தற்போதைய உலக நிலையில் எமது நண்பர்கள், உறவினர்கள் திடீரென சுகயீனம் அடைந்தவுடன் பத்திரிகையும், ஊடகங்களும் மனதிற்குக் கலக்கத்தை விதைத்து நிம்மதியினை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.
ஆனால் மனம் ஒரு சக்தி! அதை எப்படிப் பாவித்தால் எப்படிப் பயன் பெறமுடியும் என்று அறிந்தவன் பயனைப் பெறாமலும் இல்லை!
சுவாமி விவேகானந்தர் தனது சகோதரத்துறவிக்கு கூறிய உபதேசம் வருமாறு; இது நமக்கும் தற்போது உதவக்கூடியது; செலவு எதுவும் இல்லை! நம்பிக்கையும் சிரத்தையும் மட்டுமே வேண்டுவன!
"இப்போது உனக்கு ஆச்சர்யமானதொரு விஷயம் சொல்லப்போகிறேன். உங்களுள் யாராவது நோயுற்றிருந்தால் அவரோ, மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனதில் நினைக்கவேண்டும். அவர் நலமாக உள்ளார் என்பதை திட பாவனையின் மூலம் உறுதியாக எண்ண வேண்டும். இதன் மூலம் அவர் விரைவாகக் குணமடைவார். இதை அவருக்குத் தெரியாமலே நீ செய்யலாம். உங்களுக்கிடையே ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் சரி அவர் குணமடைவார்; இதை நினைவில் வைத்துக்கொள்!
இப்படி தனது ஆன்ம சகோதரர் சுவாமி சாரதானந்தரிற்கு சுவாமி விவேகானந்தர் எழுதுகிறார். இன்றைய காலத்திற்கு உகந்த உபதேசம் இது.
உங்கள் அன்புக்குரிய நண்பர்கள், உறவினர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தினசரி அன்புடன் உங்கள் மனச்சக்தியை அன்பு, கருணை நிறைத்து மனதில் செலுத்தி வாருங்கள்.
இறை நம்பிக்கையுடையவராக இருந்தால் உங்கள் இறை வழிபாட்டிற்கு பிறகு சிறிது நேரம் அமர்ந்து இதைச் செய்யலாம்.
ரிக் வேதத்தில் வரும் அக்ஷீப்யாம் தே ஸூக்தம் இதற்கு நல்லதொரு மந்திரத் தொகுப்பு; அல்லது காய்த்ரி, ம்ருத்யுஞ்ஜெய, தன்வந்திரி மந்திரங்கள் பயன்படுத்தலாம்!
இதைக்காணும் அனைவரும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க எமது பிரார்த்தனைகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.