குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 28, 2011

எனது மனத்தளம் # 01

இன்றைய பதிவு இதுவரை கடந்த நான்கு மாதங்களில், இந்த வலைப்பூவில் எழுதத்தொடக்கியது முதல் நான் பெற்ற அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஒழுங்கமைவான பாதையுடன் செல்வதற்கான‌ எனது மனத்தளத்தில் உதித்த எண்ணங்களை பகிர்வதற்கானதாகும்.

வலைப்பூவில் எழுதுவது என்பது எனக்கு புதிய விடயம் (நான்கு மாதங்களுக்கு முன்னர்) இணையம் எனும் பெரும் வனத்தினுள், பாதை எதுவும் தெரியாமல், முகம் தெரியாத பலருடன் வாத பிரதிவாதங்கள், கருத்து தாக்குதல்கள், இணைய அரசியல், முகமூடி இராஜதந்திரங்கள் என பல  மாய விளையாட்டு உலகினுள் நானும் கருத்து பகிர்வுக்கு என வந்தேன், அல்லது வரவைக்கப்பட்டேன் எனலாம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வது என் இயல்பு. அதன்படி எழுத்தத் தொடங்கினேன். என்ன எழுதுவது என எண்ணியபோது எனது அறிவுத்தளத்தில் இருப்பவை இரு விடயங்கள்

  1. சிறுவயதிலிருந்து பாரம்பரியமாக‌ அகஸ்தியமகரிஷியினை ஆதிகுருவாக வணங்குவதாலும்  பின்பு 16 வயதில் குரு கிடைக்கப்பட்டதால் சித்தர்களது யோக, ஞான, ஆன்ம வித்தைகள் குருகுலவாசமாக முறையாக கற்க்கும் சந்தர்ப்பமும் குருவருளால் கிடைக்கப்பெற்றேன்.
  2. பின்னர் பல்கலைக்கழக படிப்பும் தொழிலும் என்னை சூழலியல் விஞ்ஞானத்தில் இட்டுச்சென்றது, அதன் மூலம் விஞ்ஞானப்பார்வையினையும் தொழில் ரீதியாக சூழலியல் விஞ்ஞான ஆய்வாளனாகவும், ஆலோசகனாகவும் இட்டுச்சென்றது.
எனது குருநாதர் எனக்கு எதுவித கட்டுப்பாடுகளும் வரைவிலக்கணங்களோ கூறியதில்லை, எனது விருப்பப்படியே கற்றுக்கொள்ளும் உரிமையினை எனக்கு தந்திருந்தார், ஆதலால் நான் எந்த வரையரைக்குள்ளோ, வரைவிலக்கணங்களுக்குள்ளே என்னை அடைத்துக்கொண்டு கற்க்கவில்லை.  ஆகவே எனது பார்வை சித்தவித்தையில் யோகசாத்திரம், தாந்திரீகம், தாவோயிசம், பௌத்த தாந்திரீகம், திபெத்திய யோகம், சித்தாஸ்ரமம், மேற்கத்தைய‌ ரோசிகிரேசியன், மார்டினிஸம் போன்ற பல சம்பிரதாயங்களில் உள்ள வித்தைக‌ள் கற்கும் ஆர்வத்தினையும் சந்தர்ப்பத்தினையும்  ஸ்ரீ வித்தையின் தாந்திரீக முறையும் தகுந்த குருமாரிடம் குருமுகமாக கற்பதற்கான அடித்தளத்தினை ஆதிகுரு அகஸ்திய மகரிஷி எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.  

முதல் தளத்தில் இருந்து நான் பெற்ற அறிவு சித்த வித்யா (சித்த வித்யா = ஆழ்மனமாகிய சித்தத்தினூடாக பெறும் அறிவு), இரண்டாவது தளம் எனக்கு தந்த அறிவு விஞ்ஞானம், இரண்டையும் இணைந்து சித்தர்களது வித்தைகளது புரிதலையே சித்த வித்யா விஞ்ஞானம் என எனது வலைப்பூவிற்கு பெயரிட்டேன்.

சித்த வித்யா விஞ்ஞானம் என்ற பெயரில் எனது வலைப்பதிவு தொடங்கியவுடன் வலையுலகத்தில் குறிப்பாக முகப்பு புத்தக குழுமங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தது. பலர் பாராட்டினர், சிலர் காரசாரமாக வாதிட்டனர்,

இன்னும் சிலர் நான் ஏதோ யோகி எனக் காட்டிக்கொள்வதற்காக பதிவு எழுதுவதாக விமர்சித்தனர்.

திரு.சங்கர் குருசாமி மற்றும் சில நண்பர்கள் உற்சாகமூட்டினர்,

சில முகங்கள் அற்ற எலிகள் அனோனிமஸ் கமண்ட் திறந்து வைத்திருந்த வேளையில் சகிக்க முடியாத வார்த்தைப்பிரயோகத்துடன் ஒருவரின் பொறுமையினை சோதிக்கும் அளவிற்கு அதிகீழ்தரமாக கொமண்ட் செய்தார்கள்.

இப்படி கடந்த நான்கு மாதங்களில் எனது மனத்தளத்தில் எதிர்ப்பு, வாதபிரதிவாதங்கள், தாக்குதல்கள், தூற்றல்கள் அத்துடன் போற்றல், பாராட்டு, உற்சாகம் என்ற இருமைகள் கலந்த பலவிதமான எண்ணச் சுழல்களூடாக பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஒரு கட்டத்தில் ஏன் இந்த தேவையில்லாத வேலை? எனது அலுவலக வேலைகள் செய்வதற்கும், குடும்ப கடமைகளுக்கு மட்டுமே நேரம் சரியாக உள்ளபோது வலைப்பூவில் எழுதத்தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? என்ற உள்மனப்போராட்டம் ஒவ்வொரு நாளும் எழவே செய்தது, ஆனால் என்னையும் மீறி இந்த பதிவுகள் நான் கருவியாக உபயோகிக்கப்பட்டு எழுதப்படுவதாகவே உணர்ந்தேன்.

அடுத்து இதில் நான் எழுதும் விடயங்களால் பலரும் பயன் பெறுவதாகவும் சித்த வித்தை கற்க ஆர்வமுள்ளதாகவும் அதற்கு என்ன செய்யவேண்டும் எனவும் பலர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். முக‌ப்பு புத்த‌க‌த்தில் உரையாடின‌ர், பின்னூட்ட‌மிட்ட‌ன‌ர். 

இவற்றுக்கெல்லாம் பதிலாக இனிவரும் நாட்களில் புத்தாண்டிலிருந்து சித்தவித்யா விஞ்ஞானம் கற்க விரும்புபவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ஒழுங்கு முறையாக‌ பதிவுகள் வர குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார். அதன் விபரம் நாளை பதியப்படும்.

பொதுவாக‌ த‌மிழில் யோக‌வித்தை, இர‌க‌சிய‌ வித்தைக‌ள் முறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளாக‌ ப‌டிப்ப‌டியாக‌ க‌ற்றுக்கொள்ளும் வ‌கையில் இல்லை. ஆக‌வே சில‌ மூல‌ நூல்க‌ளின் ஆதார‌த்துட‌ன் அவ‌ற்றை த‌ழுவி நான் க‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளுட‌ன் என‌து மொழி ந‌டையில் குருநாதர் ஆசியுடன் பாடங்களாக தொகுத்துத் த‌ர‌வுள்ளேன்.  அவ‌ற்றை ப‌டித்து ப‌ய‌ன்பெறுப‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன்பெற‌லாம், த‌க‌வ‌லுக்காக‌ ப‌டித்து ம‌கிழ்பவ‌ர்க‌ளும் க‌ற்க‌லாம். அவ‌ற்றை ப‌திவ‌து ம‌ட்டுமே என‌து க‌ட‌மை, ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து முற்றிலும் உங்க‌ளைச் சார்ந்தது.

இந்த தளத்தில் நான் எழுதுவதில் எனது நோக்கம் (குருநாதரது நோக்கம் என்னவென்று இன்னுமும் நானறியேன்!) எழுதுவதற்கான எனது விருப்பமும் அதில் நான் அடையும் மனமகிழ்ச்சியுமே ஆகும், ஒவ்வொரு பதிவும் எழுதும் போதும் குருநாதருடன் மானசீகமாக பேச முடிகிறது. நான் முன்பு அறியாத சில விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதனை நான் எனது உள்மனத்துடனும் குருநாதருடனும் தொடர்பு கொள்ளும் பயிற்சியாகவே செய்கிறேன். இதன் மூலம் நான் அறிவதுடன் மற்றவர்களும் அதனை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பதியப்படுகிறது, இந்த அவசரமான வியாபார உலகத்தில் சிறிய அளவு நேரம் எனது மனதை இந்த விடயங்களில் ஒன்றி வைத்திருக்க முடிகிறது. அப்படி பெறும் யாம் பெற்ற இன்பத்தினை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் வலையுலகம் உதவி செய்கிறது. எப்போது குருநாதர் எழுதுவதை நிறுத்தச் சொல்கிறாரோ அன்று இந்தப்பதிவுகள் நின்றுவிடும்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!

அடுத்த பதிவில் யோக வித்தை பாடங்களது அறிமுகம் இடம்பெறும்!

10 comments:

  1. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
    ஆதி

    ReplyDelete
  2. தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள். தேடுதல் உள்ளவருக்கு இது கிடைக்கும். ஆவணப்படுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

    தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தங்கள் வலைத்தளத்தில் எழுதும் விஷயங்கள் எல்லோராலும் புரிந்துகொள்ளக் கூடிய விஷயங்கள் அல்ல. இப்படிப்பட்ட விஷயங்களை எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டியது அந்த துறைகளில் ஆர்வம் இருப்பவர்களின் கடமை என்றே எண்ணுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  4. உங்களின் பதிவுகளை படிப்பவர்களில் நானும் ஒருவன்.

    ///....ஒரு கட்டத்தில் ஏன் இந்த தேவையில்லாத வேலை? எனது அலுவலக வேலைகள் செய்வதற்கும், குடும்ப கடமைகளுக்கு மட்டுமே நேரம் சரியாக உள்ளபோது வலைப்பூவில் எழுதத்தான் வேண்டுமா? இதனால் என்ன பயன்? என்ற உள்மனப்போராட்டம் ஒவ்வொரு நாளும் எழவே செய்தது, ஆனால் என்னையும் மீறி இந்த பதிவுகள் நான் கருவியாக உபயோகிக்கப்பட்டு எழுதப்படுவதாகவே உணர்ந்தேன்....////
    வலையுலகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.
    உங்களின் எண்ணத்தைப் போலவே எனக்கும் தோன்றியது.
    போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்.

    சித்தர்களின் ஆன்மீக கலைகள் எதுவும் அழியாமல் காத்து, அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

    பொதுவாக தாந்திரீக முறையானது தற்காலம் மறைந்து வருகின்றது. இக்கலை மறையக்கூடாது.
    ஸ்ரீ வித்தையின் தாந்திரீக முறை பற்றிய அறிய ஆவலாக உள்ளேன்.

    தொடருங்கள் தங்களின் சேவையை.
    அன்புடன்,
    பா.முருகையன், வடலூர்.
    www.siddharkal.blogspot.com

    ReplyDelete
  5. @ Nathimoolam
    @ நிகழ்காலத்தில்...
    @ Sankar Gurusamy
    @ அருட்சிவஞான சித்தர்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், மேலான ஆதரவிற்கும் நன்றி! அடுத்து வரும் நாட்களில் சித்த வித்யா விஞ்ஞானம் பாடங்களாக பதியப்படவுள்ளன, இன்று அவற்றிற்கான முன்னுரை பதியப்பட்டுள்ளது.

    அனைவரையும் குருநாதர் சரியான பாதையில் வழி நடத்துவாராக!

    ReplyDelete
  6. உங்களுடைய பதிவுகள் மிகுந்த தன்னடக்கத்துடனும், அதே நேரத்தில் மனத்தில் எழும் அனேக வினாக்களுக்குப் பதிலளிக்கும் வண்ணமும் அமைந்து வருகின்றன. சில பதிவுகளை அவசரமாக முடித்து விட்டதாகப்படும்.
    இந்த வலப்பூவிற்கு வர ஓரளவு மெய்ப்பொருள் காணும் எண்ணம் வேண்டும். உங்கள் பதிவுகளை என் போன்றோர் பெரிதும் மதிப்பதாலும், தொடர்ந்து எதிர்பார்பதாலும் எடுத்த பணி சிறந்து நடைபெருவதாக நம்பி மேலும் தொடர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. don't care any body disgrace your command. u do well job at this moment.god with us.your command almost help to meditation people not for all.

    ReplyDelete
  8. I would like to tell You don't feel hwho you are disgrace about your commend. you done well job at the moment. your command help to meditation line people not for all.Don't care of past command by society. Concentrate your present.God with us.

    ReplyDelete
  9. dont feel right lot almost god help to u. sattan will never help to human that why u get some bad command don't feel it.do your best work. I wish u all the best.

    ReplyDelete
  10. நண்பா எத்தனை பேர் பின்னூட்டம் இடுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை நண்பா ஒரே ஒருத்தருக்காவது அது பயன்பட்டால் அதுவே மிக பெரிய விஷயம் எனவே நீங்கள் தாராளமாக உங்கள் பணியை தொடருங்கள் நண்பா!வழமையான பின்னூட்டங்களை விட உண்மையான மாறுதல் ஒருவருக்கு நிகழ்ந்தாலும் நல்லதே! தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணி.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...