X-Press pearl மூழ்கி விட்டது; கடற் சூழல் பாதிப்பினைப் பற்றிப் பேசுகிறோம். இயற்கை தன்னைத் தானே சமப்படுத்திக் கொள்ளும். உண்மையான பிரச்சனை கடலை நம்பி வாழும் மனிதனுக்கு! மீனும், கடலுணவும் என்று வாய்க்கு ருசியாகச் உடலை வளர்க்கச் சாப்பிட்டவை எல்லாம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறும் என்பதுதான்!
சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படை மனிதன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
கடலை மாசுபடுத்தினால் அது நஞ்சினை உணவாகத் தரும்! மண்ணை மாசுபடுத்தினால் அது நஞ்சினை உணவாகத் தரும்! இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின் விதி சமநிலை!
இலங்கையின் மீன்பிடித்துறையும் உணவுத்துறையும் இந்த அனர்த்தத்தினால் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.
தற்போது 90 Km நீளமான கரையோரம் மீன்பிடிக்க வேண்டாம் என உத்தரவு போடப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பகுதிக்குள் பாதிப்பு உள்ளது என்று அரசு வரையறுக்கிறது. ஆனால் கடலின் நீரோட்டத்தில் இது பல இடங்களுக்குப் பரவலாம். இந்தியாவின் தென்கரை கூட பாதிக்கப்படலாம். முறையான ஆய்வுகள் தேவை.
இது நேரடியாக 4300 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்துள்ளது.
இந்த மூழ்கிய கப்பலில் கிட்டத்தட்ட 78 தொன் நுண் பிளாத்திக்கு - nurdles - இருப்பதாக ஆரம்பத் தகவல்கள் கூறுகிறது.
இவை கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவு என்ற மயக்கத்தைக் கொடுக்கக்கூடியவை. இதன் மூலம் மீன்களின் வயிற்றிற்குள் சென்று பின்பு மனிதனின் உணவில் கலக்கக்கூடிய ஆபத்துள்ளவை.
இந்த ஆபத்து கடலுணவை பிரதானமாகக் கொண்டிருக்கும் இலங்கையரின் ஆரோக்கியத்திற்கு சவாலான ஒன்று!
இந்த நுண்பிளாத்திக்கு ஆபத்தினை இந்தத் தளம் விபரிக்கிறது: https://www.nurdlehunt.org.uk/
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.