குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 16, 2011

தியானம் யோக பயிற்சிகளில் தடைகள் வருவதற்கான காரணமும் மீள்வதற்கான வழிமுறையும்

எத்தனைதான் சாமிகள் கும்பிட்டாலும்
ஏற்றமிகு சொற்பொழிவு கேட்டிட்டாலும்
பலகாலம் புத்தகங்கள் படித்திட்டாலும் 
பலகலைகள் பாங்குறவே கற்றிடாலும் 
பரிணாமம் உயரும்வரை ஞானம் தோன்றாதப்பா!
பரந்தாமன் மோஷமது கிட்டிடாதப்பா!
-ஸ்ரீ கண்ணைய யோகீ-

யோகிகளும் சித்தர்களும் மனித வாழ்க்கையின் நோக்கம் தன்னை அறிந்து இறுதி நிலையாகிய பிறவிப் பேரின்பம் பெறுதல் எனக் கூறுகின்றனர். இந்த உபதேசத்தினைக் கேட்பவர்கள் அந்த நிலையினை அடைய வேண்டி யோகசாதனை, தியானம் என தேடி அலைந்து கற்றுக் கொள்கின்றனர். பின்பு சிலகாலம் தியான யோகங்களில் ஈடுபடுகின்றனர், ஒரு சில தடைகள் வந்தவுடன் அவற்றை விட்டு விடுகின்றனர். பின் அதன் மீதான ஆர்வம் குறைந்து விடுகிறது. பின்பு தமக்கு அவை சரிவரவில்லை என மனம் வேதனைப்படுகின்றனர்அல்லது கற்றுத்தந்த குருவின் முறை பிழை என குறை கூறுகின்றனர்

இன்னொரு சாரார் யோக நூற்களை கற்று தேர்ச்சி பெறவேண்டும் என முயற்சித்து பெரும் குழப்பத்தில் ஆழ்கின்றனர்

பலரிற்கு பலகாலம் உண்மையான முயற்சியுடன் தியானம் செய்தும் எதுவித பலனும் இல்லை

அவர்கள் கூறும் காரணங்களில் ஓரளவு உண்மை இருப்பினும் இன்னொரு பக்கத்தில் பயிற்சியே இல்லாமல் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் பலர் உள்ளனர்.

சிலரிற்கு ஒருவார்த்தை கூறியவுடன் யோகத்தினைப்பற்றி விளங்குகிறது, சிலரிற்கு எவ்வளவு எடுத்துக்கூறியும் விளங்குவதில்லை! என்ன காரணம்?

இன்று பல்லாயிரக்கணக்கான யோக பயிற்சி நிலையங்கள், பயிற்சி முறைகள் என பல வழிகள் இருந்தும் அனைவரது பிரச்சனையும் ஒன்றுதான், எவ்வளவுதான் முயற்சித்தும் பலன் கிட்டவில்லை எனபதுதான்.

பட்டினத்தாரிற்கு  "காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" என்ற ஒரு வார்த்தை ஞானத்தை தந்தது.

நாத்திகராக கடவுள் உண்டா இல்லையா என வாதம் செய்த விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரை கண்டவுடன் ஞானத்தினைப் பெற்றார். ஆனால் பல ஆண்டுகள் தியானம் செய்தும் அந்த ஞானத்தினை பலரால் பெறமுடியவில்லையே என்ன காரணம்?

காமுகனான அருணகிரிநாதர் வைராக்கியத்துடன் முருகனை நினைத்தவுடன் ஞானம் பெற்றார்.

இந்த வேற்றுமைக்கு காரணம் என்ன?

பரிணாம உயர்வு, பரிணாமம் என்றவுடன் சாள்ஸ் டார்வினின் கூர்ப்பு கொள்கைனை எண்ணுபவர்கள் பலர் உள்ளனர். அது பௌதிக பரிணாமம். இங்கு நாம் கூற வருவது அகப் பரிணாமம். மனிதரது ஸ்துல வடிவம் இருப்பதைப்போல் சூஷ்ம உடல் உண்டென்பதனை சித்த வித்தை, யோக வித்தை பயில விரும்புபவர்கள் அறிவர்.

 சித்தர்களது கூற்றுப்படி சூஷ்ம உடலும் ஸ்துல உடலும் 96  தத்துவங்களினால் ஆனதுஉண்மையான மனிதனது அமைப்பு       சூஷ்மத்திலேயே தங்கியுள்ளது
இந்த சூஷ்மத்தின் வடிவமே   மனிதனது ஸ்துலத்தினை ஆக்குகின்றது என்பதனை சித்தர்கள் தெளிவாக அறிந்திருந்தனர். அதனால் தான் நோய் நிதானிப்பதற்கு நாடியை மூலமாக கொண்டிருந்தனர்இன்றைய மேற்கத்தைய வைத்திய முறையில் உள்ளதைப் போல் பல கருவிகள் கண்டுபிடிக்க முனையவில்லை

எந்த செயலும்எண்ணமும்  ஸ்தூல நிலைக்கு வரமுதல் சூஷ்ம நிலையிலேயே செயல் கொள்ள ஆரம்பிக்கும்இவற்றை அறிவதே  உண்மையான சித்த மருத்துவத்தின் பண்புகள். இவை பற்றி விளக்கமாக வேறு ஒரு பதிலில் பார்ப்போம்இங்கு நாம் எடுத்துக்கொண்ட விடயத்தினை மட்டும் ஆராய்வோம்.

ஒருவருடைய அகப் பரிணாமம் அவருடைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களில் தங்கியுள்ளதுஇந்த அந்தக்கரணங்கள் பிராண சக்தியின் மூலமே இயங்குகின்றதுபிராணன் அதிர்வு (freequency) அளவு (quantity) ஆகிய இரு காரணிகளினால் அந்தக்கரணங்களை ஆளுகின்றது. பிராணனின் அளவு அதிகமாக அல்லது குறையும் பொது அது ஸ்துலத்தில் செயல் கொள்ளும் நிலை அதிகமாகிறது அல்லது குறைகிறதுஉதாரணமாக நாம் நினைக்கும்  எண்ணத்தினை உதாரணமாக கொண்டால் அது செயல் நிலை கொள்ள பிராணனின் அளவும் மற்றைய காரணிகளும் (சூழல், எதிர் காரணிகள், கர்மா) முக்கியமானவைஅதுபோல் நோய், ஆரோக்கியம் என்பது ஒருவருடைய பிரானனுடைய அளவு தொடர்புடையது.

அதுபோல் ஒருவருடைய பரிணாமம் பிரானனுடைய அதிர்வு (frequency) இனை சார்ந்தது. அந்தக்கரணங்களில் எத்தகைய அதிர்வில் உள்ளதைப் பொறுத்து அவருடைய நிலை வேறுபடும்இந்த பிரானனுடைய அதிர்வினைப் பொறுத்து ஒருவருடைய ஆன்மிக, அக நிலை வேறுபடுகிறது.

இதனை இயற்பியலின் அலைவேக சமன்பாட்டின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்,

V= fλ
V = வேகம் = ஒரு செயல் மனதில் எண்ணமாக தோன்றி செயல் பெறுவதற்கான அளவு என கொள்ளலாம்.
f  = அதிர்வு (freequency) = மனதில் பிராணன் இன்  அதிர்வு
λ = அலை நீளம் = எண்ணத்தினை மனதில் ஒருமைப்படுத்தக்கூடிய அளவு அல்லது ஒருமைப்படுத்தலின் அளவு (concentration power)

இங்கு அதிர்வுதான் தனித்தன்மையுடையதுபொதுவாக ஒளியின் அதிர்வின் அளவைப் பொறுத்தே அதனை பகுப்பதை போல் (x ray, Gamma, UV, IR, visible) சூஷ்ம உடலின் பிராண அதிர்வினைக் கொண்டே அவனது அக பரிணாமம் தீர்மானிக்கப்படுகிறது.  athaavathu அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் பிராண அதிர்வின் தன்மையே ஒருவருடைய அக பரிணாமத்தினை தீர்மானிக்கும். ஒவ்வொரு செயலினை செய்வதற்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரத்தில் குறித்த பிராண அதிர்வு ஏற்பட வேண்டும்இது தெய்வ சாதனை, யோக சாதனை செய்வதற்கும் பொருந்தும்.

இந்த குறித்த பிராண அதிர்வினை அந்த அதிர்வுடைய நபரிடமிருந்து பெறுவதுதான் தீட்சை எனப்படும் சடங்கின் உண்மை தத்துவம் .

உயர் பிராண அதிர்வுகளை சேமித்து வைத்து வருபவர்களுக்கு அளிக்கும் சேமிப்பகம் தான் கோயில்களும், ஜீவ சமாதிகளும்.

இந்த பிராண அதிர்வின் தன்மையை வைத்துத்தான் சித்தர்கள் பரிபாஷையிலும், பழைய யோக தத்துவ நூற்கள் சூத்திரமாகவும் படிவைத்தனர். இவற்றை படித்தவர்களுக்கு தெரியும் ஒரு பாடலிற்கு பல பொருள் விளங்கும். இவை அவரவர்களது பிராண அதிர்வின் தன்மையினைப் பொறுத்து அவர்களுடைய மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் பொருளினை விளக்கும். அந்த சித்தருடைய பிராண அதிர்விற்கு சரியாக தன்னை ஒத்திசைக்க வல்லவரிற்கு அதனுடைய உண்மை பொருள் விளங்கும்.

இனி எமது கேள்விகளுக்கான பதில்களிற்கு வருவோம். யோக சாதனை, தியானம் செய்யத்தொடங்கி தடங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? தொடங்கும் பொது உள்ள பிராண அதிர்வின் நிலையினை இழப்பதுதான் அவ்வாறு ஏற்படுவதற்கு காரணமாகும்.

இதனை தடுக்க என்ன வழி?

சித்தர்களின் இரகசிய சாதனைகளில் பரிணாமத்தினை துரிதப்படுத்துவதற்கான சாதனைகள் சில உள்ளன. இலகுவான முறை பிரார்த்தனை, உயர் பிராண அதிர்வுடன் எமது மனதினை ஒத்திசைய வைப்பதன் முலம் எமது பிராண அதிர்வினை உயர்த்திக் கொள்வதே உண்மையான பிரார்த்தனையின் செயல் முறை இரகசியமாகும்.

இதைத்தவிர சித்தர்களது முறையில் சில பிரத்தியேகமான பிராணாயாம முறைகள், தியான பயிற்சிகள்மூலிகைகள்  என வேறு முறைகளும் காணப்படுகின்றன.

இந்த பதிவின் நோக்கம் பிராணனின் அதிர்வு நிலை எப்படி ஒருவருடைய அகபரிணாமத்தினை பாதிக்கின்றது என்பதனை தெரிந்து கொள்வதேயாகும்.

இந்த தகவல் உண்மைத் தேடல் உள்ள யாருக்காவது பயன் படும் என எண்ணுகிறோம்.  


4 comments:

  1. மிகவும் உபயோகமான விசயம்.. பலர் சாதனைகளைத் தொடங்கி சில நாட்களில் / வாரங்களில் விட்டுவிடுகிறார்கள்.. அதற்கு இதுதான் காரணம் போலும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. Please see this link
    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    ReplyDelete
  3. nandri, iya ungalal puriyatha vishayangal purinthu konden nandri iya nandri

    ReplyDelete
  4. ஆம்! அற்புதமாய் பயனுடையதாய் அறிந்தோம். மிக்க நன்றி!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...