ஸ்ரீ காகபுஜண்டர் சோடச யோகக் குறள்
தரப்பட்டுள்ள பொருள் விளக்கம் ஏற்கனவே சித்தர் மார்க்கத்தில் இருந்து சாதனை புரிபவர்களது புரிதலுக்கான எளிய விருத்தியுரை. எளிய முழுமையான விளக்கவுரை விரைவில் வெளியிடுவோம்.
1:
சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு
பொருள்: பேரொளியான பூரணத்தை துணைகொண்டு சிவராஜா யோகத்தில் இருந்து பராபரம் என்றார் பூரணத்தை நாடு!
2:
அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.
பொருள்; பராபரத்தை அறிய சிவராஜா யோகம் செய்ய வேண்டும் என்று முதல் குறளில் சொன்னோம், அதன் முதல்படி அண்டத்தின் மூலமான நாதமும் விந்துவும் உடலிற்கு ரவி மதி எனும் சூரிய சந்திரனாய் எப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இயக்குகிறது என்று அறிய வேண்டும்.
3:
வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.
பொருள்: அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள மதி ரவி அறியவேண்டும் என்று முன்னர் சொன்னோம், பிண்டத்தில் மதி ரவி நிற்கும் இடம் வலது இடது மூச்சு என்று அறிந்து அதை நேர்படுத்தி விரயமாகும் பிராணனை சேமித்து சமப்படுத்தினால் அது வீடு என்ற பேற்றை தரும்.
4:
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.
பொருள்: தந்திர யோகத்தில் பல்வேறு யோகங்கள் பயிற்சிப்பதற்கு உண்டென்றும் அது அறுபத்துநான்கு வகைப்படும் என்றும் கூறுவர், அவற்றை எல்லாம் பயிலவேண்டும் என மாயையில் விழுந்து விடாமல் குரு உபதேசித்த சிவராஜா யோகத்தில் நிலைத்து நில்.
5:
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு
பொருள்: மாயையினால் சூழ்ந்து மனிதன் பிறவிக்கு காரணமான மனத்தை பண்படுத்தி உலகு மாயை என்பதனை மனதின் உதவி கொண்டு விசாரத்தால் அறிந்து எல்லாவற்றிற்கும் மூலமான இறைவனின் பாதத்தை நம்பி உன் சாதனையினை தொடர்வாயாக.
6:
சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.
பொருள்: பல்வேறு பிரளயம், யுகம் கண்ட பதினெண் சித்தர் என்ற கணக்கிற்கும் முன்னராக என்றும் இருக்கும் புசுண்டனாகிய நான் அத்தன் என்ற சிவனிற்கு நிகராக அருள் புரியக்கூடியவன் என்று அறி!
மிகுதி இந்த இணைப்பில் பார்க்கவும்: https://yogicpsychology-research.blogspot.com/.../blog...
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.