தொல்காப்பியர் பொருளதிகாரம் சூத்திரம் 571 இல் அறிவு, மனம், புலன்கள் ஆகியவற்றின் ஒழுங்கு தந்திருக்கிறார். ஐம்புலன்களில் உயிர் பரிணாமம் பெறும் போது தோல், நா, நாசி, கண், செவி என்று ஒன்றை விட ஒன்று உயர்ந்த அறிவை, புரிதலைத் தந்து இறுதியாக மனம் என்பதன் மூலம் பெறும் அறிவைப் பற்றிக் கூறுகிறார்.
தொல்காப்பியர் அறிவு எப்படி உருவாகிறது என்பது பற்றி ஒரு சூத்திரம் தந்துள்ளார். (பொருளதிகாரம், சூத்திரம் 571)
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
தோலினால் உணர்ந்து அறிவது ஓரறிவு
தோலினாலும், நாவினாலும் அறிவது ஈரறிவு
தோல்+ நா+ நாசி மூன்றினாலும் அறிவது மூவறிவு
தோல்+ நா+ நாசி+கண் - நாலறிவு
தோல்+ நா+ நாசி+கண்+செவி = ஐந்தறிவு
தோல்+ நா+ நாசி+கண்+செவி+ மனம் = ஆறறிவு
இதை ஸ்ரீ கிருஷ்ணன் பகவத்கீதையில் மூன்றாவது அத்தியாயம் கர்ம யோகத்தில் அர்ஜுனனுடன் சம்பாஷிக்கிறார்.
குந்தியின் மகனே,
ஆசை உண்மையறிவை மறைக்கிறது;
ஆசையின் இருப்பிடம் ஐந்து புலன்கள், மனம், அவற்றால் நாம் அடைய சங்கல்பிப்பவை!
முதலில் புலன்களை வசப்படுத்த வேண்டும்!
இதன் மூலம் ஆசையை வெல்ல வேண்டும்!
புலன்களை விட மனம் வலிமையுடையது!
மனதை விட புத்தி ஆற்றல் வாய்ந்தது!
புத்தியை விட ஆன்மா ஆற்றல் வாய்ந்தது!
இப்படி புலன், மனம், புத்தி, ஆன்மா என்ற வகையில் ஒன்றை ஒன்றால் வென்று ஆற்றல் பெறவேண்டும்.
தொல்காப்பியர் சொன்ன சூத்திரத்திற்கு ஆன்மா என்ற ஒன்றையும் சேர்த்து எப்படி ஒன்றால் இன்னொன்றை வென்று உயர் நிலை பெறுவது என்ற புரிதலை நாம் பெறலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.