கடந்த ஒருவாரமாக யோகம் என்பதன் ஆழமான தத்துவார்த்தங்களை எழுதி வந்தோம். வெறுமனே உடலை வளைக்கும் ஆசனங்கள் யோகத்தின் இறுதி இலக்கு இல்லை என்பதை புரிவதற்கும் அதற்குள் ஆழமான அக அனுபவங்களைப் பெறக்கூடிய முத்துக்கள் இருக்கிறது என்பதையும் விளக்குவதே நோக்கம்.
அதில் பல சித்தர்களின் யோக முறை பற்றிய அறிமுகம் தந்திருந்தோம்! ஆழமாக உரையாட விரும்புபவர்கள் எமது வகுப்புகளில் இணைந்துகொள்ளலாம்!
இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை
சைவமும் யோகமும்
****************************
சைவமும் யோகமும்
யோகீஸ்வரன் – யோகிகளின் தலைவன் சிவபெருமான்.
பதஞ்சலி கூறும் யோகம் வெறுமனே மனம் என்ற அந்தக்கரணங்களில் சித்தத்தின் விருத்தியை நிரோதம் செய்யும் யோகம். இப்படி சித்த விருத்தியை நிரோதம்செய்த அந்தக்கரணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதற்குரிய பதிலை சைவசமயத்தின் யோக பாதம் கூறும்.
பதஞ்சலி இயம நியம, ஆசன, பிராணாயாம, பிரத்தியாகார, தாரணை சமாதியால் சித்தம் விருத்தி அடங்கும் முறையைக் கூறும்!
நாத சம்பிரதாய குண்டலினி யோகம் என்பது 7 ஆதாரங்களுடன் முடிவுறுகிறது.
சைவ ஆகம யோகம் இதற்கு மேற்பட்ட சிவயோகம் எனும் நிலையைப் பற்றிப் பேசுகிறது.
இது பதினாறு அங்கங்கள் உடைய சோடசகலா பிரசாத கலை யோகம் எனப்படும். சூக்ஷ்ம உடலை வலுப்படுத்தி சுழுமுனை நாடியை வசப்படுத்திய யோகி சிவயோகம் புரியும் தகுதி பெறுகிறான்.
சைவ சமயம் கூறும் யோகப்படிகள்
1) அகாரம்
2) உகாரம்
3) மகாரம் –
4) விந்து -
5) அர்த்த சந்திரன்
6) நிரோதினி
7) நாதம்
நாதாந்தம்
9) சக்தி
10) வியாபினி
11) வ்யோம ரூபிணி
12) அநந்தை
13) அநாதை
14) அநாசிருகை
15) சமனை
16) உன்மனை
இன்றைய சைவத்தின் நிலை யோக பாதத்தினைப் பற்றி கற்பிப்பாரும் இல்லை, சாதகம் செய்வாரும் இல்லை! வெறுமனே கிரியை மார்க்கத்தில் சிக்கிக்கொண்டு சடங்குகள் அதிகமுள்ள ஒன்றாக இருப்பது கவலைக்குரியது!
ஆகமங்களில் யோக பாதத்தினை தொகுத்து பொருள்காணும் பணியை செய்யலாம் என்பது இந்த உலக யோக தினத்தில் உதித்த எண்ணம்!
அதற்கு மகா யோகீஸ்வரரான சிவபரம்பொருளின் ஆசி வேண்டி பிரார்த்திக்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.