பகவத்கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் 42 வது சுலோகத்தில் கிருஷ்ணன், யோகி systematic ஆக பெற வேண்டிய அறிவினைப் பற்றியும் அதன் hierarchical order பற்றியும் குறிப்புத் தந்துள்ளார்.
ஒரு யோக சாதகன் முதலில் தனது கண், காது, நாக்கு, செவி, தோல் ஆகிய இந்த ஐந்தும் எப்படிச் செயற்பட்டு தனது மனதிற்கு என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்ற அறிவினைப் பெறவேண்டும்.
யோகம் பயில விரும்புபவனின் முதல் அறிவு தனது புலன்கள் எப்படிச் செயற்படுகிறது என்பது பற்றிய அறிவினைப் பெறவேண்டும். புலன் பற்றிய அறிவு பெற்றபின்னர் அதை விட உயர்ந்த மனம் பற்றிய அறிவினைப் பெறவேண்டும்.
இப்படி புலன்களுக்கும், மனதிற்கும் இருக்கும் தொடர்பினை அறிந்தால் மனதின் மூலம் புலன்களை வெல்ல முடியும்.
பிறகு மனதின் பிடியிலிருந்து மீண்டு வர அதை விட உயரிய புத்தி - விவேகத்தினைப் பற்றி அறிய வேண்டும். புத்தி மூலம் மனதை வெல்ல வேண்டும்.
பிறகு புத்தி எப்படி செயற்படுகிறது என்பதை உணர்ந்து அதை ஆன்மாவின் துணைகொண்டு வெல்ல வேண்டும்.
பிறகு ஆன்மாவினை இறைவன் என்ற பேரான்மாவின் துணைகொண்டு வெல்ல வேண்டும்.
இப்படி யோகி என்பவன்,
1. புலன்கள்
2. மனம்
3. புத்தி
4. ஆன்மா
5. இறைவன்
என்ற ஐந்து தளத்தில் தனது புரிதலை வளர்த்து சாதகம் செய்ய வேண்டும். இதுவே பகவத்கீதை காட்டும் யோகத்தின் சாராம்சம்.
புரிதலை வளர்ப்பது என்பது யாரோ எழுதிய புத்தகங்களை வாசித்துவிட்டு கிளிப்பிள்ளை போல் கூறுவதல்ல! தனக்குள் புலன்கள், மனம், அறிவு, ஆன்மா, இறைசக்தி எப்படி செயற்படுகிறது என்ற பிரத்தியட்ச அனுபவத்தை யோகசாதனையால் பெறுவது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.