ஒரு யோக மார்க்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் யோக ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லையென்றாலோ,
யோகப் பயிற்சிக்குரிய விதிகளைப் பின்பற்றவில்லை என்றாலோ,
யோகம் பற்றிய சரியான பார்வை இல்லையென்றாலோ,
தினசரி இவற்றைக் கூறுகின்ற நூற்களை குருமுகமாய் படிக்கவில்லையென்றாலோ
அவன் யோகத்தில் சித்தி பெறமுடியாது!
ஒருவன் ஆரோக்கியத்தினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் உறுதியாகக் கொண்டிருக்கலாம்!
ஆனால் ஆரோக்கியத்தைத் தரும் தினசரி ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை என்றாலோ,
ஆரோக்கிய விதிகளைத் தெளிவாக அறிந்துகொள்ளவில்லை என்றாலோ,
ஆரோக்கியம் என்றால் என்ன என்பது பற்றி சரியான வரைவிலக்கணத்தை புரிந்துகொள்ளவில்லை என்றாலோ,
ஆரோக்கியம் பற்றிய அறிவை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலோ,
அவனால் ஆரோக்கியத்தினைப் பெறமுடியாது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.