இதுவரை நாம் கற்றதன் சுருக்கம்:
1) ஹதயோக பிரதீபிகை என்றால் ஹதயோகத்தின் ஒளிவிளக்கு என்று அர்த்தம்.
2) இது ஆதி நாதர் எனும் சிவபெருமானால் உமைக்கு உபதேசிக்க, மீனாக இருந்த மச்சேந்த்ர நாதர் வழியாக கோரக்க நாதருக்கு உபதேசித்து அதை ஸ்வாத்மாராம நாத யோகீந்திரர் தொகுத்து ஹதயோகத்தின் ஒளிவிளக்கு ஆக்கினார்.
3) ஹதயோகம் இராஜயோகத்தினை நேரடியாக பயிற்சிக்க முடியாதவர்களுக்குரிய வழி; ஹதயோகத்தால் உடல், பிராணனை வலுப்படுத்தி பின்னர் மனதினூடாக யோகத்தின் இலக்கினை அடைவது ஹதயோகத்தின் குறிக்கோள்.
4) ஹதயோகத்தின் சித்தி இராஜயோகத்திற்கு சாதகனை உயர்த்தும்.
5) ஹதயோகத்தில் சித்தி பெற்ற 35 நாத யோகிகள் இந்தப்பிரபஞ்சத்தில் காலத்தை வென்று ஒளி நிலையில் சாதகம் செய்பவர்களுக்குரிய சூக்ஷ்ம வழிகாட்டலை வழங்கி வருகிறார்கள். இவர்களை ஹதயோக சாதகம் செய்யும் மாணவர்கள் நினைத்துப் பயிற்சிப்பது துரித சித்தியைத் தரும்.
6) ஹதயோகத்தின் மூலம் சித்தியை வேண்டுபவன் தனது பயிற்சியினை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். சித்தியடையுமுன் பரகசியப்படுத்துபவன் ஹதயோகத்தில் சித்தியடைய முடியாது.
7) ஒரு சாதகன் தனது சாதனைக்கு உகந்த இடமாக சமூகத்தால் தொல்லை வராத, உணவிற்கு அதிக அலைச்சல் இல்லாத, உடலிற்கும் மனதிற்கும் துன்பம் தராத இடத்தினை தனது யோக சாதனைக்குரிய இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
யோக சாதனைக்குரிய அறையில் இலக்கணம் அறிந்தோம்.
9) யோகத்தினை கெடுக்கும் காரணிகள் எவை என்பது பற்றி அறிந்தோம்.
10) யோகத்தில் சித்தி தரும் காரணிகள் எவை என்று அறிந்தோம்.
11) இயமம் 10 எவை?
12) நியமம் 10 எவை?
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.