சித்த வித்யா பாடங்கள்
நோக்கமும் தெளிவும்
கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில் நாம் கற்ற சித்தர்களது வித்தைகள் பற்றி ஒரு சில குறிப்புகளும், தொடர் கட்டுரைகளும் வெளியிட்டு வந்தோம். சில அன்பர்கள் சித்த வித்யா, சித்த வித்தை கற்பதற்கு என்ன வழி? எப்படிக் கற்பது என்ற கேள்விகளை கேட்டிருந்தனர். இந்தக்கேள்விகளுக்கு பதிலாகவே இந்தப்பதிவும் இனிவரும் பதிவுகளும் அமையப்போகின்றது.
சித்த வித்தை கற்க எண்ணும் பலரிற்கு உள்ள தடைகளை கீழ் வருமாறு வகைப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.
சித்தர்களது நூற்கள் அனைத்துமே பாடல் வடிவில் இருத்தல், அவற்றை புரிந்து கொள்ளும் தன்மையினை சமுகம் இழந்துவிட்டமை. இதற்கு காரணம் எமது பாரம்பரிய கல்வி முறை மாற்றமடைந்தமை, தற்கால கல்வி அறிவுடன் அவற்றை அணுகும் போது அபத்தமான விளைவுகள் பல உண்டாகின்றது. இது கிட்டத்தட்ட நுண்கணித பாடப்புத்தகத்தினை (Calculus text book) சாதரணமான ஒருவன் பார்த்த நிலைதான்.
சித்த வித்தைகள் பற்றிய மாயை,கட்டுக்கதைகள், அற்புதமாக்கல், வியாபாரப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள், நோக்கத் தெளிவு இன்மை என்பன. எமது பழைய சமூகம் அகவயப்பட்ட சமூகம், எமது பண்பாடுகள்,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் தன்னையறியும் முறையுடனேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை மாறுபட்டு சமூகம் புறவயப்பட்ட சமூகமாக மாறா ஆரம்பித்தது, இப்படி மாற்ற முற்ற சமூகத்தினூடாக பரிமாறப்பட்ட சித்த வித்தைகளும் பல வித கிளைகளாக யோகமுறைகளாக, காப்புரிமை கோரல்களுடன் மேற்கத்தைய முறையில் "புதுப் புது ப்ராடக்ட்" ஆக வடிவம் பெற்று இன்று வேற்று கலாச்சாரத்தவர்கள் மொழியினர் போற்றும் ஒரு அரிய கலையாக வடிவம் பெற்றுள்ளது. எம்மைப் பொருத்தவரையில் எம்மிடமிருந்துதான் இவையெல்லாம் சென்றது எனத்தெரியும், ஆனால் அவற்றை மூல நூற்களில் விளங்கும் ஆற்றலோ முறைப் படுத்தப்பட்ட கல்வியோ எம்மிடம் இல்லை.
இந்த நிலையில் இவை பற்றிய அதீத கற்பனைகள், புனைவுகள், இவற்றை சாமானியர் கற்க முடியாது என்ற பயமுறுத்தல், ஒரு சாரார் தமக்கு மட்டுமே அவற்றின் உண்மை விளங்கப்படுத்தப் பட்டுள்ளதாக கருதல், நாவல்கள், சினிமாக்களின் எடுத்தாள்கை என்பவற்றினூடாக பெற்ற கருத்தாக்கங்கள் மீண்டும் எம்மவர்களாலேயே எமக்கு இடப்பட்ட தடைகளாக உருப்பெற்றுள்ளன.
இவற்றை அடிப்படையாகக் கொண்டும் தற்காலத்து நடைமுறையில் சித்த வித்தையினை விளங்கிக் கொண்டு உள்ளத்தில் இலகுவாக பதியும் வண்ணம் அவற்றின் மூலங்களின் சாரம் குறையாதவகையில் கற்பதற்கான ஒரு முயற்சிதான் இந்த சித்த வித்யா பாடங்கள்.
பாடத்தினுள் செல்லமுன் இந்த வகுப்புகளிடையான ஒத்திசைவினை மேம்படுத்த அவற்றின் தன்மை பற்றிய ஓர் அறிமுகம் அவசியமானது என்பதால் இதுவரை நான் பெற்ற பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒரு சில தெளிவுகளை சுயமாக முன் வைக்கிறேன். இவை தவிர்ந்து மற்றய கேள்விகள் இருப்பின் அவற்றினை பின்னூட்டமிட்டால் அவற்றிற்கான பதில்கள் பின்னூட்டமாகவோ, அடுத்துவரும் பாடங்களிலோ இணைத்துக்கொள்ளப்படும்.
இவற்றை பயில்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும், பலரும் பயமுறுத்துகின்றனரே? குரு நேரடியாக இல்லாமல் எப்படி இவையெல்லாம் சாத்தியம்? என உங்கள் எண்ண அலைகள் ஓடுவது எமக்கு புரிகின்றது அன்பர்களே! அதற்கு பதில் ஏகலைவன் எப்படி வித்தை கற்றான்? என்பதில் அடங்கியுள்ளது. அதேவழியில்தான் நாமும் கற்க்கப்போகிறோம். ஆர்வமும் கற்க வேண்டும் என்ற தாகமும்தான் ஒரே தகுதி! ஏகலைவன் குருவிற்கே தெரியாமல்தான் அவர் மனதிலிருந்த ஞானத்தினை ஆகர்ஷித்தான், ஆனால் நாம் ஆதி குரு அகஸ்தியரை எப்போதும் மனதில் இருத்தியே இதைத் தொடரப்போகிறோம், நீங்கள் மற்றைய சித்தர்களை குருவாகக் கொண்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. சூஷ்மத்தில் இறைவன், சித்தர்கள் எவருக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த சித்தரையோ, தெய்வத்தினையோ குருவாகக் கொள்ளலாம். அவர்களுடன் சூஷ்ம இணைப்பினை ஏற்ப்படுத்திவிட்டால் பின்பு அவர்கள் சூஷ்ம உடலில் உள்ள குருநாதர், தேவதைகள், ஆகாய மனதுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலமும் மேலதிக அறிவினை உங்களது நாளாந்த பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது எப்படி என்பதனை படிப்படியாக பாடங்களினூடே விளக்கப்படும். இப்படிப் படிப்படியாக பெறும் ஞானத்தின் மூலம் எல்லாக் கேள்விக்குமான விடையினை நீங்களாகவே பெற்றுக் கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை, உபாசனை எதுவும் செய்ய வேண்டுமா? இல்லை, செய்பவராக இருந்தால் அவற்றின் உண்மை விளக்கம், பயன்பாடு என்னவென்பதனை அறிந்து கொள்வீர்கள்.
சித்த வித்தை பற்றி பேசுவதற்கும் அவற்றினைப் பதிவதற்கும் உங்களுடைய தகுதி மற்றும் காரணம் என்ன? அந்த வித்தையிற்குரிய குருபரம்பரையினை தொடர்பு கொண்டு கற்றமையும் குருநாதர் உத்தரவுமே இவற்றிற்கான தகுதியும் காரணமாகும். இவைபற்றிய மேலதிக விளக்கம் அடுத்து வரும் பாடங்களில் விளக்கப்படும்.
இவற்றை பயிற்ச்சி செய்ய விருப்பமில்லை, ஆனால் வாசித்து விளங்க விருப்பமாயுள்ளேன்? நிச்சயமாக, நீங்கள் தொடர்ந்து பலமுறை வாசிக்கும் போது படிப்படியாக மனம் அவற்றை செய்வதற்கான நிலையினை, சூழலை உருவாக்கும். எதுவிதமான தாழ்வு மனப்பன்மையினையோ,பய எண்ணங்களையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக கற்க்கும் மனநிலையில் அணுகுங்கள். மற்றவற்றை குருநாதர் பார்த்துக் கொள்வார். ஆனால் உங்கள் முயற்சி உண்மையானதாக, உள்ளம் விரும்பி செய்வதாக இருக்க வேண்டும்.
இதுவரையிலான விளக்கங்கள் அடிப்படை தெளிவையும் இவற்றை கற்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினையும் மனத்துணிவினையும் தந்திருக்கும் என நம்புகிறோம்.
அடுத்து இனிவரும் பதிவுகளில் பதியப்படப்போகின்ற பாடங்களின் ஒழுங்கைப் பார்ப்போம். இவை பாடத்தின் விரிவுகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. எனினும் அடிப்படை இவ்வாறே இருக்கும்.
பாடங்களது உள்ளடக்கம்
பாடம்:00 அறிமுகம்
பாடங்களின் தன்மை, நிபந்தனைகள், தகுதி, பக்குவம், குரு பரம்பரை
பாடம்: 01 முதன்மையான மூன்று தத்துவங்கள்
மனிதனின் அமைப்பு, மனிதனின் ஏழு அடிப்படைகள், ஸ்தூல உடல், சூஷ்ம உடல், பிராணன்
பாடம்:02 மானச தத்துவங்கள்
நான்காவதும் ஐந்தாவதுமான அடிப்படைகள், இயற்கையுணர்வு மனமும், புத்தியும்
பாடம்: 03 ஆன்ம தத்துவங்கள்
ஆறாவதும் ஏழாவது அடிப்படைகள், ஆன்ம மனம், ஆன்ம ஒளி அல்லது ஆன்ம உணர்வு
பாடம்: 04 மனித கதிர்ப்பு
மனித கதிர்ப்பு, ஆரோக்கிய கதிர்ப்பு, பிராண கதிர்ப்பு, மானச தத்துவத்தின் மூன்று கதிர்ப்பு (ஆன்மா, கதிர்ப்பு, கதிர்ப்பின் நிறம், கதிர்ப்பு உருவாகும் விதம்)
பாடம்: 05 எண்ணங்களின் இயக்கவியல்
எண்ண இயக்கவியல்,எண்ணத்தின் இயல்பு, தன்மை, சக்தி, எண்ணத்தின் வடிவம், எண்ணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்துதல், எண்ணத்தின் இயக்கவியல் பற்றிய இரகசிய வித்தை கோட்பாடுகள்
பாடம்: 06 தொலைவினுணர்தல், தூரதிருஷ்டி
தூரதிருஷ்டி, தூரசிரவணம், தொலைவினுணர்தல் பற்றிய கோட்பாடுகளும் அவற்றை எப்படி எம்மில் வளர்த்துக்கொள்வது
பாடம்: 07 மனித காந்தம்
மனித காந்தம், பிராண சக்தி, அவற்றின் தன்மைகளும் பயன்பாடும், அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சிகளும் பிரயோக முறைகளும்.
பாடம்: 08 சூட்சும சிகிச்சா முறைகள்
சூட்சும சிகிச்சை, ஆன்ம சிகிச்சை, மானச சிகிச்சை, பிராண சிகிச்சைகளின் கோட்பாடும் பிரயோக முறைகளும்
பாடம்: 09 மனோவசியம் அல்லது மன ஆற்றல் மூலம் மற்றவரை வசப்படுத்துதல்
மனோவசியம், வசீகர காந்தசக்தி, மற்றவர்களின் மானசீக தாக்குதல்களை தடுக்கும் முறைகள், இந்த ஆற்றலை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்,
பாடம்: 10 சூஷ்ம உலகம்
சூஷ்ம உலகம், அதன் அமைப்பு, எமது சூஷ்ம உடல், சூஷ்ம சக்திகளின் உதவி பெறல்
பாடம்: 11 உடலிற்கு அப்பால்
மனித உடலிலிருந்து உயிர்பிரிந்து இறப்பின் பின் நடைபெறுவது என்ன?
பாடம்: 12 ஆன்ம பரிணாமம்
ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி, எப்படி வளர்கிறது, அதன் நோக்கம், அதன் இலக்கு
பாடம்: 13 ஆன்மீகத்தில் காரண காரிய தொடர்பு
வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கான காரண காரியத்தொடர்புகள், வினைகளை விதைத்தலும் அவற்றை அறுத்தலிற்கான கோட்பாட்டு விளக்கம்,
பாடம்: 14 யோகப்பாதையில் இலக்கினை அடைதல்
மூன்று மடிப்புடன் கூடிய முறை (சரியான முறை, திசை, திட்டம், சாதனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான உபதேசங்களும் ஆர்வமூட்டலும்.
ஸத் குரு பாதம் போற்றி!
குருவானவர் எம்மை சரியான வழியில் நடாத்திச் செல்வாராக!
வேண்டுகோள்
தரவிறக்கி கொள்பவர்கள், இதனை பிரதி செய்து தமது தளத்தில் போட விரும்புபவர்கள் தாராளமாக எமது தளத்தின் முகவரியுடன் பதிவித்தல் வரவேற்க்கப்படுகிறது. மற்றும் ஆர்வமுடையோருடன் பகிர்ந்து கொள்ளவும்.
அன்பார்ந்த சுமனன்,
ReplyDeleteவணக்கம்,
சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு
என்ற தலைப்பில் மிகவிரிவாக தங்களது மனதில் உள்ளதை, உள்ளபடியே சொல்லிவிட்டீர்கள்.
தங்களின் கருத்தினை நான் முழுவதும் ஆமோதிக்கின்றேன்.
சித்த வித்தைகளின் சாரத்தை 14 பாடத்திட்டங்களில் சிறப்பாக வெளிவரும்படி திட்டமிட்டுள்ளதைக் கண்டு சந்தோஷம். வாழ்த்துக்கள்.
இப்பணியை தொய்வின்றி செய்து முடிப்பது கடினமான காரியம்தான். சித்தர்களின் ஆசியும், துணையும் உண்டாகட்டும். தாங்கள்
துவங்கிய இந்தப்பணி முழுமை பெற, வருகின்ற பெளர்ணமியன்று எனது குருநாதரிடமும், சித்தர்களிடமும், அருட்சிவமாக
பரம்பொருளிடமும் பிரார்த்தனை செய்கின்றேன்.
(நான்காவது பாடதிட்டத்தில் கதிர்ப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் புலப்படவில்லை. எனவே, கதிர்ப்பு என்பதின் சாரமுடைய தமிழக
வழக்கில் உள்ள தமிழ்ச் சொல்லையும், அதன் ஆங்கில சொல்லையும், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)
உங்களின் இந்த பதிவினையும், மற்றும் சில பதிவுகளையும், உங்களின் வலைப்பதிவின் முகவரியோடு, எனது அருட்சிவம்
வலைப்பதிவில் வெளியிட எண்ணியுள்ளேன்.
ஓங்குக பரம்பொருளின் அருளாட்சி!.
வளர்க சித்த வித்யா விஞ்ஞானம் அருளோடு!.
வாழ்க மன்னுயிர்களெலாம் குறையற!.
அன்புடன்,
பா. முருகையன், வடலூர்.
www.siddharkal.blogspot.com
அருமை
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சேவை
மிகவும் உன்னதமான, மனிதகுலம் மேம்பட அவசியமான தேவை தங்களின் இந்தச்சேவை.
ReplyDeleteஅன்புடன் ஆதி
உன்னதமான நோக்கம்!!!
ReplyDeleteதெளிவான தேடல்!!!
வியக்கத்தக்க பகிர்வு !!! .. ஆனால் எங்கே போயிற்று அந்த P.D.F???
அன்பு நண்பரே அந்த லிங்கை புதிப்பிக்கவும்....
நன்றி
வெகு சிறப்பான முயற்சி..சித்த வித்தையான "நம்மை முழுமையாக அறிதல்" என்ற கலையை அனைவருக்கும் பொதுப்படுத்தி விளக்க விளையும் தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது ஒரே கவலை.. இது தொடர்ந்து பதிவுகளில் வந்து முழுமையடைய வேண்டும் என்பதே.. பாதியில் நின்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இதில் பயிற்சி என்ற இடங்கள் வரும்போது அந்த பயிற்சிக்கான சரியான கால அவகாசங்கள் கொடுத்து அடுத்த பாடங்களுக்குள் மாணவர்களான எங்களை அழைத்துச்சென்றால் சிறப்பாக இருக்கும்..
மேலும் தாங்கள் கூறிய படி இந்த சித்த வித்தையினை கற்க முதல் படியான நாம் தினந்தோறும் செய்ய வேண்டிய உடனடி பயிற்சி / பிரார்த்தனை / வழிபாடு ஏதாவது ஒன்றை தாங்கள் உடனடியாக பதிப்பித்து அது குறித்து சற்று விளக்கமாகவும் ஒரு பதிவிட்டால் மிக சிறப்பாக இருக்கும்.
அது மேலும் இந்த சித்த வித்தையினை நம் மனதில் ஏற்றிக் கொள்ள குரு ஆசி கிடைக்க வழி செய்யும் என்பது எனது நம்பிக்கை.
சித்த வித்தை என்பது பாடங்களைவிட பயிற்சிகளே என்பதும் என் திண்ணமான எண்ணம். அந்த பயிற்சிக்கான காலநிலைகளையும் அவற்றை செய்யும்போது ஏற்படும் சில விளைவுகளையும் அறிகுறிகளையும் பற்றி விளக்கியும் சில பதிவுகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த பதிவுகள் வெறும் அறிமுகப்படுத்துதல் என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டமான பயிற்சி என்ற நிலைக்கு செல்லும்போது மேற்கண்ட விசயங்கள் நிச்சயம் தேவைப்படும் என்பதே என் எண்ணம்..
தொடர்ந்து எழுதுங்கள்.. நாங்கள் அதை சிறப்பாக பயிற்சி செய்து அதன் முக்கிய பலன்களை விரைந்து பெற குருநாதரை தாங்கள் தினமும் பிரார்த்தியுங்கள்.. நாங்களும் பிரார்த்தித்து எங்கள் பயிற்சிகளை தொடர்கின்றோம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.com/
Namaskaram Sumanan Ayya :)
ReplyDeleteThanggalin pathivugalai thavaraamal padithu varum vaasagi naan.Sidtha Vidthai enbathu mathaanggaluku apparpatta oru vishayam.Adiyen oru Sidtha Vidyarthi...:) Ayyavin vilakkanggal Aathi Guruvaana Agasthiya Maharishiyin padalgalin vilakkanggal migaum sirappaga ullathu.Pakkuva pattavarvargalukku ithen suthcahama arthanggal/vilakkangal puriyum/thelivurum :))
Thanggalin in nadpani thodara Guruvai vendi kolgiren :)
P.S pardon me for not writing in Tamil
@ அருட்சிவஞான சித்தர்
ReplyDeleteமிக்க நன்றி! குரு நாதரிடம் பிரார்த்தியுங்கள் நாம் எல்லோரும் இந்தப் பணியை இனிதே முடிப்பதற்கு!
//நான்காவது பாடதிட்டத்தில் கதிர்ப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் புலப்படவில்லை. எனவே, கதிர்ப்பு என்பதின் சாரமுடைய தமிழக
வழக்கில் உள்ள தமிழ்ச் சொல்லையும், அதன் ஆங்கில சொல்லையும், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.//
தங்கள் அவதானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, குறித்த பகுதி வரும் போது அவை சரியாக விளக்கப்படும்.
//உங்களின் இந்த பதிவினையும், மற்றும் சில பதிவுகளையும், உங்களின் வலைப்பதிவின் முகவரியோடு, எனது அருட்சிவம்
வலைப்பதிவில் வெளியிட எண்ணியுள்ளேன்.//
தாராளமாக குறித்த நிபந்தனைகளுடன் வெளியிடுங்கள்! பக்குவமும் ஆர்வமும் உள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே நோக்கம்!
ஸத் குரு பாதம் போற்றி!
@ Sankar Gurusamy
ReplyDelete//எனது ஒரே கவலை.. இது தொடர்ந்து பதிவுகளில் வந்து முழுமையடைய வேண்டும் என்பதே.. பாதியில் நின்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.//
கவலைவேண்டாம் குருநாதர் பாதத்தில் சமர்ப்பிபோம், ஆர்வமுடைய ஒருவரி இருக்கும் வரைகூட எழுதும் பணி தொடர குருநாதர் அனுமதிப்பார் என நம்புகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட மற்றையவிடயங்கள் அவதானத்தில் கொள்ளப்பட்டுள்ளது!
தங்களது தொடர்ச்சியான அன்பான ஆதரவிற்கு நன்றி!
@ பாவா ஷரீப், Nathimoolam ,இந்திரஜித்,Geetha
ReplyDeleteமிக்க நன்றிகள்!
Dear Sir,
ReplyDeleteசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு
இந்தப் பாடத்தினை மின்னூலாக PDF தரவிறக்கி சேமித்துக் கொள்ள இங்கே அழுத்தவும்
We unable to download the pdf file.
Dear Sir,
ReplyDeleteசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு
இந்தப் பாடத்தினை மின்னூலாக PDF தரவிறக்கி சேமித்துக் கொள்ள இங்கே அழுத்தவும்
We unable to download the pdf file sir,
Please check and update the PDF link, as its not working.
ReplyDeleteநண்பர்களே மன்னிக்க வேண்டுகிறேன், இந்தப்பாடங்கள் எழுதப்பட்டவுடன் பதிப்பிக்கப்படுவதால் சில தட்டச்சுப் பிழைகள் ஏற்படுகினேறன, அப்படியே ஆகாமால் நேரங்கிடைக்கும் போது திருத்தங்களை மேற்கொண்டு இந்த தொடரின் இறுதியில் செம்மையாக PDF ஆக இணைக்கலாம் என முடிவெடுத்துள்ளேண்,
ReplyDeleteஆதலால் சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேண்.
அன்புடன்
dear sir,
ReplyDeletepls send telepathy tamil pdf
harisai79@gmail.com
sir pls give us sitha vithya pdf files.
ReplyDeleteநன்றி சீக்கிரம் pdf உருவாக்கி எங்களுக்கு தாருங்கள் எதிர்ப்பார்பில் காத்துகொண்டிருக்கிறோம் ..
ReplyDeletemikka nanri, sitha vithya pdf file tharungal
ReplyDeletemikka nanri, sitha vithya pdf file tharungal
ReplyDeleteசித்த வித்யா பாடங்களைPdf
ReplyDeleteஎன் மின்னஞ்சலுக்கு அனுப்பிராசம் வைக்கல் வேண்டுகிறேன்.
Yugambaranathan@Gmail.com
அட்டகாசமாக உள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!!! s_rajsuja@yahoo.co.in
ReplyDeleteஅட்டகாசமாக உள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!!! s_rajsuja@yahoo.co.in
ReplyDeletei am durai how could i down load this subject my email id chrissekaran@gmail.com please reply me
ReplyDeletei want to down load the subject please do me favour
ReplyDelete