவான‌ ஆனால் சிற‌ந்த‌ பயிற்சியாகும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சி தொடர்பாக ப‌ல‌ர் இந்த‌ நிலையினைப்ப‌ற்றி விரிவாக‌ எழுத‌வேண்டும் என‌ கேட்கிற‌ர்க‌ள், விழிப்புண‌ர்வு ப‌யிற்சியினை வார்த்தைக‌ளில்  முழுமையாக‌ விப‌ரிக்க‌ இய‌லாது. அத‌ன் அடிப்ப‌டையினை கூற‌லாம், ஒவ்வொருவ‌ரும் த‌ன‌து ப‌யிற்சியின் மூல‌ம் அத‌னை ப‌டிமுறைக‌ளை தெரிந்து கொள்வ‌து ம‌ட்டுமே உண்மையில் தெளிவ‌த‌ற்கான‌ வ‌ழி. ஏனெனில் வார்த்தைக‌ளில் வ‌ருவ‌து உண்மையின் மிக‌,மிக‌ சுருக்கிய‌ வ‌டிவ‌மே!

சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் பொது வெளியிலான‌ க‌ல‌ந்துரையாட‌லில் விழிப்புண‌ர்வு அடைய "விபாச‌னா" போன்ற‌ தியான‌ப்ப‌யிற்சிக‌ள் எமது பதிவில் வெளியிட்ட பயிற்சியினை விட சிற‌ந்த‌வை என‌ க‌ருத்து தெரிவித்திருன‌ர், நிச்ச‌யமாக‌ விபாச‌னா சிற‌ந்த‌ தியான‌ முறை என்ப‌தில் எதுவித‌ ஐய‌முமில்லை. ஆனால் அது பிற‌விப்பிணியாகிய‌ பெரு நோயிற்கு கொடுக்க‌ப்ப‌டும் ச‌க்தி வாய்ந்த‌ ம‌ருந்து (powerful dosage)  என்ப‌த‌னை ப‌யின்ற‌ சாத‌க‌ர்க‌ள் அறிந்திருப்ப‌ர். விபாசனா பயிற்சி என்ப‌து ஒருவ‌ர் அடைய‌க்கூடிய‌ அதி உச்ச‌ விழிப்புண‌ர்வு நிலையாகும். அந்த‌ நிலைய‌டைந்த‌வ‌ர்க‌ள் உல‌க‌ வாழ்க்கையில் இருக்க‌ முடியாது, புத்த‌ த‌ன்மை அல்ல‌து ப‌ரிபூர்ண‌ ஞான‌ நிலையினை அடைந்த‌வ‌ர்க‌ளாவார்க‌ள். இது உல‌கை முழுவ‌தும் துற‌ந்து ஞான ப‌யிற்சிக்காக தம்மை அர்ப்பணித்த துறவிகளுக்கு முற்றிலும் பொருத்தமானதாகும், உலகவாழ்க்கையில் இருந்துகொண்டு, தமது அன்றாட கடமைகளை செய்தவண்ணம் யோகப் பாதையில் மெது மெதுவாக முன்னேறவேண்டும் என நினைப்பவர்களுக்கு விபாசனா போன்ற கடுமையான‌ பயிற்சிகள் பொருந்தாதது. 

நாம் வெளிப்ப‌டுத்திய‌ யோக‌ப்பயிற்சியான‌து அள‌வில் குறைக்க‌ப்ப‌ட்ட‌ சாதார‌ண‌வாழ்க்கையில் இருந்து கொண்டு மெதுமெதுவாக‌ விழிப்புண‌ர்வு நிலையினை அனுபவிக்கும் எளிய‌ முறையாகும். முய‌ற்சித்து ப‌ய‌ன்பெற்ற‌வ‌ர்க‌ள் தெரிவிக்க‌வும்.

2 comments:

  1. //உலகவாழ்க்கையில் இருந்துகொண்டு, தமது அன்றாட கடமைகளை செய்தவண்ணம் யோகப் பாதையில் மெது மெதுவாக முன்னேறவேண்டும் என நினைப்பவர்களுக்கு விபாசனா போன்ற கடுமையான‌ பயிற்சிகள் பொருந்தாதது. //

    கடுமையான பயிற்சி என்பது பழகுமிடத்தில் மட்டுமே., அதுவும் நாம் உணரவேண்டும் என்பதற்காக மட்டுமே..

    ஆனால் அன்றாட வாழ்வில் அந்த ருசியை நம்முள் நிலை நிறுத்திக்கொள்ளும் விதமாக காலமாலை என ஒருமணிநேரம் போதுமானதே....

    மற்றபடி குடும்பத்தில் இருப்பவர்க்கு மிகவும் பொருத்தமானது விபாசனா..

    பகிர்வுக்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  2. @ நிகழ்காலத்தில்...

    கருத்துக்கு நன்றி ஐயா,

    நீங்கள் கூறுவது சரிதான், அந்த வார்த்தைப்பிரயோகம் எனது சூழல் சார்ந்த எண்ணம், இங்கு (இலங்கையில்) விபாசனா என்பது பௌத்த துறவிகளுக்கு உரியதாகவே பெரும்பாலும் எண்ணப்பட்டு வருகிறது.

    உண்மையாய் தேவையுள்ளவர்களுக்கு, ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்வது போல் இலகுவான விடயமே!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...