குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


எமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் ஸ்ரீ வித்தையின் மூலம் எளிமையான முறையில் தெய்வ சக்தியினை பெற்று ஆன்ம உயர்வும் எல்லா சௌபாக்கியங்களும் பெறும் ஸ்ரீ ஜோதியின் விளக்கமும் பங்கு பெறும் முறையும் இந்த இணைப்பில் காண்க


எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி: PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள

ஸ்ரீ வித்யா சாதனை படிவத்தினை நிரப்ப : படிவம்

மனிதனில் தேய்வ சக்தியை விழிப்பிக்கு காயத்ரி சித்த சாதனை : பயிற்சிக் குறிப்பினை தரவிறக்கி கொள்ள


ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


ங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்க இந்த இணைப்பில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.


நீங்கள் ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08.00 – 08.40 மணி அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும் பெற‌ : இந்த படிவத்தை நிரப்பி தொடர்பு கொள்ளவும்

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, November 01, 2011

காயத்ரியும் குண வளர்ச்சி பரிணாம உயர்வு


காயத்ரி சாதனை ஒருவனது சூஷ்ம உடலில் எப்படி செயல் புரிகிறது? குணவளர்ச்சி மூலம், காயத்ரி மந்திர அலைகள் ஒருவனில் குறித்த குணவளர்ச்சியினை உண்டு பண்ணக்கூடியவை. ஒருவனது தமோ, ரஜோ, சத்துவ குணங்களை படிப்படியாக உருமாற்றியமைத்து ஒருவனது பரிணமத்தினை அதிகரிக்கிறது. உதாரணமாக தமோ குணம் நிறைந்த ஒருவன் காயத்ரி சாதனையினை ஆரம்பிக்கின்றான் எனில் அவனில் ரஜோகுணம் படிப்படியாக வளர ஆரம்பிக்கும். சோம்பித்திரிந்தவன் உற்சாகமாக வேலையில் ஈடுபட ஆரம்பிப்பான். அதுபோல் ரஜோகுணம் மிகுந்தவனுக்கு சத்துவ குணம் வளர ஆரம்பிக்கும். இறைசாதனை, பொறுமை என்பன செய்யக்கூடிய பக்குவம் வளர ஆரம்பிக்கும். 

காயத்ரியின் மூன்று பாதங்களும் சரஸ்வதி,மஹா லட்சுமி, காளி ஆகிய மூன்று சக்திகளை குறிக்கும். சரஸ்வதி ஞான சக்தியாக யோகிகள், முனிவர்களில், தத்துவ ஞானிகளிடம் காணப்படும் ஆற்றலுக்கு மூலகாரணமாக விளங்க்குபவள், அதாவது இவர்கள் சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். அதுபோல் பெற்ற சமூக சீர்திருத்தவாதிகள், செல்வந்தர்கள், புத்தி ஜீவிகள் என்பவர்கள் மஹா லட்சுமியின் அருள் பெற்றவர்கள். பௌதீக விஞ்ஞானிகள் காளியின் அருள் பெற்றவர்கள், அதாவது பிரபஞ்ச சக்தியின் குறைத்த அலைவேக சக்தியினை தம்மில் கவர்ந்து செயற்படுத்த கூடிய வழிமுறையினை ஏதோ ஒரு முறையில் அறிந்தவர்கள். 

இந்த மூன்று அம்சங்களும் ஒருவருக்கு சரியாக அமையும் போதுதான் வாழ்வு பூரணமடைகிறது, அதாவது ஒருவருக்கு ஆன்ம வாழ்க்கை, புத்தி/மனோமய வாழ்க்கை, பௌதீக வாழ்க்கை ஆகிய மூன்றும் சரியாக வளர்ச்சியுறும் போதுதான அவனது பரிணாமம் உயர ஆரம்பிக்கிறது. இதனை ஒருவருடைய கர்மம், சூழல், தன்மை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற விகிதத்தில் வளர்ச்சியுற செய்யும் அரிய சாதனமே காயத்ரி சாதனை.  

அனைவரும் காயத்ரி சாதனை செய்வோம்!

2 comments:

  1. விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் அருமையாக ஒப்பீடு செய்திருக்கிறீர்கள்.. அருமை..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. Excellent news...please keep posting about Gayathri Manthiram.. Please continue your good work..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

எனது இளமைக்கால சாதனா நாட்கள்

காயத்ரி மந்திர புரச்சரண ஹோமம் குரு சேவையில் ஸ்ரீ வித்யா பூர்ணதீக்ஷா குருநாதருடன்