தொல்காப்பியர் அறிவு எப்படி உருவாகிறது என்பது பற்றி ஒரு சூத்திரம் தந்துள்ளார். (பொருளதிகாரம், சூத்திரம் 571)
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
தோலினால் உணர்ந்து அறிவது ஓரறிவு
தோலினாலும், நாவினாலும் அறிவது ஈரறிவு
தோல்+ நா+ நாசி மூன்றினாலும் அறிவது மூவறிவு
தோல்+ நா+ நாசி+கண் - நாலறிவு
தோல்+ நா+ நாசி+கண்+செவி = ஐந்தறிவு
தோல்+ நா+ நாசி+கண்+செவி+ மனம் = ஆறறிவு
உயிர் படிப்படியாக எப்படி புலன்களின் அறிவினைப் பெறுகிறது என்ற படிமுறையை உணர்த்துகிறார்.
மனதினைப் பெற்றதாலேயே மனிதன்! மனிதன் புலன் வழி அறிவினைப் பெறுவதுடன் மனதைப் பற்றி அறிந்து அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படை மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரத்தால் புரிந்துகொள்ளலாம்.
மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திரத்தின்படி தான் பெற்ற உயர்ந்த கருவியாகிய மனதினை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாமல் புலன்களால் காண்பவற்றை மாத்திரம் உண்மை என்று நம்புபவன் அறிவில் குறைந்தவன் என்பது பெறப்படுகிறது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.