ஹதயோகம் பயிற்சிக்கிறோம் என்பவர்கள் பொதுவாக ஆசனம், பிராணாயாமம் செய்கிறோம் என்பதுதான் அவர்கள் செய்யும் பயிற்சியாக இருக்கும்!
ஆனால் ஹதயோக முறைகளை உருவாக்கிய நாத சம்பிரதாய யோகிகள் ஹத என்பது உடலில் இயங்கும் இடகலை, பிங்கலை நாடிகளினை சமப்படுத்தி அதன் மூலம் மனதினை வசப்படுத்தி இராஜயோகத்திற்கும் செல்லும் வழியினைத்தான் வகுத்துள்ளார்கள் என்பது புரியப்படுவதில்லை!
முற்கால மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையின் இலட்சியம் யோகம் புரிந்து இறையை அடைவது எனும்போது யோகத்தின் நோக்கம் இறைவனை அடைவதாக இருந்தது!
இக்கால மக்கள் உடல், மனம் என்பது என்னவென்று தெரியாததால் அவற்றைக் கெடுத்து ஆரோக்கியம் இல்லாமல் போவதால் யோகம் என்பது ஏதோ ஒரு மருத்துவமுறை என்றவாறு ஆகிவிட்டது!
ஹதயோகத்தின் மூலவடிவத்தில் கற்பதற்கு இலங்கையில் இருக்கும் யோகாசன ஆசிரியர்கள் சிலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க "ஹதயோகத்திறவுகோல்" வகுப்பு கடந்த வைகாசிப் பௌர்ணமி அன்று ஆரம்பிக்கப்பட்டது! பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
தற்போதைய வகுப்பில் ஹதயோகப் பிரதீபிகையின் ஒவ்வொரு சுலோகமும் அதன் மறையியல் - esoteric அர்த்தம் என்ன என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
நேற்றைய வகுப்பில் சிருஷ்டியின் மாணவரும், இலங்கையில் பலருக்கும் யோக ஆஸன ஆசிரியராக விளங்கும் ராஜு Raju Yoga அவர்கள் எனது விண்ணப்பத்தின்படி கீழ்வரும் ஆசனங்களின் செய்முறை விளக்கம் தந்தார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!
1) சுவஸ்திகாஸனம்
2) கோமுகாசனம்
3) வீராசனம் - மூன்று வித்தியாசங்கள்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.