கிருஷ்ணன் கீதையில் யோகத்திற்கு இரண்டு வரைவிலக்கணங்கள் தருகிறார்.
"யோக கர்மஸு கௌசலம்"
இரண்டாவது அத்தியாயம் - சாங்கிய யோகம், 50 ஸ்லோகம், கடைசி வரி.
கௌசலம் - என்றால் சரியான மனோபாவத்துடன் - with correct attitude
இந்த வரியின் அர்த்தம்,
கர்மத்தினை/செயலினை சரியான மனோபாவத்துடன் செய்பவன் யோக நிலையினை அடைபவனாகிறான்.
இந்த முழு ஸ்லோகத்தினதும் பொருள்: புத்தி விழித்தெழப்பெற்றவனுக்கு புண்ணியபாவங்கள் இரண்டும் அற்றுப்போகிறது. இந்த யோக நிலையை அடைவாய் அர்ஜுனா, புத்தி விழிப்புற கர்மங்களை சரியான மனப்பாங்குடன் செய்ய வேண்டும் என்கிறார் யோகீஸ்வரர்!
சரியான மனப்பாங்குடன் கர்மத்தினை செய்யும்போது மனம் பெறும் தகுதியால் யோகத்தின் இறுதி நிலையான -ஸ்ரீ கிருஷ்ணரின் இரண்டாவது வரைவிலக்கணம் வருகிறது.
ஸமத்வம் யோக உச்யதே
யோகம் என்பது சமநிலை அடைதல்.
மனம், உணர்ச்சிகள், பிராணன், உடல் மேலும் உடல் ஆக்கப்பட்டிருக்கும் அனைத்து சூக்ஷ்ம தத்துவங்களிலும் சமநிலை அடைதல்; இந்தச் சமநிலையுடன் கர்மத்தைச் செய்தல் "யோக கர்மஸு கௌசலம்" எனப்படும்.
இந்த இரண்டு வரிகளும் யோக சாதகர்களுக்கு ஒளிவிளக்குப் போன்றது!
பலர் யோகம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு தகுந்த மனப்பாங்கினை வளர்ப்பதில்லை! மனப்பாங்கு மாறாமல் எவ்வளவு பயிற்சி செய்தாலும் பலன் கிட்டப்போவதில்லை!
அதுபோல் எல்லாவற்றிலும் மிதமாக - சமமாக இருப்பதும் யோகத்தின் அவசியமான பண்பு!
இந்த இரண்டு வரைவிலக்கணங்களும் ஒரு யோக சாதகன்,
1) தனது ஒவ்வொரு எண்ணம், செயல் இவற்றில் சரியான மனப்பாங்கும்
2) கர்மம் ஆற்றும் போது உடல், மன, பிராண, உணர்ச்சிகளை சமநிலையில் வைத்திருப்பதும் அவசியம் என்பது பெறப்படுகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.